Surah Ash-Shu'ara in Tamil: translation and audio
Surah 26 · الشعراء · The Poets · 227 verses
Surah Ash-Shu'ara verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Ash-Shu'ara word by word in English.
Verse 1
طسٓمٓ
Transliteration tta-seen-meem
Tamil 2. தா ஸீம் மீம். (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
Verse 2
تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ ٱلْمُبِينِ
Transliteration til'ka āyātu l-kitābi l-mubīni
Tamil 2. தா ஸீம் மீம். (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
Verse 3
لَعَلَّكَ بَـٰخِعٌ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا۟ مُؤْمِنِينَ
Transliteration laʿallaka bākhiʿun nafsaka allā yakūnū mu'minīna
Tamil (நபியே!) அவர்கள் (உம்மை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர் போலும்!
Verse 4
إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةً فَظَلَّتْ أَعْنَـٰقُهُمْ لَهَا خَـٰضِعِينَ
Transliteration in nasha nunazzil ʿalayhim mina l-samāi āyatan faẓallat aʿnāquhum lahā khāḍiʿīna
Tamil நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.
Verse 5
وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّنَ ٱلرَّحْمَـٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا۟ عَنْهُ مُعْرِضِينَ
Transliteration wamā yatīhim min dhik'rin mina l-raḥmāni muḥ'dathin illā kānū ʿanhu muʿ'riḍīna
Tamil ரஹ்மானிடமிருந்து புதிதான ஒரு நல்லுபதேசம் வரும்போதெல்லாம் அதை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
Verse 6
فَقَدْ كَذَّبُوا۟ فَسَيَأْتِيهِمْ أَنۢبَـٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
Transliteration faqad kadhabū fasayatīhim anbāu mā kānū bihi yastahziūna
Tamil (ஆகவே, இதையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதைப் (பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும்.
Verse 7
أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلْأَرْضِ كَمْ أَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ
Transliteration awalam yaraw ilā l-arḍi kam anbatnā fīhā min kulli zawjin karīmin
Tamil அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான எத்தனையோ புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கிறோம்.
Verse 8
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Tamil நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
Verse 9
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Tamil (நபியே!) உமது இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவன்,மகா கருணையுடையவன் ஆவான்.
Verse 10
وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئْتِ ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ
Transliteration wa-idh nādā rabbuka mūsā ani i'ti l-qawma l-ẓālimīna
Tamil (நபியே!) உமது இறைவன் மூஸாவை அழைத்து ‘‘ நீர் அநியாயக்காரர்களான ஃபிர்அவ்னுடைய மக்களிடம் செல்வீராக'' எனக் கூறியதை நீர் கவனித்துப் பார்ப்பீராக.
Verse 11
قَوْمَ فِرْعَوْنَ ۚ أَلَا يَتَّقُونَ
Transliteration qawma fir'ʿawna alā yattaqūna
Tamil ‘‘ அவர்கள் (எனக்குப்) பயப்பட மாட்டார்களா?'' (என்று உமது இறைவன் கேட்டான்.)
Verse 12
قَالَ رَبِّ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
Transliteration qāla rabbi innī akhāfu an yukadhibūni
Tamil அதற்கு அவர் ‘‘ என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' என்றார்.
Verse 13
وَيَضِيقُ صَدْرِى وَلَا يَنطَلِقُ لِسَانِى فَأَرْسِلْ إِلَىٰ هَـٰرُونَ
Transliteration wayaḍīqu ṣadrī walā yanṭaliqu lisānī fa-arsil ilā hārūna
Tamil இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேசமுடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக!
Verse 14
وَلَهُمْ عَلَىَّ ذَنۢبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ
Transliteration walahum ʿalayya dhanbun fa-akhāfu an yaqtulūni
Tamil மேலும், என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' (என்றும் கூறினார்).
Verse 15
قَالَ كَلَّا ۖ فَٱذْهَبَا بِـَٔايَـٰتِنَآ ۖ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ
Transliteration qāla kallā fa-idh'habā biāyātinā innā maʿakum mus'tamiʿūna
Tamil அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன்.
Verse 16
فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration fatiyā fir'ʿawna faqūlā innā rasūlu rabbi l-ʿālamīna
Tamil ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, ‘‘ நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனின் தூதர்களாவோம்.''
Verse 17
أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Transliteration an arsil maʿanā banī is'rāīla
Tamil ஆகவே, ‘‘ இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு'' எனக் கூறுங்கள்! (என்பதாகவும் கட்டளையிட்டான்.)
Verse 18
قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ
Transliteration qāla alam nurabbika fīnā walīdan walabith'ta fīnā min ʿumurika sinīna
Tamil (அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உம்மைக் குழந்தையாக எடுத்துக்கொண்டு வளர்க்கவில்லையா? நீர் (உமது வாலிபத்தை அடையும் வரை) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர்.
Verse 19
وَفَعَلْتَ فَعْلَتَكَ ٱلَّتِى فَعَلْتَ وَأَنتَ مِنَ ٱلْكَـٰفِرِينَ
Transliteration wafaʿalta faʿlataka allatī faʿalta wa-anta mina l-kāfirīna
Tamil நீர் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்! (அதை மன்னித்திருந்தும்) நீர் நன்றி கெட்டவராகவே இருக்கிறீர்'' என்றான்.
Verse 20
قَالَ فَعَلْتُهَآ إِذًا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ
Transliteration qāla faʿaltuhā idhan wa-anā mina l-ḍālīna
Tamil அதற்கு மூஸா கூறினார்: ‘‘ நான் அறியாதவனாக இருந்த நிலைமையில் அதை நான் செய்தேன்.
Verse 21
فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِى رَبِّى حُكْمًا وَجَعَلَنِى مِنَ ٱلْمُرْسَلِينَ
Transliteration fafarartu minkum lammā khif'tukum fawahaba lī rabbī ḥuk'man wajaʿalanī mina l-mur'salīna
Tamil ஆதலால் நான் உங்களுக்குப் பயந்து உங்களை விட்டும் ஓடிவிட்டேன். எனினும், என் இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்துத் தன் தூதராகவும் என்னை ஆக்கினான்.
Verse 22
وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَىَّ أَنْ عَبَّدتَّ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Transliteration watil'ka niʿ'matun tamunnuhā ʿalayya an ʿabbadtta banī is'rāīla
Tamil ஆகவே, நீ இஸ்ராயீலின் சந்ததிகளை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலைமையில், இது நீ எனக்குச் சொல்லி காண்பிக்கக் கூடிய ஒரு நன்றியாகுமா?'' (இவ்வாறு மூஸா கூறினார்.)
Verse 23
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration qāla fir'ʿawnu wamā rabbu l-ʿālamīna
Tamil ‘‘ உலகத்தாரின் இறைவன் யார்?'' என ஃபிர்அவ்ன் கேட்டான்.
Verse 24
قَالَ رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُم مُّوقِنِينَ
Transliteration qāla rabbu l-samāwāti wal-arḍi wamā baynahumā in kuntum mūqinīna
Tamil அதற்கு (மூஸா) ‘‘ வானங்கள், பூமி இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் இறைவன்தான் (உலகத்தாரின் இறைவனும் ஆவான்). (இவ்வுண்மையை) நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நம்பிக்கை கொள்ளுங்கள்)'' என்று கூறினார்.
Verse 25
قَالَ لِمَنْ حَوْلَهُۥٓ أَلَا تَسْتَمِعُونَ
Transliteration qāla liman ḥawlahu alā tastamiʿūna
Tamil அதற்கவன், தன்னைச் சூழ இருந்தவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இதைச் செவியுற வில்லையா?'' என்று கூறினான்.
Verse 26
قَالَ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
Transliteration qāla rabbukum warabbu ābāikumu l-awalīna
Tamil அதற்கவர் ‘‘ (அவன்தான்) உங்கள் இறைவனும் (உங்களுக்கு) முன் சென்று போன உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான்'' என்று கூறினார்.
