Surah Al-Muddaththir in Tamil: translation and audio
Surah 74 · المدثر · The Cloaked One · 56 verses
Surah Al-Muddaththir verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Muddaththir word by word in English.
Verse 1
يَـٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ
Transliteration yāayyuhā l-mudathiru
Tamil (நபியே! வஹ்யின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
Verse 2
قُمْ فَأَنذِرْ
Transliteration qum fa-andhir
Tamil நீர் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக;
Verse 3
وَرَبَّكَ فَكَبِّرْ
Transliteration warabbaka fakabbir
Tamil உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக;
Verse 4
وَثِيَابَكَ فَطَهِّرْ
Transliteration wathiyābaka faṭahhir
Tamil உமது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக்கொள்வீராக;
Verse 5
وَٱلرُّجْزَ فَٱهْجُرْ
Transliteration wal-ruj'za fa-uh'jur
Tamil அசுத்தங்களை வெறுத்துவிடுவீராக.
Verse 6
وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ
Transliteration walā tamnun tastakthiru
Tamil எவருக்கும் நீர் (நன்மை) உபகாரம் செய்து, (அதைவிட) அதிகமாக (அவனிடம்) பெற்றுக்கொள்ளக் கருதாதீர்.
Verse 7
وَلِرَبِّكَ فَٱصْبِرْ
Transliteration walirabbika fa-iṣ'bir
Tamil உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (சிரமங்களை) நீர் பொறுத்திருப்பீராக.
Verse 8
فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ
Transliteration fa-idhā nuqira fī l-nāqūri
Tamil எக்காளத்தில் (மகா ஊதுகுழாயில்) ஊதப்படும் சமயத்தில்,
Verse 9
فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
Transliteration fadhālika yawma-idhin yawmun ʿasīrun
Tamil அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும்.
Verse 10
عَلَى ٱلْكَـٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ
Transliteration ʿalā l-kāfirīna ghayru yasīrin
Tamil (அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதானதல்ல.
Verse 11
ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
Transliteration dharnī waman khalaqtu waḥīdan
Tamil (நபியே! நீர் சிபாரிசுக்கு வராது) என்னை(யும் அவனையும்) விட்டுவிடுவீராக. அவனை நான் தனியாகவே படைத்தேன்.
Verse 12
وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا
Transliteration wajaʿaltu lahu mālan mamdūdan
Tamil பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன்.
Verse 13
وَبَنِينَ شُهُودًا
Transliteration wabanīna shuhūdan
Tamil எந்நேரமும் அவனுடன் இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்).
Verse 14
وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا
Transliteration wamahhadttu lahu tamhīdan
Tamil அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன்.
Verse 15
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
Transliteration thumma yaṭmaʿu an azīda
Tamil பிறகு, நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கிறான்.
Verse 16
كَلَّآ ۖ إِنَّهُۥ كَانَ لِـَٔايَـٰتِنَا عَنِيدًا
Transliteration kallā innahu kāna liāyātinā ʿanīdan
Tamil அவ்வாறு ஆகக்கூடியதல்ல. ஏனென்றால், நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு எதிரியாக இருக்கிறான்.
Verse 17
سَأُرْهِقُهُۥ صَعُودًا
Transliteration sa-ur'hiquhu ṣaʿūdan
Tamil அதிசீக்கிரத்தில் அவனை ஒரு சிரமமான சிகரத்தில் ஏற்றிவிடுவேன்.
Verse 18
إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ
Transliteration innahu fakkara waqaddara
Tamil நிச்சயமாக அவன் (இந்த குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான்.
Verse 19
فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
Transliteration faqutila kayfa qaddara
Tamil அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்!
Verse 20
ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
Transliteration thumma qutila kayfa qaddara
Tamil பின்னும், அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்! (ஒன்றுமில்லை.)
Verse 21
ثُمَّ نَظَرَ
Transliteration thumma naẓara
Tamil பின்னும், (அதைப் பற்றிக்) கவனித்தான்.
