MyDugsiStart learning

Surah Al-Qiyamah in Tamil: translation and audio

Surah 75 · القيامة · The Resurrection · 40 verses

Surah Al-Qiyamah verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Qiyamah word by word in English.

Verse 1

لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ

Transliteration lā uq'simu biyawmi l-qiyāmati

Tamil மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.

Verse 2

وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ

Transliteration walā uq'simu bil-nafsi l-lawāmati

Tamil (குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன்.

Verse 3

أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ

Transliteration ayaḥsabu l-insānu allan najmaʿa ʿiẓāmahu

Tamil (இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறானா?

Verse 4

بَلَىٰ قَـٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ

Transliteration balā qādirīna ʿalā an nusawwiya banānahu

Tamil அவ்வாறல்ல! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம்.

Verse 5

بَلْ يُرِيدُ ٱلْإِنسَـٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ

Transliteration bal yurīdu l-insānu liyafjura amāmahu

Tamil எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதுகிறான்.

Verse 6

يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَـٰمَةِ

Transliteration yasalu ayyāna yawmu l-qiyāmati

Tamil (பரிகாசமாக) ‘‘மறுமை நாள் எப்பொழுது வரும்'' என்று கேட்கிறான்.

Verse 7

فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ

Transliteration fa-idhā bariqa l-baṣaru

Tamil அது (வரும்) சமயம் பார்வை தட்டழிந்து விடும்,

Verse 8

وَخَسَفَ ٱلْقَمَرُ

Transliteration wakhasafa l-qamaru

Tamil சந்திரனின் பிரகாசம் மங்கி விடும்,

Verse 9

وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ

Transliteration wajumiʿa l-shamsu wal-qamaru

Tamil (அதுநாள் வரை பிரிந்திருந்த) சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும்(போது),

Verse 10

يَقُولُ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ

Transliteration yaqūlu l-insānu yawma-idhin ayna l-mafaru

Tamil அந்நாளில் (தப்பித்துக்கொள்ள) “எங்கு ஓடுவது'' என்று மனிதன் கேட்பான்.

Verse 11

كَلَّا لَا وَزَرَ

Transliteration kallā lā wazara

Tamil ‘‘முடியவே முடியாது. தப்ப இடமில்லை'' (என்று கூறப்படும்).

Verse 12

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ

Transliteration ilā rabbika yawma-idhin l-mus'taqaru

Tamil (நபியே!) அந்நாளில் உமது இறைவனிடமே (அனைவரும்) நிற்க வேண்டியதிருக்கிறது.

Verse 13

يُنَبَّؤُا۟ ٱلْإِنسَـٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

Transliteration yunabba-u l-insānu yawma-idhin bimā qaddama wa-akhara

Tamil மனிதன், முன் பின் செய்த பாவங்களைப் பற்றி அந்நாளில் அவனுக்கு அறிவுறுத்தப்படும்.

Verse 14

بَلِ ٱلْإِنسَـٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ

Transliteration bali l-insānu ʿalā nafsihi baṣīratun

Tamil தவிர, ஒவ்வொரு மனிதனும் தன் நிலைமையைத் தானாகவும் அறிந்துகொள்வான்.

Verse 15

وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ

Transliteration walaw alqā maʿādhīrahu

Tamil ஆகவே, அவன் (தன் குற்றங்களுக்கு) எவ்வளவு புகல்களைக் கூறிய போதிலும் (அது அங்கீகரிக்கப்படாது).

Verse 16

لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ

Transliteration lā tuḥarrik bihi lisānaka litaʿjala bihi

Tamil (நபியே! வஹ்யி மூலம் ஜிப்ரயீல் ஓதிக்காண்பிக்கும் வசனங்கள் தவறி விடுமோ என்று பயந்து, அவர் ஓதி முடிப்பதற்கு முன்னர்) நீர் அவசரப்பட்டு அதை ஓத உமது நாவை அசைக்காதீர்.

Verse 17

إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ

Transliteration inna ʿalaynā jamʿahu waqur'ānahu

Tamil ஏனென்றால், அதை ஒன்று சேர்த்து (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக நம்மீதுள்ள கடமையாகும்.

Verse 18

فَإِذَا قَرَأْنَـٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ

Transliteration fa-idhā qaranāhu fa-ittabiʿ qur'ānahu

Tamil ஆகவே, (ஜிப்ரயீல் மூலம்) அதை நாம் (உமக்கு) ஓதிக்காண்பித்தால், (அவர் ஓதி முடித்த பின்னர்) அவ்வாறே அதை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக.

Verse 19

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ

Transliteration thumma inna ʿalaynā bayānahu

Tamil பின்னர், அதை விவரித்துக் கூறுவதும் நம்மீதுள்ள கடமையாகும்.

