Surah An-Naba in Tamil: translation and audio
Surah 78 · النبإ · The Tidings · 40 verses
Surah An-Naba verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah An-Naba word by word in English.
Verse 1
عَمَّ يَتَسَآءَلُونَ
Transliteration ʿamma yatasāalūna
Tamil (நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டுக் கொள்கின்றனர்?
Verse 2
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
Transliteration ʿani l-naba-i l-ʿaẓīmi
Tamil மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவா)!
Verse 3
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
Transliteration alladhī hum fīhi mukh'talifūna
Tamil அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) முரணான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.
Verse 4
كَلَّا سَيَعْلَمُونَ
Transliteration kallā sayaʿlamūna
Tamil (தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.
Verse 5
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
Transliteration thumma kallā sayaʿlamūna
Tamil பின்னர், அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்து கொள்வார்கள்.
Verse 6
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا
Transliteration alam najʿali l-arḍa mihādan
Tamil (இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்க வில்லையா?
Verse 7
وَٱلْجِبَالَ أَوْتَادًا
Transliteration wal-jibāla awtādan
Tamil இன்னும், (அதில் நாம்) மலைகளை முளைகளாக (நிறுத்தவில்லையா?)
Verse 8
وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا
Transliteration wakhalaqnākum azwājan
Tamil ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கிறோம்.
Verse 9
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
Transliteration wajaʿalnā nawmakum subātan
Tamil நாமே உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.
Verse 10
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا
Transliteration wajaʿalnā al-layla libāsan
Tamil நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்.
Verse 11
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا
Transliteration wajaʿalnā l-nahāra maʿāshan
Tamil நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்.
Verse 12
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
Transliteration wabanaynā fawqakum sabʿan shidādan
Tamil உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்.
Verse 13
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
Transliteration wajaʿalnā sirājan wahhājan
Tamil அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம்.
Verse 14
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
Transliteration wa-anzalnā mina l-muʿ'ṣirāti māan thajjājan
Tamil கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம்.
Verse 15
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا
Transliteration linukh'rija bihi ḥabban wanabātan
Tamil அதைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கிறோம்.
Verse 16
وَجَنَّـٰتٍ أَلْفَافًا
Transliteration wajannātin alfāfan
Tamil இன்னும், கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கிறோம்).
Verse 17
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا
Transliteration inna yawma l-faṣli kāna mīqātan
Tamil நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.
Verse 18
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
Transliteration yawma yunfakhu fī l-ṣūri fatatūna afwājan
Tamil (அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.
Verse 19
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا
Transliteration wafutiḥati l-samāu fakānat abwāban
Tamil வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.
Verse 20
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
Transliteration wasuyyirati l-jibālu fakānat sarāban
Tamil மலைகள் (தம் இடத்திலிருந்து) பெயர்க்கப்பட்டு தூள்தூளாகி (பறந்து) விடும்.
Verse 21
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
Transliteration inna jahannama kānat mir'ṣādan
Tamil நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
Verse 22
لِّلطَّـٰغِينَ مَـَٔابًا
Transliteration lilṭṭāghīna maāban
Tamil (பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே.
Verse 23
لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا
Transliteration lābithīna fīhā aḥqāban
Tamil அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.
Verse 24
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
Transliteration lā yadhūqūna fīhā bardan walā sharāban
Tamil 25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
Verse 25
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
Transliteration illā ḥamīman waghassāqan
Tamil 25. அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
Verse 26
جَزَآءً وِفَاقًا
Transliteration jazāan wifāqan
Tamil இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்.
Verse 27
إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا
Transliteration innahum kānū lā yarjūna ḥisāban
Tamil ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.
Verse 28
وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا
Transliteration wakadhabū biāyātinā kidhāban
Tamil அவர்கள் நம் வசனங்களை மிக அலட்சியமாகப் பொய்ப்பித்தார்கள்.
Verse 29
وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا
Transliteration wakulla shayin aḥṣaynāhu kitāban
Tamil எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம்.
Verse 30
فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
Transliteration fadhūqū falan nazīdakum illā ʿadhāban
Tamil ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதைச்) சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறுவோம்).
Verse 31
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
Transliteration inna lil'muttaqīna mafāzan
Tamil (ஆயினும்), இறையச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சொர்க்கம் என்னும்) இடம் உண்டு.
Verse 32
حَدَآئِقَ وَأَعْنَـٰبًا
Transliteration ḥadāiqa wa-aʿnāban
Tamil (அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.
Verse 33
وَكَوَاعِبَ أَتْرَابًا
Transliteration wakawāʿiba atrāban
Tamil (மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்,
Verse 34
وَكَأْسًا دِهَاقًا
Transliteration wakasan dihāqan
Tamil (பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).
Verse 35
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا
Transliteration lā yasmaʿūna fīhā laghwan walā kidhāban
Tamil அங்கு அவர்கள் வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.
Verse 36
جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا
Transliteration jazāan min rabbika ʿaṭāan ḥisāban
Tamil (இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்.
Verse 37
رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
Transliteration rabbi l-samāwāti wal-arḍi wamā baynahumā l-raḥmāni lā yamlikūna min'hu khiṭāban
Tamil அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்தி பெறமாட்டார்கள்.
Verse 38
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا
Transliteration yawma yaqūmu l-rūḥu wal-malāikatu ṣaffan lā yatakallamūna illā man adhina lahu l-raḥmānu waqāla ṣawāban
Tamil ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.
Verse 39
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
Transliteration dhālika l-yawmu l-ḥaqu faman shāa ittakhadha ilā rabbihi maāban
Tamil இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும்.
Verse 40
إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
Transliteration innā andharnākum ʿadhāban qarīban yawma yanẓuru l-maru mā qaddamat yadāhu wayaqūlu l-kāfiru yālaytanī kuntu turāban
Tamil சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கிறோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்!
Read Surah An-Naba in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.