MyDugsiStart learning

Surah 'Abasa in Tamil: translation and audio

Surah 80 · عبس · He Frowned · 42 verses

Surah 'Abasa verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah 'Abasa word by word in English.

Verse 1

عَبَسَ وَتَوَلَّىٰٓ

Transliteration ʿabasa watawallā

Tamil (நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)

Verse 2

أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ

Transliteration an jāahu l-aʿmā

Tamil தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.

Verse 3

وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

Transliteration wamā yud'rīka laʿallahu yazzakkā

Tamil (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?

Verse 4

أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ

Transliteration aw yadhakkaru fatanfaʿahu l-dhik'rā

Tamil அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)

Verse 5

أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ

Transliteration ammā mani is'taghnā

Tamil (நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,

Verse 6

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

Transliteration fa-anta lahu taṣaddā

Tamil அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.

Verse 7

وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ

Transliteration wamā ʿalayka allā yazzakkā

Tamil அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!

Verse 8

وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ

Transliteration wa-ammā man jāaka yasʿā

Tamil எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,

Verse 9

وَهُوَ يَخْشَىٰ

Transliteration wahuwa yakhshā

Tamil அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.

Verse 10

فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ

Transliteration fa-anta ʿanhu talahhā

Tamil எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.

Verse 11

كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ

Transliteration kallā innahā tadhkiratun

Tamil அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.

Verse 12

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

Transliteration faman shāa dhakarahu

Tamil எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.

Verse 13

فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ

Transliteration fī ṣuḥufin mukarramatin

Tamil இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);

Verse 14

مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ

Transliteration marfūʿatin muṭahharatin

Tamil உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.

Verse 15

بِأَيْدِى سَفَرَةٍ

Transliteration bi-aydī safaratin

Tamil எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).

Verse 16

كِرَامٍۭ بَرَرَةٍ

Transliteration kirāmin bararatin

Tamil (அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.

Verse 17

قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ

Transliteration qutila l-insānu mā akfarahu

Tamil (பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.

Verse 18

مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ

Transliteration min ayyi shayin khalaqahu

Tamil எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?

Verse 19

مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

Transliteration min nuṭ'fatin khalaqahu faqaddarahu

Tamil ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.

Verse 20

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

Transliteration thumma l-sabīla yassarahu

Tamil பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.

Verse 21

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ

Transliteration thumma amātahu fa-aqbarahu

Tamil பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.

Verse 22

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

Transliteration thumma idhā shāa ansharahu

Tamil பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.

Verse 23

كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ

Transliteration kallā lammā yaqḍi mā amarahu

Tamil எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.

Verse 24

فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

Transliteration falyanẓuri l-insānu ilā ṭaʿāmihi

Tamil மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.

Verse 25

أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا

Transliteration annā ṣababnā l-māa ṣabban

Tamil நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,

Verse 26

ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا

Transliteration thumma shaqaqnā l-arḍa shaqqan

Tamil பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.

Verse 27

فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا

Transliteration fa-anbatnā fīhā ḥabban

Tamil பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.

Verse 28

وَعِنَبًا وَقَضْبًا

Transliteration waʿinaban waqaḍban

Tamil (இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,

Verse 29

وَزَيْتُونًا وَنَخْلًا

Transliteration wazaytūnan wanakhlan

Tamil ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,

Verse 30

وَحَدَآئِقَ غُلْبًا

Transliteration waḥadāiqa ghul'ban

Tamil கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,

Verse 31

وَفَـٰكِهَةً وَأَبًّا

Transliteration wafākihatan wa-abban

Tamil கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,

Verse 32

مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ

Transliteration matāʿan lakum wali-anʿāmikum

Tamil உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).

Verse 33

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

Transliteration fa-idhā jāati l-ṣākhatu

Tamil (உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,

Verse 34

يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ

Transliteration yawma yafirru l-maru min akhīhi

Tamil அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,

Verse 35

وَأُمِّهِۦ وَأَبِيهِ

Transliteration wa-ummihi wa-abīhi

Tamil தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,

Verse 36

وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ

Transliteration waṣāḥibatihi wabanīhi

Tamil தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).

Verse 37

لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

Transliteration likulli im'ri-in min'hum yawma-idhin shanun yugh'nīhi

Tamil அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.

Verse 38

وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ

Transliteration wujūhun yawma-idhin mus'firatun

Tamil எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,

Verse 39

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ

Transliteration ḍāḥikatun mus'tabshiratun

Tamil சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.

Verse 40

وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ

Transliteration wawujūhun yawma-idhin ʿalayhā ghabaratun

Tamil அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.

Verse 41

تَرْهَقُهَا قَتَرَةٌ

Transliteration tarhaquhā qataratun

Tamil கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).

Verse 42

أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ

Transliteration ulāika humu l-kafaratu l-fajaratu

Tamil இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.

Read Surah 'Abasa in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.