Verse 27
قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِىٓ أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ
Transliteration qāla inna rasūlakumu alladhī ur'sila ilaykum lamajnūnun
Tamil அதற்கு (ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) ‘‘ உங்களிடம் அனுப்பப்பட்ட(தாகக் கூறும்) இந்தத் தூதர் நிச்சயமாக சுத்தப் பைத்தியக்காரர்'' என்று சொன்னான்.
Verse 28
قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ ۖ إِن كُنتُمْ تَعْقِلُونَ
Transliteration qāla rabbu l-mashriqi wal-maghribi wamā baynahumā in kuntum taʿqilūna
Tamil அதற்கு (மூஸா) ‘‘ கீழ் நாடு மேல் நாடு இன்னும் இதற்கு மத்தியிலுள்ள தேசங்களின் இறைவனும் (அவன்தான்). நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (இதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்)'' என்று கூறினார்.
Verse 29
قَالَ لَئِنِ ٱتَّخَذْتَ إِلَـٰهًا غَيْرِى لَأَجْعَلَنَّكَ مِنَ ٱلْمَسْجُونِينَ
Transliteration qāla la-ini ittakhadhta ilāhan ghayrī la-ajʿalannaka mina l-masjūnīna
Tamil அதற்கவன் ‘‘ என்னைத் தவிர (மற்றெதனையும்) நீர் கடவுளாக எடுத்துக் கொண்டால் நிச்சயமாக நான் உம்மை சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்'' என்று கூறினான்.
Verse 30
قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍ مُّبِينٍ
Transliteration qāla awalaw ji'tuka bishayin mubīnin
Tamil அதற்கவர் ‘‘ தெளிவானதொரு அத்தாட்சியை நான் உன்னிடம் கொண்டு வந்த போதிலுமா?'' என்று கேட்டார்.
Verse 31
قَالَ فَأْتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
Transliteration qāla fati bihi in kunta mina l-ṣādiqīna
Tamil அதற்கவன் ‘‘ நீர் சொல்வது உண்மையானால், அதைக் கொண்டு வருவீராக'' என்று கூறினான்.
Verse 32
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِينٌ
Transliteration fa-alqā ʿaṣāhu fa-idhā hiya thuʿ'bānun mubīnun
Tamil ஆகவே, மூஸா தன் தடியை எறிந்தார். உடனே அது தெளிவான பெரியதொரு பாம்பாகி விட்டது.
Verse 33
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّـٰظِرِينَ
Transliteration wanazaʿa yadahu fa-idhā hiya bayḍāu lilnnāẓirīna
Tamil மேலும், அவர் தன் கையை(ச் சட்டைப் பையில்) இட்டு வெளியில் எடுத்தார். உடனே அது பார்ப்பவர்களுக்கு(க் கண்ணைக் கூசச்செய்யும் பிரகாசமுடைய) வெண்மையாகத் தோன்றியது.
Verse 34
قَالَ لِلْمَلَإِ حَوْلَهُۥٓ إِنَّ هَـٰذَا لَسَـٰحِرٌ عَلِيمٌ
Transliteration qāla lil'mala-i ḥawlahu inna hādhā lasāḥirun ʿalīmun
Tamil (இதைக் கண்ணுற்ற ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ இருந்த பிரதானிகளை நோக்கி, ‘‘நிச்சயமாக இவர் தேர்ச்சிபெற்ற சூனியக்காரராக இருக்கிறார்.
Verse 35
يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِۦ فَمَاذَا تَأْمُرُونَ
Transliteration yurīdu an yukh'rijakum min arḍikum bisiḥ'rihi famādhā tamurūna
Tamil இவர் தன் சூனியத்தால் உங்கள் ஊரை விட்டும் உங்களைத் துரத்திவிட எண்ணுகிறார். ஆகவே, இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்'' என்று கேட்டான்.
Verse 36
قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَٱبْعَثْ فِى ٱلْمَدَآئِنِ حَـٰشِرِينَ
Transliteration qālū arjih wa-akhāhu wa-ib'ʿath fī l-madāini ḥāshirīna
Tamil அதற்கவர்கள், ‘‘ அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் ஒரு தவணை அளித்து, துப்பறிபவர்களைப் பல ஊர்களுக்கும் அனுப்பிவை.
Verse 37
يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ
Transliteration yatūka bikulli saḥḥārin ʿalīmin
Tamil தேர்ச்சிபெற்ற சூனியக்காரர்கள் அனைவரையும் அவர்கள் (தேடிப் பிடித்து) உம்மிடம் அழைத்து வருவார்கள்'' என்று கூறினார்கள்.
Verse 38
فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَـٰتِ يَوْمٍ مَّعْلُومٍ
Transliteration fajumiʿa l-saḥaratu limīqāti yawmin maʿlūmin
Tamil (அவ்வாறே துப்பறிபவர்கள் பல ஊர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு) குறித்த நாளில், குறித்த நேரத்தில் (குறித்த இடத்தில்) சூனியக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள்.
Verse 39
وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ
Transliteration waqīla lilnnāsi hal antum muj'tamiʿūna
Tamil எல்லா மனிதர்களுக்கும், ‘‘ (குறித்த காலத்தில்) நீங்கள் வந்து சேருவீர்களா?'' என்று பறைசாற்றப்பட்டது.
Verse 40
لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُوا۟ هُمُ ٱلْغَـٰلِبِينَ
Transliteration laʿallanā nattabiʿu l-saḥarata in kānū humu l-ghālibīna
Tamil (இவ்வாறு அங்கு கூடும்) சூனியக்காரர்கள் வெற்றி கொண்டால் (அவர்களுடைய மார்க்கத்தையே) நாம் பின்பற்றவும் கூடும் (என்றும் பறை சாற்றப்பட்டது).
Verse 41
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُوا۟ لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَـٰلِبِينَ
Transliteration falammā jāa l-saḥaratu qālū lifir'ʿawna a-inna lanā la-ajran in kunnā naḥnu l-ghālibīna
Tamil சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?'' என்று கேட்டார்கள்.
Verse 42
قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًا لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ
Transliteration qāla naʿam wa-innakum idhan lamina l-muqarabīna
Tamil அதற்கவன் ‘‘ ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம் சபையிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்'' என்று கூறினான்.
Verse 43
قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ
Transliteration qāla lahum mūsā alqū mā antum mul'qūna
Tamil அவர்களை நோக்கி மூஸா ‘‘ நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்'' எனக் கூறினார்.
Verse 44
فَأَلْقَوْا۟ حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا۟ بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ ٱلْغَـٰلِبُونَ
Transliteration fa-alqaw ḥibālahum waʿiṣiyyahum waqālū biʿizzati fir'ʿawna innā lanaḥnu l-ghālibūna
Tamil ஆகவே, அவர்கள் தங்கள் தடிகளையும், கயிறுகளையும் எறிந்து ‘‘ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியம் நிச்சயமாக நாங்கள்தான் வென்றுவிட்டோம்'' என்று கூறினார்கள்.
Verse 45
فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
Transliteration fa-alqā mūsā ʿaṣāhu fa-idhā hiya talqafu mā yafikūna
Tamil பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்து விட்டது.
Verse 46
فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَـٰجِدِينَ
Transliteration fa-ul'qiya l-saḥaratu sājidīna
Tamil இதைக் கண்ணுற்ற சூனியக்காரர்கள் அனைவரும் விழுந்து சிரம் பணிந்து,
Verse 47
قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration qālū āmannā birabbi l-ʿālamīna
Tamil ‘‘ உலகத்தார் அனைவரின் இறைவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.
Verse 48
رَبِّ مُوسَىٰ وَهَـٰرُونَ
Transliteration rabbi mūsā wahārūna
Tamil அவன்(தான்,) மூஸா, ஹாரூனுடைய இறைவனுமாவான்'' என்று கூறினார்கள்.
Verse 49
قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَـٰفٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
Transliteration qāla āmantum lahu qabla an ādhana lakum innahu lakabīrukumu alladhī ʿallamakumu l-siḥ'ra falasawfa taʿlamūna la-uqaṭṭiʿanna aydiyakum wa-arjulakum min khilāfin wala-uṣallibannakum ajmaʿīna
Tamil அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்கள் குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான்.
