MyDugsiStart learning

Surah Ya-Sin in Tamil: translation and audio

Surah 36 · يس · Ya Sin · 83 verses

Surah Ya-Sin verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Ya-Sin word by word in English.

Verse 1

يسٓ

Transliteration ya-seen

Tamil யா ஸீன்.

Verse 2

وَٱلْقُرْءَانِ ٱلْحَكِيمِ

Transliteration wal-qur'āni l-ḥakīmi

Tamil முற்றிலும் ஞானம் நிறைந்த இந்த குர்ஆன் மீது சத்தியமாக!

Verse 3

إِنَّكَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ

Transliteration innaka lamina l-mur'salīna

Tamil (நபியே!) நிச்சயமாக நீர் (நமது) தூதர்களில் ஒருவர்தான்.

Verse 4

عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ

Transliteration ʿalā ṣirāṭin mus'taqīmin

Tamil (நீர்) நேரான வழியில் இருக்கிறீர்.

Verse 5

تَنزِيلَ ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ

Transliteration tanzīla l-ʿazīzi l-raḥīmi

Tamil (இது) அனைவரையும் மிகைத்தவனும் மகா கருணையுடையவனுமான அல்லாஹ்வால் அருளப்பட்டது.

Verse 6

لِتُنذِرَ قَوْمًا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمْ فَهُمْ غَـٰفِلُونَ

Transliteration litundhira qawman mā undhira ābāuhum fahum ghāfilūna

Tamil (உமது) இந்த மக்களின் மூதாதைகளுக்கு (ஒரு தூதராலும்) எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி முற்றிலும்) கவலையற்று இருக்கின்றனர். ஆகவே, இவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக.

Verse 7

لَقَدْ حَقَّ ٱلْقَوْلُ عَلَىٰٓ أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ

Transliteration laqad ḥaqqa l-qawlu ʿalā aktharihim fahum lā yu'minūna

Tamil இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது (அவர்கள் நரகவாசிகள்தான் என்று இறைவனின்) கட்டளை நிச்சயமாக உறுதியாகி விட்டது. ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

Verse 8

إِنَّا جَعَلْنَا فِىٓ أَعْنَـٰقِهِمْ أَغْلَـٰلًا فَهِىَ إِلَى ٱلْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ

Transliteration innā jaʿalnā fī aʿnāqihim aghlālan fahiya ilā l-adhqāni fahum muq'maḥūna

Tamil நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மேல்வாய் கட்டைகள் வரை விலங்குச் சங்கிலிகளைப் போட்டுவிட்டோம். ஆதலால், அவர்களுடைய தலைகள் (குனிய முடியாதவாறு) நிமிர்ந்து விட்டன.

Verse 9

وَجَعَلْنَا مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَـٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ

Transliteration wajaʿalnā min bayni aydīhim saddan wamin khalfihim saddan fa-aghshaynāhum fahum lā yub'ṣirūna

Tamil அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதையும்) பார்க்க முடியாது.

Verse 10

وَسَوَآءٌ عَلَيْهِمْ ءَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ

Transliteration wasawāon ʿalayhim a-andhartahum am lam tundhir'hum lā yu'minūna

Tamil அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.

Verse 11

إِنَّمَا تُنذِرُ مَنِ ٱتَّبَعَ ٱلذِّكْرَ وَخَشِىَ ٱلرَّحْمَـٰنَ بِٱلْغَيْبِ ۖ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ

Transliteration innamā tundhiru mani ittabaʿa l-dhik'ra wakhashiya l-raḥmāna bil-ghaybi fabashir'hu bimaghfiratin wa-ajrin karīmin

Tamil நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர்களுக்குத்தான். ஆகவே, இவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக்கொண்டும் நீர் நற்செய்தி கூறுவீராக.