Verse 22
ثُمَّ عَبَسَ وَبَسَرَ
Transliteration thumma ʿabasa wabasara
Tamil பின்னர், (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான்.
Verse 23
ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ
Transliteration thumma adbara wa-is'takbara
Tamil பின்னர், புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான்.
Verse 24
فَقَالَ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ
Transliteration faqāla in hādhā illā siḥ'run yu'tharu
Tamil ஆகவே, ‘‘இது மயக்கக்கூடிய சூனியமே தவிர வேறில்லை'' என்றும்
Verse 25
إِنْ هَـٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ
Transliteration in hādhā illā qawlu l-bashari
Tamil ‘‘இது மனிதர்களுடைய சொல்லே தவிர வேறில்லை'' என்றும் கூறினான்.
Verse 26
سَأُصْلِيهِ سَقَرَ
Transliteration sa-uṣ'līhi saqara
Tamil ஆகவே, நாம் அவனை ‘சகர்' நரகத்தில் எறிவோம்.
Verse 27
وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ
Transliteration wamā adrāka mā saqaru
Tamil (நபியே!) அந்த ‘சகர்' நரகம் என்னவென்று நீர் அறிவீரா?
Verse 28
لَا تُبْقِى وَلَا تَذَرُ
Transliteration lā tub'qī walā tadharu
Tamil அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது.
Verse 29
لَوَّاحَةٌ لِّلْبَشَرِ
Transliteration lawwāḥatun lil'bashari
Tamil அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும்.
Verse 30
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
Transliteration ʿalayhā tis'ʿata ʿashara
Tamil (அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்.
Verse 31
وَمَا جَعَلْنَآ أَصْحَـٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَـٰٓئِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَـٰنًا ۙ وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ وَٱلْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَـٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَـٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ
Transliteration wamā jaʿalnā aṣḥāba l-nāri illā malāikatan wamā jaʿalnā ʿiddatahum illā fit'natan lilladhīna kafarū liyastayqina alladhīna ūtū l-kitāba wayazdāda alladhīna āmanū īmānan walā yartāba alladhīna ūtū l-kitāba wal-mu'minūna waliyaqūla alladhīna fī qulūbihim maraḍun wal-kāfirūna mādhā arāda l-lahu bihādhā mathalan kadhālika yuḍillu l-lahu man yashāu wayahdī man yashāu wamā yaʿlamu junūda rabbika illā huwa wamā hiya illā dhik'rā lil'bashari
Tamil நரகத்தின் காவலாளிகளாக வானவர்களையே தவிர (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு)இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நாம் ஏற்படுத்தினோம். வேதத்தையுடையவர்கள் இதை உறுதியாக நம்பவும். நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது அதிகப்படுத்தும். வேதத்தை உடையவர்களும், நம்பிக்கையாளர்களும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்கவே வேண்டாம். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும், நிராகரிப்பவர்களும் இந்த உதாரணத்தைக் கொண்டு, அல்லாஹ் என்ன அறிவிக்க நாடினான்? என்று கூறுவார்கள். (நபியே!) இவ்வாறே, அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். (நபியே!) உமது இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள். இவை மனிதர்களுக்கு நல்லுபதேசங்களே தவிர வேறில்லை.
Verse 32
كَلَّا وَٱلْقَمَرِ
Transliteration kallā wal-qamari
Tamil அவ்வாறு அல்ல! நிச்சயமாக சந்திரன் மீது சத்தியமாக!
Verse 33
وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ
Transliteration wa-al-layli idh adbara
Tamil செல்கின்ற இரவின் மீது சத்தியமாக!
Verse 34
وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ
Transliteration wal-ṣub'ḥi idhā asfara
Tamil வெளிச்சமாகும் விடியற்காலை மீது சத்தியமாக!
Verse 35
إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ
Transliteration innahā la-iḥ'dā l-kubari
Tamil நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும்.
Verse 36
نَذِيرًا لِّلْبَشَرِ
Transliteration nadhīran lil'bashari
Tamil அது, மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது.