Verse 50
قَالُوا۟ لَا ضَيْرَ ۖ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
Transliteration qālū lā ḍayra innā ilā rabbinā munqalibūna
Tamil அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (அதனால் எங்களுக்கு) ஒரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம்.
Verse 51
إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَـٰيَـٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلْمُؤْمِنِينَ
Transliteration innā naṭmaʿu an yaghfira lanā rabbunā khaṭāyānā an kunnā awwala l-mu'minīna
Tamil நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.''
Verse 52
۞ وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِىٓ إِنَّكُم مُّتَّبَعُونَ
Transliteration wa-awḥaynā ilā mūsā an asri biʿibādī innakum muttabaʿūna
Tamil பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் (அவர்களால்) பின்தொடரப்படுவீர்கள்'' (என்றோம்).
Verse 53
فَأَرْسَلَ فِرْعَوْنُ فِى ٱلْمَدَآئِنِ حَـٰشِرِينَ
Transliteration fa-arsala fir'ʿawnu fī l-madāini ḥāshirīna
Tamil (அவ்வாறு அவர்கள் சென்று விடவே அதை அறிந்த) ஃபிர்அவ்ன், பல ஊர்களுக்கும் (மக்களை அழைக்க) பறைசாற்றுபவர்களை அனுப்பிவைத்து,
Verse 54
إِنَّ هَـٰٓؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ
Transliteration inna hāulāi lashir'dhimatun qalīlūna
Tamil ‘‘ நிச்சயமாக (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) இவர்கள் வெகு சொற்ப தொகையினரே. (அவ்வாறிருந்தும்)
Verse 55
وَإِنَّهُمْ لَنَا لَغَآئِظُونَ
Transliteration wa-innahum lanā laghāiẓūna
Tamil நிச்சயமாக அவர்கள் நம்மை கோபத்திற்குள்ளாக்கி விட்டனர்.
Verse 56
وَإِنَّا لَجَمِيعٌ حَـٰذِرُونَ
Transliteration wa-innā lajamīʿun ḥādhirūna
Tamil நிச்சயமாக நாங்கள் பெருந்தொகையினர்; (அத்துடன்) மிக்க எச்சரிக்கை உடையவர்கள்'' (என்று கூறி, பல ஊரார்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.)
Verse 57
فَأَخْرَجْنَـٰهُم مِّن جَنَّـٰتٍ وَعُيُونٍ
Transliteration fa-akhrajnāhum min jannātin waʿuyūnin
Tamil (இவ்வாறு) அவர்களுடைய தோட்டங்களிலிருந்தும் துரவுகளிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றி விட்டோம்.
Verse 58
وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ
Transliteration wakunūzin wamaqāmin karīmin
Tamil (இன்னும், அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்).
Verse 59
كَذَٰلِكَ وَأَوْرَثْنَـٰهَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Transliteration kadhālika wa-awrathnāhā banī is'rāīla
Tamil இவ்வாறு (அவர்களை வெளியேற்றிய பின்னர்) இஸ்ராயீலின் சந்ததிகளை அவற்றுக்குச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கிவிட்டோம்.
Verse 60
فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ
Transliteration fa-atbaʿūhum mush'riqīna
Tamil சூரிய உதய (நேர)த்தில் இவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.
Verse 61
فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَـٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ
Transliteration falammā tarāā l-jamʿāni qāla aṣḥābu mūsā innā lamud'rakūna
Tamil இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்ட பொழுது ‘‘ நிச்சயமாக நாம் அகப்பட்டுக் கொண்டோம்'' என்று மூஸாவுடைய மக்கள் கூறினார்கள்.
Verse 62
قَالَ كَلَّآ ۖ إِنَّ مَعِىَ رَبِّى سَيَهْدِينِ
Transliteration qāla kallā inna maʿiya rabbī sayahdīni
Tamil அதற்கு (மூஸா) ‘‘ அவ்வாறல்ல. நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். (நாம் தப்பிக்கும்) வழியை நிச்சயமாக அவன் எனக்கு அறிவிப்பான்'' என்றார்.
Verse 63
فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ ۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَٱلطَّوْدِ ٱلْعَظِيمِ
Transliteration fa-awḥaynā ilā mūsā ani iḍ'rib biʿaṣāka l-baḥra fa-infalaqa fakāna kullu fir'qin kal-ṭawdi l-ʿaẓīmi
Tamil ஆகவே, நாம் மூஸாவை நோக்கி ‘‘ நீர் உமது தடியினால் இந்தக் கடலை அடிப்பீராக'' என வஹ்யி அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப்போல் இருந்தது.
Verse 64
وَأَزْلَفْنَا ثَمَّ ٱلْـَٔاخَرِينَ
Transliteration wa-azlafnā thamma l-ākharīna
Tamil (பின் சென்ற) மற்ற மக்களையும் அதை நெருங்கச் செய்தோம்.
Verse 65
وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجْمَعِينَ
Transliteration wa-anjaynā mūsā waman maʿahu ajmaʿīna
Tamil மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
Verse 66
ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ
Transliteration thumma aghraqnā l-ākharīna
Tamil பின்னர் (அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற) மற்ற அனைவரையும் மூழ்கடித்து விட்டோம்.
Verse 67
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Tamil நிச்சயமாக இ(ச்சம்பவத்)தில் ஒரு பெரும் படிப்பினை இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்பவில்லை.
Verse 68
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Tamil (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைத்தையும்) மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்.
Verse 69
وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَٰهِيمَ
Transliteration wa-ut'lu ʿalayhim naba-a ib'rāhīma
Tamil (நபியே!) அவர்களுக்கு இப்றாஹீமுடைய சரித்திரத்தையும் ஓதிக் காண்பிப்பீராக.
Verse 70
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا تَعْبُدُونَ
Transliteration idh qāla li-abīhi waqawmihi mā taʿbudūna
Tamil அவர், தன் தந்தையையும் தன் மக்களையும் நோக்கி ‘‘ நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு,
Verse 71
قَالُوا۟ نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَـٰكِفِينَ
Transliteration qālū naʿbudu aṣnāman fanaẓallu lahā ʿākifīna
Tamil அவர்கள் ‘‘ நாங்கள் இச்சிலைகளையே வணங்குகிறோம்; அவற்றை தொடர்ந்து ஆராதனை செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்கள்.
Verse 72
قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ
Transliteration qāla hal yasmaʿūnakum idh tadʿūna
Tamil அதற்கு (இப்றாஹீம் அவர்களை நோக்கி) ‘‘ அவற்றை நீங்கள் அழைத்தால் உங்களுக்கு செவி கொடுக்கின்றனவா?
Verse 73
أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ
Transliteration aw yanfaʿūnakum aw yaḍurrūna
Tamil அல்லது (அவற்றை நீங்கள் ஆராதனை செய்வதால்) உங்களுக்கு ஏதும் நன்மையோ (ஆராதனை செய்யாவிட்டால்) தீமையோ செய்கின்றனவா?'' எனக் கேட்டார்.
Verse 74
قَالُوا۟ بَلْ وَجَدْنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ
Transliteration qālū bal wajadnā ābāanā kadhālika yafʿalūna
Tamil அதற்கவர்கள் ‘‘ இல்லை. எனினும் எங்கள் மூதாதைகள் இவ்வாறே (ஆராதனை) செய்து கொண்டிருக்க நாங்கள் கண்டோம் (ஆகவே, நாங்களும் அவற்றை ஆராதனை செய்கிறோம்)'' என்றார்கள்.
Verse 75
قَالَ أَفَرَءَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ
Transliteration qāla afara-aytum mā kuntum taʿbudūna
Tamil நீங்கள் எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை பார்த்தீர்களா? என (இப்றாஹீம்) கேட்டார்.
Verse 76
أَنتُمْ وَءَابَآؤُكُمُ ٱلْأَقْدَمُونَ
Transliteration antum waābāukumu l-aqdamūna
Tamil நீங்களும் உங்கள் முன்னோர்களான மூதாதையர்களும் (எவற்றை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைப் பாருங்கள்).