Verse 12

إِنَّا نَحْنُ نُحْىِ ٱلْمَوْتَىٰ وَنَكْتُبُ مَا قَدَّمُوا۟ وَءَاثَـٰرَهُمْ ۚ وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ فِىٓ إِمَامٍ مُّبِينٍ

Transliteration innā naḥnu nuḥ'yī l-mawtā wanaktubu mā qaddamū waāthārahum wakulla shayin aḥṣaynāhu fī imāmin mubīnin

Tamil நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகிறோம். இவை ஒவ்வொன்றையும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கிறோம்.

Verse 13

وَٱضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَـٰبَ ٱلْقَرْيَةِ إِذْ جَآءَهَا ٱلْمُرْسَلُونَ

Transliteration wa-iḍ'rib lahum mathalan aṣḥāba l-qaryati idh jāahā l-mur'salūna

Tamil (நபியே!) நம் தூதர்கள் சென்ற, ஓர் ஊர்வாசிகளை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுவீராக.

Verse 14

إِذْ أَرْسَلْنَآ إِلَيْهِمُ ٱثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوٓا۟ إِنَّآ إِلَيْكُم مُّرْسَلُونَ

Transliteration idh arsalnā ilayhimu ith'nayni fakadhabūhumā faʿazzaznā bithālithin faqālū innā ilaykum mur'salūna

Tamil நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பியபொழுது அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள். ஆகவே மூன்றாவது தூதரைக் கொண்டு (அவ்விருவருக்கும்) உதவி செய்தோம். ஆகவே, இவர்கள் (மூவரும் அவர்களை நோக்கி) ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்களாவோம்'' என்று கூறினார்கள்.

Verse 15

قَالُوا۟ مَآ أَنتُمْ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَمَآ أَنزَلَ ٱلرَّحْمَـٰنُ مِن شَىْءٍ إِنْ أَنتُمْ إِلَّا تَكْذِبُونَ

Transliteration qālū mā antum illā basharun mith'lunā wamā anzala l-raḥmānu min shayin in antum illā takdhibūna

Tamil அதற்கவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே! (தவிர இறைவனின் தூதர்களல்ல.) ரஹ்மான் (உங்கள் மீது வேதத்தில்) எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களே தவிர வேறில்லை'' என்று கூறினார்கள்.

Verse 16

قَالُوا۟ رَبُّنَا يَعْلَمُ إِنَّآ إِلَيْكُمْ لَمُرْسَلُونَ

Transliteration qālū rabbunā yaʿlamu innā ilaykum lamur'salūna

Tamil அதற்கவர்கள் ‘‘ நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தான் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்'' என்றனர்,

Verse 17

وَمَا عَلَيْنَآ إِلَّا ٱلْبَلَـٰغُ ٱلْمُبِينُ

Transliteration wamā ʿalaynā illā l-balāghu l-mubīnu

Tamil “எங்கள் தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதைத் தவிர (உங்களை நிர்ப்பந்திப்பது) எங்கள் மீது கடமையல்ல'' (என்றும் கூறினார்கள்.)

Verse 18

قَالُوٓا۟ إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ ۖ لَئِن لَّمْ تَنتَهُوا۟ لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٌ

Transliteration qālū innā taṭayyarnā bikum la-in lam tantahū lanarjumannakum walayamassannakum minnā ʿadhābun alīmun

Tamil அதற்கவர்கள் “நாங்கள் உங்கள் வருகையை நிச்சயமாக கெட்ட சகுனமாக நினைக்கிறோம். நீங்கள் (இதிலிருந்து) விலகிக் கொள்ளாவிடில் நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். மேலும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் வேதனையும் உங்களைப் பிடித்துக் கொள்ளும்'' என்று கூறினார்கள்.

