MyDugsiStart learning

Surah At-Takwir in Tamil: translation and audio

Surah 81 · التكوير · The Overthrowing · 29 verses

Surah At-Takwir verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah At-Takwir word by word in English.

Verse 1

إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ

Transliteration idhā l-shamsu kuwwirat

Tamil (உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது,

Verse 2

وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ

Transliteration wa-idhā l-nujūmu inkadarat

Tamil நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,

Verse 3

وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ

Transliteration wa-idhā l-jibālu suyyirat

Tamil மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது,

Verse 4

وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ

Transliteration wa-idhā l-ʿishāru ʿuṭṭilat

Tamil (இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது.

Verse 5

وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ

Transliteration wa-idhā l-wuḥūshu ḥushirat

Tamil காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது.

Verse 6

وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ

Transliteration wa-idhā l-biḥāru sujjirat

Tamil கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)

Verse 7

وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ

Transliteration wa-idhā l-nufūsu zuwwijat

Tamil அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.

Verse 8

وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ

Transliteration wa-idhā l-mawūdatu su-ilat

Tamil அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,

Verse 9

بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ

Transliteration bi-ayyi dhanbin qutilat

Tamil ‘‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று.

Verse 10

وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ

Transliteration wa-idhā l-ṣuḥufu nushirat

Tamil அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும்.

Verse 11

وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ

Transliteration wa-idhā l-samāu kushiṭat

Tamil அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.

Verse 12

وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ

Transliteration wa-idhā l-jaḥīmu suʿʿirat

Tamil அப்போது நரகம் எரிக்கப்படும்.

Verse 13

وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ

Transliteration wa-idhā l-janatu uz'lifat

Tamil அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும்.

Verse 14

عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ

Transliteration ʿalimat nafsun mā aḥḍarat

Tamil (அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்.

Verse 15

فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ

Transliteration falā uq'simu bil-khunasi

Tamil (மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!

Verse 16

ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ

Transliteration al-jawāri l-kunasi

Tamil தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!

Verse 17

وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ

Transliteration wa-al-layli idhā ʿasʿasa

Tamil செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!

Verse 18

وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ

Transliteration wal-ṣub'ḥi idhā tanaffasa

Tamil உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக!

Verse 19

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

Transliteration innahu laqawlu rasūlin karīmin

Tamil நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்.

Verse 20

ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ

Transliteration dhī quwwatin ʿinda dhī l-ʿarshi makīnin

Tamil அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.

Verse 21

مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ

Transliteration muṭāʿin thamma amīnin

Tamil (அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர்.

Verse 22

وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ

Transliteration wamā ṣāḥibukum bimajnūnin

Tamil (மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல.

Verse 23

وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ

Transliteration walaqad raāhu bil-ufuqi l-mubīni

Tamil நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார்.

Verse 24

وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ

Transliteration wamā huwa ʿalā l-ghaybi biḍanīnin

Tamil (அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல.

Verse 25

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ

Transliteration wamā huwa biqawli shayṭānin rajīmin

Tamil இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல.

Verse 26

فَأَيْنَ تَذْهَبُونَ

Transliteration fa-ayna tadhhabūna

Tamil ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்?

Verse 27

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ

Transliteration in huwa illā dhik'run lil'ʿālamīna

Tamil இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.

Verse 28

لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ

Transliteration liman shāa minkum an yastaqīma

Tamil உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்).

Verse 29

وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ

Transliteration wamā tashāūna illā an yashāa l-lahu rabbu l-ʿālamīna

Tamil எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்.

Read Surah At-Takwir in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.