Verse 77
فَإِنَّهُمْ عَدُوٌّ لِّىٓ إِلَّا رَبَّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration fa-innahum ʿaduwwun lī illā rabba l-ʿālamīna
Tamil நிச்சயமாக இவை எனக்கு எதிரிகளே! எனினும், உலகத்தாரைப் படைத்து வளர்ப்பவனே எனது இறைவன்.
Verse 78
ٱلَّذِى خَلَقَنِى فَهُوَ يَهْدِينِ
Transliteration alladhī khalaqanī fahuwa yahdīni
Tamil அவன்தான் என்னைப் படைத்தான். அவனே என்னை நேரான வழியில் நடத்துகிறான்.
Verse 79
وَٱلَّذِى هُوَ يُطْعِمُنِى وَيَسْقِينِ
Transliteration wa-alladhī huwa yuṭ'ʿimunī wayasqīni
Tamil அவனே எனக்குப் புசிக்கவும் குடிக்கவும் தருகிறான்.
Verse 80
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
Transliteration wa-idhā mariḍ'tu fahuwa yashfīni
Tamil நான் நோயுற்ற தருணத்தில் அவனே என்னை குணப்படுத்துகிறான்.
Verse 81
وَٱلَّذِى يُمِيتُنِى ثُمَّ يُحْيِينِ
Transliteration wa-alladhī yumītunī thumma yuḥ'yīni
Tamil அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் அவனே என்னை (மறுமையில்) உயிர்ப்பிப்பான்.
Verse 82
وَٱلَّذِىٓ أَطْمَعُ أَن يَغْفِرَ لِى خَطِيٓـَٔتِى يَوْمَ ٱلدِّينِ
Transliteration wa-alladhī aṭmaʿu an yaghfira lī khaṭīatī yawma l-dīni
Tamil கூலி கொடுக்கும் (மறுமை) நாளில் என் குற்றங்களை மன்னிக்க அவனையே நான் நம்பியிருக்கிறேன்.
Verse 83
رَبِّ هَبْ لِى حُكْمًا وَأَلْحِقْنِى بِٱلصَّـٰلِحِينَ
Transliteration rabbi hab lī ḥuk'man wa-alḥiq'nī bil-ṣāliḥīna
Tamil என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அருள் புரிந்து, நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக!
Verse 84
وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍ فِى ٱلْـَٔاخِرِينَ
Transliteration wa-ij'ʿal lī lisāna ṣid'qin fī l-ākhirīna
Tamil பிற்காலத்திலும் (உலக முடிவு நாள் வரை அனைவரும்) எனக்கு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது சாந்தி நிலவுக! என்று பிரார்த்திக்கக்கூடிய) நற்பெயரையும் சிறப்பையும் தந்தருள்வாயாக!
Verse 85
وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ
Transliteration wa-ij'ʿalnī min warathati jannati l-naʿīmi
Tamil இன்ப சுகத்தையுடைய சொர்க்கத்தின் வாரிசுகளிலும் என்னை நீ ஆக்கிவைப்பாயாக!
Verse 86
وَٱغْفِرْ لِأَبِىٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ
Transliteration wa-igh'fir li-abī innahu kāna mina l-ḍālīna
Tamil என் தந்தையையும் நீ மன்னித்தருள்; நிச்சயமாக அவர் வழிதவறிவிட்டார்.
Verse 87
وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ
Transliteration walā tukh'zinī yawma yub'ʿathūna
Tamil (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே!
Verse 88
يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ
Transliteration yawma lā yanfaʿu mālun walā banūna
Tamil அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒரு பயனுமளிக்கா.
Verse 89
إِلَّا مَنْ أَتَى ٱللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
Transliteration illā man atā l-laha biqalbin salīmin
Tamil ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்).
Verse 90
وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ
Transliteration wa-uz'lifati l-janatu lil'muttaqīna
Tamil இறையச்சம் உடையவர்(களுக்காக அவர்)கள் முன்பாக சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்.
Verse 91
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِلْغَاوِينَ
Transliteration waburrizati l-jaḥīmu lil'ghāwīna
Tamil வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் வெளிப்படுத்தப்படும்.
Verse 92
وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ
Transliteration waqīla lahum ayna mā kuntum taʿbudūna
Tamil அவர்களை நோக்கி ‘‘ அல்லாஹ்வையன்றி நீங்கள் ஆராதனை செய்து கொண்டிருந்தவை எங்கே?
Verse 93
مِن دُونِ ٱللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ
Transliteration min dūni l-lahi hal yanṣurūnakum aw yantaṣirūna
Tamil (இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?'' என்று கேட்கப்படும்.
Verse 94
فَكُبْكِبُوا۟ فِيهَا هُمْ وَٱلْغَاوُۥنَ
Transliteration fakub'kibū fīhā hum wal-ghāwūna
Tamil 95. (பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்.
Verse 95
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
Transliteration wajunūdu ib'līsa ajmaʿūna
Tamil 95. (பின்னர்,) அவையும் (அவற்றை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்.
Verse 96
قَالُوا۟ وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
Transliteration qālū wahum fīhā yakhtaṣimūna
Tamil அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:
Verse 97
تَٱللَّهِ إِن كُنَّا لَفِى ضَلَـٰلٍ مُّبِينٍ
Transliteration tal-lahi in kunnā lafī ḍalālin mubīnin
Tamil ‘‘ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம் (என்றும்,)
Verse 98
إِذْ نُسَوِّيكُم بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration idh nusawwīkum birabbi l-ʿālamīna
Tamil (தங்கள் தெய்வங்களை நோக்கி) ‘‘ உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்!
Verse 99
وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلْمُجْرِمُونَ
Transliteration wamā aḍallanā illā l-muj'rimūna
Tamil (பூசாரிகளை சுட்டிக் காண்பித்து இந்தக்) குற்றவாளிகளே தவிர (வேறு எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை.
Verse 100
فَمَا لَنَا مِن شَـٰفِعِينَ
Transliteration famā lanā min shāfiʿīna
Tamil எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே!
Verse 101
وَلَا صَدِيقٍ حَمِيمٍ
Transliteration walā ṣadīqin ḥamīmin
Tamil (எங்கள் மீது அனுதாபமுள்ள) ஒரு உண்மையான நண்பனுமில்லையே!
Verse 102
فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Transliteration falaw anna lanā karratan fanakūna mina l-mu'minīna
Tamil நாம் (உலகத்திற்குத்) திரும்பச் செல்லக்கூடுமாயின், நிச்சயமாக நாம் மெய்யான நம்பிக்கையாளர்களாகி விடுவோம்'' என்று புலம்புவார்கள்.
Verse 103
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Tamil மெய்யாகவே இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை நம்புவதில்லை.
Verse 104
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Tamil (நபியே!) நிச்சயமாக உமது இறைவனே (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்.
Verse 105
كَذَّبَتْ قَوْمُ نُوحٍ ٱلْمُرْسَلِينَ
Transliteration kadhabat qawmu nūḥin l-mur'salīna
Tamil நூஹ்வுடைய மக்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Verse 106
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ
Transliteration idh qāla lahum akhūhum nūḥun alā tattaqūna
Tamil அவர்களின் சகோதரர் நூஹ் அவர்களுக்கு கூறினார்: ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படவேண்டாமா?
Verse 107
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Transliteration innī lakum rasūlun amīnun
Tamil மெய்யாகவே நான் உங்களிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையுள்ள ஒரு தூதனாவேன்.
Verse 108
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Tamil ஆகவே, அல்லாஹ்வுக்குப் பயந்து நீங்கள் எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்.
Verse 109
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wamā asalukum ʿalayhi min ajrin in ajriya illā ʿalā rabbi l-ʿālamīna
Tamil (இதற்காக) நான் உங்களிடம் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே இருக்கின்றன.
Verse 110
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Tamil ஆதலால், நீங்கள் (அந்த) அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்'' (என்று கூறினார்.)