Verse 19

قَالُوا۟ طَـٰٓئِرُكُم مَّعَكُمْ ۚ أَئِن ذُكِّرْتُم ۚ بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ

Transliteration qālū ṭāirukum maʿakum a-in dhukkir'tum bal antum qawmun mus'rifūna

Tamil அதற்கு (நம் தூதர்கள்) “உங்கள் கெட்ட சகுனம் உங்களிடம்தான் இருக்கிறது. உங்களுக்கு நல்லறிவைப் புகட்டியதற்காகவா? (எங்களைக் கெட்ட சகுனம் என்று கூறுகிறீர்கள்). அது சரியன்று; நீங்கள்தான் வரம்புமீறிய மக்கள்'' என்று கூறினார்கள்.

Verse 20

وَجَآءَ مِنْ أَقْصَا ٱلْمَدِينَةِ رَجُلٌ يَسْعَىٰ قَالَ يَـٰقَوْمِ ٱتَّبِعُوا۟ ٱلْمُرْسَلِينَ

Transliteration wajāa min aqṣā l-madīnati rajulun yasʿā qāla yāqawmi ittabiʿū l-mur'salīna

Tamil இதற்கிடையில் அப்பட்டிணத்தின் கடைக் கோடியிலிருந்து ‘(ஹபீபுந் நஜ்ஜார்' என்னும்) ஒரு மனிதர் விரைந்தோடி வந்து (அப்பட்டிணவாசிகளை நோக்கிக்) கூறியதாவது: “என் மக்களே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்.

Verse 21

ٱتَّبِعُوا۟ مَن لَّا يَسْـَٔلُكُمْ أَجْرًا وَهُم مُّهْتَدُونَ

Transliteration ittabiʿū man lā yasalukum ajran wahum muh'tadūna

Tamil உங்களிடம் ஒரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் (அவசியம்) பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி அடைந்தவர்கள்.

Verse 22

وَمَا لِىَ لَآ أَعْبُدُ ٱلَّذِى فَطَرَنِى وَإِلَيْهِ تُرْجَعُونَ

Transliteration wamā liya lā aʿbudu alladhī faṭaranī wa-ilayhi tur'jaʿūna

Tamil என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.''

Verse 23

ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدْنِ ٱلرَّحْمَـٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّى شَفَـٰعَتُهُمْ شَيْـًٔا وَلَا يُنقِذُونِ

Transliteration a-attakhidhu min dūnihi ālihatan in yurid'ni l-raḥmānu biḍurrin lā tugh'ni ʿannī shafāʿatuhum shayan walā yunqidhūni

Tamil அவனையன்றி, (மற்ற எதையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கொரு தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு எதையும் என்னை விட்டுத் தடுத்துவிடாது. (அதிலிருந்து) என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது.

Verse 24

إِنِّىٓ إِذًا لَّفِى ضَلَـٰلٍ مُّبِينٍ

Transliteration innī idhan lafī ḍalālin mubīnin

Tamil (அவன் ஒருவனையே நான் வணங்காவிட்டால்) நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன்.

Verse 25

إِنِّىٓ ءَامَنتُ بِرَبِّكُمْ فَٱسْمَعُونِ

Transliteration innī āmantu birabbikum fa-is'maʿūni

Tamil நிச்சயமாக நான் உங்கள் இறைவனையே நம்பிக்கை கொண்டிருக்கிறேன். (மற்றெவரையும் அல்ல.) ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்'' (என்று கூறினார்).

Verse 26

قِيلَ ٱدْخُلِ ٱلْجَنَّةَ ۖ قَالَ يَـٰلَيْتَ قَوْمِى يَعْلَمُونَ

Transliteration qīla ud'khuli l-janata qāla yālayta qawmī yaʿlamūna

Tamil (எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!'' எனக் கூறப்பட்டது.

Verse 27

بِمَا غَفَرَ لِى رَبِّى وَجَعَلَنِى مِنَ ٱلْمُكْرَمِينَ

Transliteration bimā ghafara lī rabbī wajaʿalanī mina l-muk'ramīna

Tamil (சொர்க்கத்தில் நுழைந்த) அவர் “என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என் மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்.

