MyDugsiStart learning

Surah Al-Mursalat in Tamil: translation and audio

Surah 77 · المرسلات · The Emissaries · 50 verses

Surah Al-Mursalat verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Mursalat word by word in English.

Verse 1

وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًا

Transliteration wal-mur'salāti ʿur'fan

Tamil நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!

Verse 2

فَٱلْعَـٰصِفَـٰتِ عَصْفًا

Transliteration fal-ʿāṣifāti ʿaṣfan

Tamil இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!

Verse 3

وَٱلنَّـٰشِرَٰتِ نَشْرًا

Transliteration wal-nāshirāti nashran

Tamil (மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக!

Verse 4

فَٱلْفَـٰرِقَـٰتِ فَرْقًا

Transliteration fal-fāriqāti farqan

Tamil (உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!

Verse 5

فَٱلْمُلْقِيَـٰتِ ذِكْرًا

Transliteration fal-mul'qiyāti dhik'ran

Tamil 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

Verse 6

عُذْرًا أَوْ نُذْرًا

Transliteration ʿudh'ran aw nudh'ran

Tamil 6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!

Verse 7

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ

Transliteration innamā tūʿadūna lawāqiʿun

Tamil நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.

Verse 8

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ

Transliteration fa-idhā l-nujūmu ṭumisat

Tamil அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.

Verse 9

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ

Transliteration wa-idhā l-samāu furijat

Tamil அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.

Verse 10

وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ

Transliteration wa-idhā l-jibālu nusifat

Tamil அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.

Verse 11

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ

Transliteration wa-idhā l-rusulu uqqitat

Tamil அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.

Verse 12

لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ

Transliteration li-ayyi yawmin ujjilat

Tamil (இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?

Verse 13

لِيَوْمِ ٱلْفَصْلِ

Transliteration liyawmi l-faṣli

Tamil தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்!

Verse 14

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ

Transliteration wamā adrāka mā yawmu l-faṣli

Tamil (நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா?.

Verse 15

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Transliteration waylun yawma-idhin lil'mukadhibīna

Tamil (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

Verse 16

أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ

Transliteration alam nuh'liki l-awalīna

Tamil (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?

Verse 17

ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ

Transliteration thumma nut'biʿuhumu l-ākhirīna

Tamil அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,

Verse 18

كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ

Transliteration kadhālika nafʿalu bil-muj'rimīna

Tamil (அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.

Verse 19

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Transliteration waylun yawma-idhin lil'mukadhibīna

Tamil ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 20

أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ

Transliteration alam nakhluqkkum min māin mahīnin

Tamil ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?

Verse 21

فَجَعَلْنَـٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ

Transliteration fajaʿalnāhu fī qarārin makīnin

Tamil 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,

Verse 22

إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ

Transliteration ilā qadarin maʿlūmin

Tamil 22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,

Verse 23

فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَـٰدِرُونَ

Transliteration faqadarnā faniʿ'ma l-qādirūna

Tamil பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.

Verse 24

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Transliteration waylun yawma-idhin lil'mukadhibīna

Tamil ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 25

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا

Transliteration alam najʿali l-arḍa kifātan

Tamil 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?

Verse 26

أَحْيَآءً وَأَمْوَٰتًا

Transliteration aḥyāan wa-amwātan

Tamil 26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?

Verse 27

وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَـٰمِخَـٰتٍ وَأَسْقَيْنَـٰكُم مَّآءً فُرَاتًا

Transliteration wajaʿalnā fīhā rawāsiya shāmikhātin wa-asqaynākum māan furātan

Tamil அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்.

Verse 28

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Transliteration waylun yawma-idhin lil'mukadhibīna

Tamil (நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 29

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

Transliteration inṭaliqū ilā mā kuntum bihi tukadhibūna

Tamil ‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்.

Verse 30

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَـٰثِ شُعَبٍ

Transliteration inṭaliqū ilā ẓillin dhī thalāthi shuʿabin

Tamil மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்).

Verse 31

لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ

Transliteration lā ẓalīlin walā yugh'nī mina l-lahabi

Tamil அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.

Verse 32

إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ

Transliteration innahā tarmī bishararin kal-qaṣri

Tamil (எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்.

Verse 33

كَأَنَّهُۥ جِمَـٰلَتٌ صُفْرٌ

Transliteration ka-annahu jimālatun ṣuf'run

Tamil அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.

Verse 34

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Transliteration waylun yawma-idhin lil'mukadhibīna

Tamil (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 35

هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ

Transliteration hādhā yawmu lā yanṭiqūna

Tamil இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.

Verse 36

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ

Transliteration walā yu'dhanu lahum fayaʿtadhirūna

Tamil மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.

Verse 37

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Transliteration waylun yawma-idhin lil'mukadhibīna

Tamil (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 38

هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَـٰكُمْ وَٱلْأَوَّلِينَ

Transliteration hādhā yawmu l-faṣli jamaʿnākum wal-awalīna

Tamil இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.

Verse 39

فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ

Transliteration fa-in kāna lakum kaydun fakīdūni

Tamil ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்).

Verse 40

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Transliteration waylun yawma-idhin lil'mukadhibīna

Tamil (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

Verse 41

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَـٰلٍ وَعُيُونٍ

Transliteration inna l-mutaqīna fī ẓilālin waʿuyūnin

Tamil நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.

Verse 42

وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ

Transliteration wafawākiha mimmā yashtahūna

Tamil அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.

Verse 43

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

Transliteration kulū wa-ish'rabū hanīan bimā kuntum taʿmalūna

Tamil (அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்).

Verse 44

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Transliteration innā kadhālika najzī l-muḥ'sinīna

Tamil இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.

Verse 45

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Transliteration waylun yawma-idhin lil'mukadhibīna

Tamil (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 46

كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ

Transliteration kulū watamattaʿū qalīlan innakum muj'rimūna

Tamil (இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.

Verse 47

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Transliteration waylun yawma-idhin lil'mukadhibīna

Tamil (இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 48

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ

Transliteration wa-idhā qīla lahumu ir'kaʿū lā yarkaʿūna

Tamil அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.

Verse 49

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Transliteration waylun yawma-idhin lil'mukadhibīna

Tamil (அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!

Verse 50

فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ

Transliteration fabi-ayyi ḥadīthin baʿdahu yu'minūna

Tamil இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!

Read Surah Al-Mursalat in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.