Verse 111
۞ قَالُوٓا۟ أَنُؤْمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلْأَرْذَلُونَ
Transliteration qālū anu'minu laka wa-ittabaʿaka l-ardhalūna
Tamil அதற்கவர்கள் ‘‘ உம்மை நாங்கள் நம்பிக்கை கொள்வதா? (எங்களுக்குக் கூலி வேலை செய்யும்) ஈனர்கள்தான் உம்மைப் பின்பற்றியிருக்கின்றனர்'' என்று கூறினார்கள்.
Verse 112
قَالَ وَمَا عِلْمِى بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
Transliteration qāla wamā ʿil'mī bimā kānū yaʿmalūna
Tamil அதற்கு அவர், ‘‘ நான் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை இன்னதென அறியமாட்டேன். (அதை விசாரிப்பதும் என் வேலையல்ல) என்றும்,
Verse 113
إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّى ۖ لَوْ تَشْعُرُونَ
Transliteration in ḥisābuhum illā ʿalā rabbī law tashʿurūna
Tamil (இவற்றைப் பற்றி) அவர்களிடம் கணக்குக் கேட்பது என் இறைவன் மீதே கடமை. (என் மீதல்ல.) இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
Verse 114
وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلْمُؤْمِنِينَ
Transliteration wamā anā biṭāridi l-mu'minīna
Tamil நம்பிக்கை கொண்டவர்களை (அவர்கள் ஏழைகள் என்பதற்காக) நான் விரட்டிவிட முடியாது.
Verse 115
إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌ مُّبِينٌ
Transliteration in anā illā nadhīrun mubīnun
Tamil பகிரங்கமாக நான் அனைவருக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை'' என்று கூறினார்.
Verse 116
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَـٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمَرْجُومِينَ
Transliteration qālū la-in lam tantahi yānūḥu latakūnanna mina l-marjūmīna
Tamil அதற்கவர்கள் ‘‘ நூஹே! நீர் இதை விட்டும் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் கல்லெறிந்து கொல்லப்படுவீர்'' என்று கூறினார்கள்.
Verse 117
قَالَ رَبِّ إِنَّ قَوْمِى كَذَّبُونِ
Transliteration qāla rabbi inna qawmī kadhabūni
Tamil அதற்கவர், ‘‘ என் இறைவனே! என் (இந்த) மக்கள் நிச்சயமாக என்னைப் பொய்யாக்கி விட்டார்கள்.''
Verse 118
فَٱفْتَحْ بَيْنِى وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِى وَمَن مَّعِىَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Transliteration fa-if'taḥ baynī wabaynahum fatḥan wanajjinī waman maʿiya mina l-mu'minīna
Tamil ஆதலால், எனக்கும் அவர்களுக்குமிடையில் நீ ஒரு தீர்ப்பு செய்து, என்னையும் என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார்.
Verse 119
فَأَنجَيْنَـٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ
Transliteration fa-anjaynāhu waman maʿahu fī l-ful'ki l-mashḥūni
Tamil ஆகவே, நாம் அவரையும் (நம்பிக்கை கொண்டு) அவருடன் இருந்தவர்களையும் (மற்ற உயிர்ப் பிராணிகளால்) நிறைந்திருந்த கப்பலில் ஏற்றி பாதுகாத்துக் கொண்டோம்.
Verse 120
ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ ٱلْبَاقِينَ
Transliteration thumma aghraqnā baʿdu l-bāqīna
Tamil இதன் பின்னர் (கப்பலில் ஏறாது) மீதமிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம்.
Verse 121
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Tamil நிச்சயமாக இதிலொரு படிப்பினையிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கைக் கொள்ளவில்லை.
Verse 122
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Tamil (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவன் மகா கருணையுடையவன்.
Verse 123
كَذَّبَتْ عَادٌ ٱلْمُرْسَلِينَ
Transliteration kadhabat ʿādun l-mur'salīna
Tamil ‘‘ ஆது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Verse 124
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ
Transliteration idh qāla lahum akhūhum hūdun alā tattaqūna
Tamil அவர்களுடைய சகோதரர் ‘ஹூது' அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்பட வேண்டாமா?
Verse 125
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Transliteration innī lakum rasūlun amīnun
Tamil நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாவேன்;
Verse 126
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Tamil ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
Verse 127
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wamā asalukum ʿalayhi min ajrin in ajriya illā ʿalā rabbi l-ʿālamīna
Tamil இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே இருக்கிறது.
Verse 128
أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةً تَعْبَثُونَ
Transliteration atabnūna bikulli rīʿin āyatan taʿbathūna
Tamil உயர்ந்த இடங்களிலெல்லாம் (தூண்கள் போன்ற) ஞாபகச் சின்னங்களை நீங்கள் வீணாகக் கட்டுகிறீர்களே!
Verse 129
وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ
Transliteration watattakhidhūna maṣāniʿa laʿallakum takhludūna
Tamil நீங்கள் (அழியாது) என்றென்றும் இருப்பவர்களைப் போல் (உங்கள் மாளிகைகளில் உயர்ந்த) வேலைப்பாடுகளையும் அமைக்கிறீர்கள்.
Verse 130
وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ
Transliteration wa-idhā baṭashtum baṭashtum jabbārīna
Tamil நீங்கள் (எவரையும்) பிடித்தால் (ஈவிரக்கமின்றி) மிகக் கொடுமையாக நடத்துகிறீர்கள்.
Verse 131
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Tamil அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
Verse 132
وَٱتَّقُوا۟ ٱلَّذِىٓ أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ
Transliteration wa-ittaqū alladhī amaddakum bimā taʿlamūna
Tamil உங்களுக்குத் தெரிந்திருக்கும் பல பொருள்களையும், எவன் உங்களுக்குக் கொடுத்து உதவி புரிந்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்.
Verse 133
أَمَدَّكُم بِأَنْعَـٰمٍ وَبَنِينَ
Transliteration amaddakum bi-anʿāmin wabanīna
Tamil சந்ததிகளையும், ஆடு, மாடு, ஒட்டகங்களையும் (கொடுத்து) அவனே உங்களுக்கு உதவி செய்திருக்கிறான்.
Verse 134
وَجَنَّـٰتٍ وَعُيُونٍ
Transliteration wajannātin waʿuyūnin
Tamil தோட்டங்களையும் நீர் ஊற்றுக்களையும் (அவனே உங்களுக்கு அளித்திருக்கிறான்).
Verse 135
إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Transliteration innī akhāfu ʿalaykum ʿadhāba yawmin ʿaẓīmin
Tamil (அவனுக்கு மாறு செய்தால்) மகத்தானதொரு நாளின் வேதனை உங்களுக்கு நிச்சயமாக வருவதை(ப் பற்றி) நான் பயப்படுகிறேன்'' என்று கூறினார்.
Verse 136
قَالُوا۟ سَوَآءٌ عَلَيْنَآ أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ ٱلْوَٰعِظِينَ
Transliteration qālū sawāon ʿalaynā awaʿaẓta am lam takun mina l-wāʿiẓīna
Tamil அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (ஹூதே!) நீங்கள் எங்களுக்கு நல்லுபதேசம் செய்வதும் நல்லுபதேசம் செய்யாதிருப்பதும் சமமே!
Verse 137
إِنْ هَـٰذَآ إِلَّا خُلُقُ ٱلْأَوَّلِينَ
Transliteration in hādhā illā khuluqu l-awalīna
Tamil (பயமுறுத்த) இ(வ்வாறு கூறுவ)து முன்னுள்ளோரின் வழக்கமே தவிரவேறில்லை.
Verse 138
وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
Transliteration wamā naḥnu bimuʿadhabīna
Tamil (நீங்கள் கூறுவதைப் போல) நாங்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட மாட்டோம்'' (என்று கூறினார்கள்)
Verse 139
فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَـٰهُمْ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration fakadhabūhu fa-ahlaknāhum inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Tamil மேலும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம். நிச்சயமாக இதில் நல்லதோர் அத்தாட்சியிருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
Verse 140
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Tamil (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அவர்களை) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
Verse 141
كَذَّبَتْ ثَمُودُ ٱلْمُرْسَلِينَ
Transliteration kadhabat thamūdu l-mur'salīna
Tamil ‘ஸமூது' மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Verse 142
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَـٰلِحٌ أَلَا تَتَّقُونَ
Transliteration idh qāla lahum akhūhum ṣāliḥun alā tattaqūna
Tamil அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்தை விட்டு விலகி) அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ள வேண்டாமா?''