Verse 20

كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ

Transliteration kallā bal tuḥibbūna l-ʿājilata

Tamil எனினும் (மனிதர்களே!) நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையைத்தான் விரும்புகிறீர்கள்.

Verse 21

وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ

Transliteration watadharūna l-ākhirata

Tamil (ஆதலால்தான், இம்மையை விரும்பி) மறுமையை நீங்கள் விட்டு விடுகிறீர்கள்.

Verse 22

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ

Transliteration wujūhun yawma-idhin nāḍiratun

Tamil அந்நாளில் சில(ருடைய) முகங்கள் மிக்க ஒளிவுடன் மகிழ்ச்சியுடையவையாக இருக்கும்.

Verse 23

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ

Transliteration ilā rabbihā nāẓiratun

Tamil (அவை) தங்கள் இறைவனை நோக்கிய வண்ணமாக இருக்கும்.

Verse 24

وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ

Transliteration wawujūhun yawma-idhin bāsiratun

Tamil வேறு சில(ருடைய) முகங்களோ அந்நாளில் (துக்கத்தால்) வாடியவையாக இருக்கும்.

Verse 25

تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

Transliteration taẓunnu an yuf'ʿala bihā fāqiratun

Tamil (பாவச் சுமையின் காரணமாகத்) தங்கள் இடுப்பு முறிந்துவிடுமோ என்று எண்ணி(ப் பயந்து) கொண்டிருப்பார்கள்.

Verse 26

كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ

Transliteration kallā idhā balaghati l-tarāqiya

Tamil எனினும், (எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால்,

Verse 27

وَقِيلَ مَنْ ۜ رَاقٍ

Transliteration waqīla man rāqin

Tamil (அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கிறான்?) என்று கேட்கின்றனர்.

Verse 28

وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ

Transliteration waẓanna annahu l-firāqu

Tamil எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான்.

Verse 29

وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

Transliteration wal-tafati l-sāqu bil-sāqi

Tamil (அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக் கொள்ளும்.

Verse 30

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ

Transliteration ilā rabbika yawma-idhin l-masāqu

Tamil அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உமது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகிறான்.

Verse 31

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

Transliteration falā ṣaddaqa walā ṣallā

Tamil (அவனோ அல்லாஹ்வுடைய வசனங்களை) உண்மையாக்கவுமில்லை; தொழவுமில்லை.

Verse 32

وَلَـٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

Transliteration walākin kadhaba watawallā

Tamil ஆயினும் (அவன் அவற்றைப்) பொய்யாக்கி வைத்து(த் தொழாதும்) விலகிக்கொண்டான்.

Verse 33

ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ

Transliteration thumma dhahaba ilā ahlihi yatamaṭṭā

Tamil பின்னர், கர்வம்கொண்டு தன் குடும்பத்துடன் (தன் வீட்டிற்குச்) சென்று விட்டான்.

Verse 34

أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

Transliteration awlā laka fa-awlā

Tamil (மனிதனே!) உனக்குக் கேடுதான்; மேலும் கேடுதான்!

Verse 35

ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ

Transliteration thumma awlā laka fa-awlā

Tamil பின்னர், உனக்குக் கேடுதான்! மேலும் கேடுதான் (உனக்கு)!

Verse 36

أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَن يُتْرَكَ سُدًى

Transliteration ayaḥsabu l-insānu an yut'raka sudan

Tamil (ஒரு கேள்வியும் தம்மிடம் கேட்காது) சும்மா விட்டு விடப்படுவோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டானா?

Verse 37

أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ

Transliteration alam yaku nuṭ'fatan min maniyyin yum'nā

Tamil அவன் (கர்ப்பத்தில்) செலுத்தப்பட்ட ஓர் இந்திரியத் துளியாக இருக்க வில்லையா?

Verse 38

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ

Transliteration thumma kāna ʿalaqatan fakhalaqa fasawwā

Tamil (இந்திரியமாக இருந்த) பின்னர், அவன் கருவாக மாறினான் (அவனை) அல்லாஹ்தான் படைத்து முழுமையான மனிதனாக ஆக்கிவைத்தான்.

Verse 39

فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

Transliteration fajaʿala min'hu l-zawjayni l-dhakara wal-unthā

Tamil ஆண், பெண் ஜோடிகளையும் அதிலிருந்து உற்பத்தி செய்கிறான்.

Verse 40

أَلَيْسَ ذَٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ

Transliteration alaysa dhālika biqādirin ʿalā an yuḥ'yiya l-mawtā

Tamil (இவற்றையெல்லாம் செய்த) அவன் மரணித்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவனாக இல்லையா?

Read Surah Al-Qiyamah in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.