Verse 37
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ
Transliteration liman shāa minkum an yataqaddama aw yata-akhara
Tamil உங்களில் எவன் (அதனளவில்) முந்திச் செல்லவோ அல்லது (அதை விட்டும்) விலகிக் கொள்ளவோ விரும்புகிறானோ அவன் அவ்வாறு செய்யவும்.
Verse 38
كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
Transliteration kullu nafsin bimā kasabat rahīnatun
Tamil ஒவ்வொரு மனிதனும், தான் செய்யும் செயலுக்கே பிணையாளியாக இருக்கிறான்.
Verse 39
إِلَّآ أَصْحَـٰبَ ٱلْيَمِينِ
Transliteration illā aṣḥāba l-yamīni
Tamil ஆயினும், (எவர்களுடைய செயலேடு வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள்) வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
Verse 40
فِى جَنَّـٰتٍ يَتَسَآءَلُونَ
Transliteration fī jannātin yatasāalūna
Tamil 42. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.
Verse 41
عَنِ ٱلْمُجْرِمِينَ
Transliteration ʿani l-muj'rimīna
Tamil 42. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.
Verse 42
مَا سَلَكَكُمْ فِى سَقَرَ
Transliteration mā salakakum fī saqara
Tamil 42. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.
Verse 43
قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ
Transliteration qālū lam naku mina l-muṣalīna
Tamil அதற்கவர்கள் கூறுவார்கள்: ‘‘நாங்கள் தொழவில்லை.
Verse 44
وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ
Transliteration walam naku nuṭ'ʿimu l-mis'kīna
Tamil நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை.
Verse 45
وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ
Transliteration wakunnā nakhūḍu maʿa l-khāiḍīna
Tamil வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்.
Verse 46
وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ
Transliteration wakunnā nukadhibu biyawmi l-dīni
Tamil கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம்.
Verse 47
حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ
Transliteration ḥattā atānā l-yaqīnu
Tamil (நாங்கள் மரணித்து) இதை உறுதியாகக் காணும் வரை (இவ்வாறே இருந்தோம்). ''(இவ்வாறு ‘சகர்' நரகவாசிகள் கூறுவார்கள்.)
Verse 48
فَمَا تَنفَعُهُمْ شَفَـٰعَةُ ٱلشَّـٰفِعِينَ
Transliteration famā tanfaʿuhum shafāʿatu l-shāfiʿīna
Tamil ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்து பேசும் எவருடைய சிபாரிசும், அன்றைய தினம் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காது.
Verse 49
فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ
Transliteration famā lahum ʿani l-tadhkirati muʿ'riḍīna
Tamil அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர்.
Verse 50
كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ
Transliteration ka-annahum ḥumurun mus'tanfiratun
Tamil வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப்போல் அவர்கள் இருக்கின்றனர்!
Verse 51
فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ
Transliteration farrat min qaswaratin
Tamil அதுவும், சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்).
Verse 52
بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً
Transliteration bal yurīdu kullu im'ri-in min'hum an yu'tā ṣuḥufan munasharatan
Tamil (இதுமட்டுமா?) அவர்களில் ஒவ்வொருவனும், விரித்து ஓதப்படும் ஒரு வேதம் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறான்.
Verse 53
كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلْـَٔاخِرَةَ
Transliteration kallā bal lā yakhāfūna l-ākhirata
Tamil அவ்வாறு ஒருகாலும் நடக்கப்போவதில்லை. மாறாக இவர்கள் மறுமையைப் பற்றி பயப்படுவதேயில்லை.
Verse 54
كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ
Transliteration kallā innahu tadhkiratun
Tamil அவ்வாறு ஒருகாலும் நடக்கப் போவதில்லை. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமே ஆகும்.
Verse 55
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
Transliteration faman shāa dhakarahu
Tamil (நல்லுபதேசம் பெற) விரும்பியவன் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.
Verse 56
وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ
Transliteration wamā yadhkurūna illā an yashāa l-lahu huwa ahlu l-taqwā wa-ahlu l-maghfirati
Tamil அல்லாஹ் நாடினால் தவிர, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது.(படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன்.
Read Surah Al-Muddaththir in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.