Verse 143
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Transliteration innī lakum rasūlun amīnun
Tamil நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையான ஒரு தூதனாவேன்.
Verse 144
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Tamil ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
Verse 145
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wamā asalukum ʿalayhi min ajrin in ajriya illā ʿalā rabbi l-ʿālamīna
Tamil இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை.''
Verse 146
أَتُتْرَكُونَ فِى مَا هَـٰهُنَآ ءَامِنِينَ
Transliteration atut'rakūna fī mā hāhunā āminīna
Tamil இங்கு (உள்ள சுகபோகங்களில் என்றென்றுமே) அச்சமற்று (வாழ) விட்டு வைக்கப்படுவீர்களா?
Verse 147
فِى جَنَّـٰتٍ وَعُيُونٍ
Transliteration fī jannātin waʿuyūnin
Tamil (இங்குள்ள) தோட்டங்களிலும், நீர் ஊற்றுகளிலும்,
Verse 148
وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ
Transliteration wazurūʿin wanakhlin ṭalʿuhā haḍīmun
Tamil குலை குலையாகத் தொங்கும் பேரீச்சந் தோப்புகளிலும், விவசாயப் பண்ணைகளிலும் (விட்டுவைக்கப்படுவீர்களா?)
Verse 149
وَتَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا فَـٰرِهِينَ
Transliteration watanḥitūna mina l-jibāli buyūtan fārihīna
Tamil திறமைசாலிகளாக மலைகளைக் குடைந்து வீடுகளை அமைக்கிறீர்கள். (அதில் என்றென்றுமே தங்கியிருக்க நீங்கள் விட்டு வைக்கப்படுவீர்களா?)
Verse 150
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Tamil ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்.
Verse 151
وَلَا تُطِيعُوٓا۟ أَمْرَ ٱلْمُسْرِفِينَ
Transliteration walā tuṭīʿū amra l-mus'rifīna
Tamil வரம்பு மீறுபவர்களின் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படியாதீர்கள்.
Verse 152
ٱلَّذِينَ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
Transliteration alladhīna yuf'sidūna fī l-arḍi walā yuṣ'liḥūna
Tamil அவர்கள், பூமியில் விஷமம் செய்வார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்.
Verse 153
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
Transliteration qālū innamā anta mina l-musaḥarīna
Tamil அதற்கவர்கள் (ஸாலிஹ் நபியை நோக்கி) கூறினர்: ‘‘ உம்மீது எவரோ சூனியம் செய்துவிட்டார்கள். (ஆதலால், உமது புத்தி தடுமாறிவிட்டது.)
Verse 154
مَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا فَأْتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
Transliteration mā anta illā basharun mith'lunā fati biāyatin in kunta mina l-ṣādiqīna
Tamil நீர் நம்மைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. நீர் உண்மை சொல்பவராக இருந்தால் (நாம் விரும்பியவாறு) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவீராக'' (என்று கூறினார்கள்.)
Verse 155
قَالَ هَـٰذِهِۦ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُومٍ
Transliteration qāla hādhihi nāqatun lahā shir'bun walakum shir'bu yawmin maʿlūmin
Tamil அதற்கவர் ‘‘ (உங்களுக்கு அத்தாட்சியாக) இதோ ஒரு பெண் ஒட்டகம் (வந்து) இருக்கிறது. (நீங்கள் தண்ணீரருந்தும் இத்துரவில்) அது குடிப்பதற்கு ஒரு நாளும், நீங்கள் குடிப்பதற்கு ஒரு நாளும் குறிப்பிடப்படுகிறது.
Verse 156
وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ
Transliteration walā tamassūhā bisūin fayakhudhakum ʿadhābu yawmin ʿaẓīmin
Tamil மேலும், நீங்கள் அதற்கு ஒரு தீங்கும் செய்யாதீர்கள். அவ்வாறாயின் கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும்'' என்று கூறினார்.
Verse 157
فَعَقَرُوهَا فَأَصْبَحُوا۟ نَـٰدِمِينَ
Transliteration faʿaqarūhā fa-aṣbaḥū nādimīna
Tamil (இவ்வாறு கூறியிருந்தும்) அவர்கள் அதன் கால் நரம்பைத் தறித்து விட்டார்கள். (அதனால் வேதனை வருவதன் அறிகுறியைக் கண்டபொழுது) அவர்கள் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.
Verse 158
فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration fa-akhadhahumu l-ʿadhābu inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Tamil ஆகவே, அவர்களை வேதனை பிடித்துக்கொண்டது. நிச்சயமாக (அவர்களுக்கு) இதிலோர் அத்தாட்சி இருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவேயில்லை.
Verse 159
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Tamil (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
Verse 160
كَذَّبَتْ قَوْمُ لُوطٍ ٱلْمُرْسَلِينَ
Transliteration kadhabat qawmu lūṭin l-mur'salīna
Tamil லூத்துடைய மக்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Verse 161
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ
Transliteration idh qāla lahum akhūhum lūṭun alā tattaqūna
Tamil அவர்களுடைய சகோதரர் லூத் அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டாமா?
Verse 162
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Transliteration innī lakum rasūlun amīnun
Tamil நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையான ஒரு தூதனாக இருக்கிறேன்.
Verse 163
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Tamil (ஆகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கீழ்ப்படியுங்கள்.
Verse 164
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wamā asalukum ʿalayhi min ajrin in ajriya illā ʿalā rabbi l-ʿālamīna
Tamil இதற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தாரின் இறைவனிடமே தவிர (வேறுயாரிடமும்) இல்லை.
Verse 165
أَتَأْتُونَ ٱلذُّكْرَانَ مِنَ ٱلْعَـٰلَمِينَ
Transliteration atatūna l-dhuk'rāna mina l-ʿālamīna
Tamil நீங்கள் (உங்கள் காம இச்சையைத் தணித்துக் கொள்ள) உலகத்தார்களில் ஆண்களிடமே செல்கிறீர்கள்.
Verse 166
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَٰجِكُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
Transliteration watadharūna mā khalaqa lakum rabbukum min azwājikum bal antum qawmun ʿādūna
Tamil உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்களே! நீங்கள் (அல்லாஹ்வின் இயற்கை முறையை) மீறிவிட்ட மக்கள் ஆவீர்கள்'' என்று கூறினார்.
Verse 167
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَـٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمُخْرَجِينَ
Transliteration qālū la-in lam tantahi yālūṭu latakūnanna mina l-mukh'rajīna
Tamil அதற்கவர்கள் ‘‘ லூத்தே! (இவ்வாறு கூறுவதை விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நீர் (நம் ஊரை விட்டுத்) துரத்தப்படுவீர்'' என்று கூறினார்கள்.
Verse 168
قَالَ إِنِّى لِعَمَلِكُم مِّنَ ٱلْقَالِينَ
Transliteration qāla innī liʿamalikum mina l-qālīna
Tamil அதற்கவர் ‘‘ நிச்சயமாக நான் உங்கள் (இத்தீய) செயலை வெறுக்கிறேன்'' என்று கூறி,
Verse 169
رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ
Transliteration rabbi najjinī wa-ahlī mimmā yaʿmalūna
Tamil ‘‘ என் இறைவனே! இவர்களின் (தீய) செயலிலிருந்து என்னையும், என் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வாயாக'' (என்று பிரார்த்தித்தார்.)
Verse 170
فَنَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ
Transliteration fanajjaynāhu wa-ahlahu ajmaʿīna
Tamil ஆகவே, அவரையும் அவர் குடும்பத்தினர் அனைவரையும் நாம் பாதுகாத்துக் கொண்டோம்.
Verse 171
إِلَّا عَجُوزًا فِى ٱلْغَـٰبِرِينَ
Transliteration illā ʿajūzan fī l-ghābirīna
Tamil எனினும், (அவருடைய) ஒரு கிழ (மனை)வியைத் தவிர அவள் (லூத்துடன்) வராது பின் தங்கியவர்களுடன் தங்கி (அழிந்து) விட்டாள்.
Verse 172
ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ
Transliteration thumma dammarnā l-ākharīna
Tamil பின்னர், நாம் மற்ற அனைவரையும் அழித்து விட்டோம்.
Verse 173
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا ۖ فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ
Transliteration wa-amṭarnā ʿalayhim maṭaran fasāa maṭaru l-mundharīna
Tamil அவர்கள் மீது நாம் (கல்) மழையை பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட(அ)வர்களின் (மீது பொழிந்த கல்) மழை மகா கெட்டது.
Verse 174
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Tamil நிச்சயமாக இதிலோர் நல்ல அத்தாட்சியிருந்தது. எனினும், அவர்களில் பெரும்பாலான வர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
Verse 175
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Tamil (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
Verse 176
كَذَّبَ أَصْحَـٰبُ لْـَٔيْكَةِ ٱلْمُرْسَلِينَ
Transliteration kadhaba aṣḥābu al'aykati l-mur'salīna
Tamil (‘மத்யன்' என்னும் ஊரில்) சோலையில் வசித்திருந்தவர்களும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கினார்கள்.
Verse 177
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ
Transliteration idh qāla lahum shuʿaybun alā tattaqūna
Tamil ஷுஐப் (நபி) அவர்களை நோக்கி ‘‘ நீங்கள் (அல்லாஹ்வுக்கு அஞ்சி பாவத்திலிருந்து) விலகிக் கொள்ள வேண்டாமா?
Verse 178
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Transliteration innī lakum rasūlun amīnun
Tamil நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட நம்பிக்கையுள்ள ஒரு தூதனாக இருக்கிறேன்.
Verse 179
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Transliteration fa-ittaqū l-laha wa-aṭīʿūni
Tamil ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கீழ்ப்படியுங்கள்.
Verse 180
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wamā asalukum ʿalayhi min ajrin in ajriya illā ʿalā rabbi l-ʿālamīna
Tamil இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை. என் கூலி உலகத்தார்களின் இறைவனிடமே தவிர (வேறெவரிடமும்) இல்லை.”
Verse 181
۞ أَوْفُوا۟ ٱلْكَيْلَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُخْسِرِينَ
Transliteration awfū l-kayla walā takūnū mina l-mukh'sirīna
Tamil அளவையை முழுமையாக அளந்து கொடுங்கள். நீங்கள் (மக்களுக்கு) நஷ்டமிழைப்பவர்களாக இருக்க வேண்டாம்.
Verse 182
وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ
Transliteration wazinū bil-qis'ṭāsi l-mus'taqīmi
Tamil சரியான தராசில் நிறுத்துக் கொடுங்கள்.
Verse 183
وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
Transliteration walā tabkhasū l-nāsa ashyāahum walā taʿthaw fī l-arḍi muf'sidīna
Tamil மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய அவர்களுடைய பொருள்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் கடுமையாக விஷமம் (-கலகம்) செய்து கொண்டு அலையாதீர்கள்.
Verse 184
وَٱتَّقُوا۟ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلْجِبِلَّةَ ٱلْأَوَّلِينَ
Transliteration wa-ittaqū alladhī khalaqakum wal-jibilata l-awalīna
Tamil உங்களையும் உங்களுக்கு முன்னுள்ளோரையும் எவன் படைத்தானோ அவனுக்கு நீங்கள் பயப்படுங்கள்'' என்றும் கூறினார்.
Verse 185
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
Transliteration qālū innamā anta mina l-musaḥarīna
Tamil அதற்கவர்கள் கூறினர்: ‘‘ நீர் (எவராலோ) பெரும் சூனியம் செய்யப்பட்டு விட்டீர்.
Verse 186
وَمَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلْكَـٰذِبِينَ
Transliteration wamā anta illā basharun mith'lunā wa-in naẓunnuka lamina l-kādhibīna
Tamil நீர் நம்மைப்போன்ற மனிதரே தவிர வேறில்லை. நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே மதிக்கிறோம்.
Verse 187
فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ
Transliteration fa-asqiṭ ʿalaynā kisafan mina l-samāi in kunta mina l-ṣādiqīna
Tamil நீர் உண்மை சொல்பவராக இருந்தால் வானத்(தைப் பல துண்டாக்கி, அ)திலிருந்து சில துண்டுகளை நம்மீது விழவையுங்கள்'' (என்று கூறினார்கள்.)
Verse 188
قَالَ رَبِّىٓ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
Transliteration qāla rabbī aʿlamu bimā taʿmalūna
Tamil அதற்கவர் ‘‘ நீங்கள் செய்து கொண்டிருக்கும் (மோசமான) காரியத்தை என் இறைவன் நன்கறிவான்; (இதற்குரிய தண்டனையை உங்களுக்கு அவசியம் தருவான்)'' என்று கூறினார்.
Verse 189
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ ٱلظُّلَّةِ ۚ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Transliteration fakadhabūhu fa-akhadhahum ʿadhābu yawmi l-ẓulati innahu kāna ʿadhāba yawmin ʿaẓīmin
Tamil (எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.
Verse 190
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Transliteration inna fī dhālika laāyatan wamā kāna aktharuhum mu'minīna
Tamil நிச்சயமாக இதிலோர் அத்தாட்சி இருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
Verse 191
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Transliteration wa-inna rabbaka lahuwa l-ʿazīzu l-raḥīmu
Tamil (நபியே!) நிச்சயமாக உமது இறைவன்தான் (அனைவரையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன்.
Verse 192
وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration wa-innahu latanzīlu rabbi l-ʿālamīna
Tamil (நபியே!) நிச்சயமாக (குர்ஆன் ஷரீஃப் என்னும்) இது அகிலத்தாரின் இறைவனால்தான் அருளப்பட்டது.
Verse 193
نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلْأَمِينُ
Transliteration nazala bihi l-rūḥu l-amīnu
Tamil (இறை கட்டளைப் பிரகாரம்) ரூஹுல் அமீன் (நம்பிக்கைக்குரிய உயிர் என்னும் ஜிப்ரயீல்) இதை உமது உள்ளத்தில் இறக்கிவைத்தார்.
Verse 194
عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ ٱلْمُنذِرِينَ
Transliteration ʿalā qalbika litakūna mina l-mundhirīna
Tamil (மனிதர்களுக்கு) நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக,
Verse 195
بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِينٍ
Transliteration bilisānin ʿarabiyyin mubīnin
Tamil தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டுள்ளது).
Verse 196
وَإِنَّهُۥ لَفِى زُبُرِ ٱلْأَوَّلِينَ
Transliteration wa-innahu lafī zuburi l-awalīna
Tamil நிச்சயமாக இதைப் பற்றிய முன்னறிவிப்பு முன்னுள்ள வேதங்களிலும் இருக்கிறது.
Verse 197
أَوَلَمْ يَكُن لَّهُمْ ءَايَةً أَن يَعْلَمَهُۥ عُلَمَـٰٓؤُا۟ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Transliteration awalam yakun lahum āyatan an yaʿlamahu ʿulamāu banī is'rāīla
Tamil இஸ்ராயீலின் சந்ததியிலுள்ள கல்விமான்கள் இதை அறிந்திருப்பதே அவர்களுக்குப் போதுமான அத்தாட்சியல்லவா?
Verse 198
وَلَوْ نَزَّلْنَـٰهُ عَلَىٰ بَعْضِ ٱلْأَعْجَمِينَ
Transliteration walaw nazzalnāhu ʿalā baʿḍi l-aʿjamīna
Tamil (இவர்கள் விரும்புவதைப்போல அரபி அல்லாத) அஜமிகளில் ஒருவர்மீது (அவருடைய மொழியில்) இதை இறக்கிவைத்து,
Verse 199
فَقَرَأَهُۥ عَلَيْهِم مَّا كَانُوا۟ بِهِۦ مُؤْمِنِينَ
Transliteration faqara-ahu ʿalayhim mā kānū bihi mu'minīna
Tamil அவர் இதை இவர்களுக்கு ஓதிக் காண்பித்தால் இதை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
Verse 200
كَذَٰلِكَ سَلَكْنَـٰهُ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ
Transliteration kadhālika salaknāhu fī qulūbi l-muj'rimīna
Tamil அத்தகைய (கொடிய) நிராகரிப்பையே இக்குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் புகுத்தியிருக்கிறோம்.
Verse 201
لَا يُؤْمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ
Transliteration lā yu'minūna bihi ḥattā yarawū l-ʿadhāba l-alīma
Tamil ஆகவே, துன்புறுத்தும் வேதனையை இவர்கள் (தங்கள் கண்ணால்) காணும் வரை இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
Verse 202
فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
Transliteration fayatiyahum baghtatan wahum lā yashʿurūna
Tamil அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு திடுகூறாகவே (அந்நாள்) அவர்களை வந்தடையும்.
Verse 203
فَيَقُولُوا۟ هَلْ نَحْنُ مُنظَرُونَ
Transliteration fayaqūlū hal naḥnu munẓarūna
Tamil அச்சமயம் அவர்கள் ‘‘ எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?
Verse 204
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
Transliteration afabiʿadhābinā yastaʿjilūna
Tamil ‘‘ எங்களை வேதனை செய்யவா இவர்கள் அவசரப்படுகின்றனர்?'' என்று கூறுவார்கள்.
Verse 205
أَفَرَءَيْتَ إِن مَّتَّعْنَـٰهُمْ سِنِينَ
Transliteration afara-ayta in mattaʿnāhum sinīna
Tamil (நபியே!) நீர் கவனித்தீரா? நாம் இவர்களை (இவர்கள் விரும்புகிறவாறு) பல வருடங்கள் சுகமனுபவிக்க விட்டு வைத்திருந்தபோதிலும்,
Verse 206
ثُمَّ جَآءَهُم مَّا كَانُوا۟ يُوعَدُونَ
Transliteration thumma jāahum mā kānū yūʿadūna
Tamil பின்னர், அவர்கள் பயமுறுத்தப்பட்டுவந்த வேதனை அவர்களை வந்தடைந்தால்,
Verse 207
مَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يُمَتَّعُونَ
Transliteration mā aghnā ʿanhum mā kānū yumattaʿūna
Tamil அவர்கள் அனுபவித்த சுகபோகங்கள் ஒன்றுமே அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காதே!
Verse 208
وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
Transliteration wamā ahlaknā min qaryatin illā lahā mundhirūna
Tamil (உபதேசம் செய்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களை அனுப்பாத வரை எவ்வூராரையும் நாம் அழித்துவிடவில்லை.
Verse 209
ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَـٰلِمِينَ
Transliteration dhik'rā wamā kunnā ẓālimīna
Tamil (ஒரு தூதரை அனுப்பி, வேதனைப் பற்றி) ஞாபகமூட்டாது நாம் (எவரையும் அழித்து) அநியாயம் செய்பவர்களாக இருக்கவில்லை.
Verse 210
وَمَا تَنَزَّلَتْ بِهِ ٱلشَّيَـٰطِينُ
Transliteration wamā tanazzalat bihi l-shayāṭīnu
Tamil (இவர்கள் கூறுகிறவாறு) இ(வ்வேதத்)தை ஷைத்தான்கள் இறக்கவில்லை.
Verse 211
وَمَا يَنۢبَغِى لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ
Transliteration wamā yanbaghī lahum wamā yastaṭīʿūna
Tamil அது அவர்களுக்குத் தகுதியுமல்ல; (அதற்குரிய) சக்தியும் அவர்களிடம் இல்லை.
Verse 212
إِنَّهُمْ عَنِ ٱلسَّمْعِ لَمَعْزُولُونَ
Transliteration innahum ʿani l-samʿi lamaʿzūlūna
Tamil நிச்சயமாக அவர்கள் (இதை) காதால் கேட்பதிலிருந்தும் தடுக்கப் பட்டிருக்கின்றனர்.
Verse 213
فَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلْمُعَذَّبِينَ
Transliteration falā tadʿu maʿa l-lahi ilāhan ākhara fatakūna mina l-muʿadhabīna
Tamil ஆதலால், (நபியே!) நீர் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்காதீர். (அழைத்தால்) அதனால் நீர் வேதனைக்குள்ளாவீர்.
Verse 214
وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ
Transliteration wa-andhir ʿashīrataka l-aqrabīna
Tamil நீர் உமது நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.
Verse 215
وَٱخْفِضْ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Transliteration wa-ikh'fiḍ janāḥaka limani ittabaʿaka mina l-mu'minīna
Tamil உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களிடம் புஜம் தாழ்த்தி(ப் பணிவாக நடந்து)க் கொள்வீராக.
Verse 216
فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّى بَرِىٓءٌ مِّمَّا تَعْمَلُونَ
Transliteration fa-in ʿaṣawka faqul innī barīon mimmā taʿmalūna
Tamil ஆனால், அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால் ‘‘ நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றிலிருந்து விலகி விட்டேன்'' என்று கூறி,
Verse 217
وَتَوَكَّلْ عَلَى ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ
Transliteration watawakkal ʿalā l-ʿazīzi l-raḥīmi
Tamil கருணையாளன், அனைவரையும் மிகைத்தவன் (அல்லாஹ்) மீது நம்பிக்கை வைப்பீராக.
Verse 218
ٱلَّذِى يَرَىٰكَ حِينَ تَقُومُ
Transliteration alladhī yarāka ḥīna taqūmu
Tamil நீர் நின்று வணங்கும்போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்.
Verse 219
وَتَقَلُّبَكَ فِى ٱلسَّـٰجِدِينَ
Transliteration wataqallubaka fī l-sājidīna
Tamil சிரம் பணிந்து வணங்கக்கூடியவர்களுடன் சேர்ந்து நீர் அசைவதையும் அவன் பார்க்கிறான்.
Verse 220
إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
Transliteration innahu huwa l-samīʿu l-ʿalīmu
Tamil நிச்சயமாக அவன்தான் அனைத்தையும் நன்கு செவியுறுபவன், நன்கு அறிபவன்.
Verse 221
هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَـٰطِينُ
Transliteration hal unabbi-ukum ʿalā man tanazzalu l-shayāṭīnu
Tamil (நம்பிக்கையாளர்களே!) ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கவா?
Verse 222
تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
Transliteration tanazzalu ʿalā kulli affākin athīmin
Tamil பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
Verse 223
يُلْقُونَ ٱلسَّمْعَ وَأَكْثَرُهُمْ كَـٰذِبُونَ
Transliteration yul'qūna l-samʿa wa-aktharuhum kādhibūna
Tamil தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் அவர்களுக்குக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் (பெரும்) பொய்யர்களே!
Verse 224
وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ
Transliteration wal-shuʿarāu yattabiʿuhumu l-ghāwūna
Tamil கவிஞர்களை வழிகெட்டவர்கள்தான் பின்பற்றுகின்றனர்.
Verse 225
أَلَمْ تَرَ أَنَّهُمْ فِى كُلِّ وَادٍ يَهِيمُونَ
Transliteration alam tara annahum fī kulli wādin yahīmūna
Tamil நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகிறார்கள் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
Verse 226
وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
Transliteration wa-annahum yaqūlūna mā lā yafʿalūna
Tamil நிச்சயமாக அவர்கள், தாங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாக)க் கூறுகிறார்கள்.
Verse 227
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَذَكَرُوا۟ ٱللَّهَ كَثِيرًا وَٱنتَصَرُوا۟ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ ۗ وَسَيَعْلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ
Transliteration illā alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti wadhakarū l-laha kathīran wa-intaṣarū min baʿdi mā ẓulimū wasayaʿlamu alladhīna ẓalamū ayya munqalabin yanqalibūna
Tamil (ஆயினும்,) அவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து (பிறர் மூலம்) அநியாயத்திற்கு உள்ளானதன் பின்னர், பழி வாங்கினார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தான். பிறரை துன்புறுத்திய) அநியாயக்காரர்கள் தாங்கள் எங்கு திரும்பச் செல்ல வேண்டுமென்பதை அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்.
Read Surah Ash-Shu'ara in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.