Verse 28

۞ وَمَآ أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِۦ مِنۢ بَعْدِهِۦ مِن جُندٍ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ

Transliteration wamā anzalnā ʿalā qawmihi min baʿdihi min jundin mina l-samāi wamā kunnā munzilīna

Tamil அ(வரைக் கொலை செய்த)தற்குப் பின்னர் அவருடைய மக்க(ளை அழிக்க அவர்)களுக்கு வானத்திலிருந்து ஒரு படையையும் நாம் இறக்கி வைக்கவில்லை; அவ்வாறு செய்ய அவசியம் ஏற்படவுமில்லை.

Verse 29

إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً فَإِذَا هُمْ خَـٰمِدُونَ

Transliteration in kānat illā ṣayḥatan wāḥidatan fa-idhā hum khāmidūna

Tamil ஒரே ஒரு சப்தம்தான் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் (அழிந்து) சாம்பலாகி விட்டார்கள்.

Verse 30

يَـٰحَسْرَةً عَلَى ٱلْعِبَادِ ۚ مَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

Transliteration yāḥasratan ʿalā l-ʿibādi mā yatīhim min rasūlin illā kānū bihi yastahziūna

Tamil அந்தோ! (என் அடியார்களே! என்) அடியார்களைப் பற்றிய துக்கமே! அவர்களிடம் நமது தூதர் எவர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை.

Verse 31

أَلَمْ يَرَوْا۟ كَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّنَ ٱلْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ

Transliteration alam yaraw kam ahlaknā qablahum mina l-qurūni annahum ilayhim lā yarjiʿūna

Tamil அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்து விட்டோம் என்பதையும் அ(ழிந்து போன)வர்கள் நிச்சயமாக அவர்களிடம் திரும்பி வரவேமாட்டார்கள் என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?

Verse 32

وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ

Transliteration wa-in kullun lammā jamīʿun ladaynā muḥ'ḍarūna

Tamil அவர்கள் அனைவரும் நிச்சயமாக நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.

Verse 33

وَءَايَةٌ لَّهُمُ ٱلْأَرْضُ ٱلْمَيْتَةُ أَحْيَيْنَـٰهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ

Transliteration waāyatun lahumu l-arḍu l-maytatu aḥyaynāhā wa-akhrajnā min'hā ḥabban famin'hu yakulūna

Tamil இறந்து (பொட்டலாகிக்) கிடக்கும் (அவர்கள் வசித்திருந்த) பூமியும் இவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதை நாமே (மழையைக் கொண்டு) உயிர்ப்பித்து அதிலிருந்து தானியங்களை வெளிப்படுத்துகிறோம். அவற்றை இவர்கள் புசிக்கிறார்கள்.

Verse 34

وَجَعَلْنَا فِيهَا جَنَّـٰتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَـٰبٍ وَفَجَّرْنَا فِيهَا مِنَ ٱلْعُيُونِ

Transliteration wajaʿalnā fīhā jannātin min nakhīlin wa-aʿnābin wafajjarnā fīhā mina l-ʿuyūni

Tamil மேலும், அதில் பேரீச்சை, திராட்சை சோலைகளை அமைத்து அதன் மத்தியில் நீரூற்றுக்களை பீறிட்டு ஓடச் செய்கிறோம்.

Verse 35

لِيَأْكُلُوا۟ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ ۖ أَفَلَا يَشْكُرُونَ

Transliteration liyakulū min thamarihi wamā ʿamilathu aydīhim afalā yashkurūna

Tamil இவர்கள் புசிப்பதற்காக கனி வர்க்கங்களை (நாம் உற்பத்தி செய்கின்றோமே தவிர) இவர்களுடைய கைகள் அதை செய்வதில்லை. (இதற்குக் கூட) இவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

Verse 36

سُبْحَـٰنَ ٱلَّذِى خَلَقَ ٱلْأَزْوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ

Transliteration sub'ḥāna alladhī khalaqa l-azwāja kullahā mimmā tunbitu l-arḍu wamin anfusihim wamimmā lā yaʿlamūna

Tamil இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரை) அறியாத மற்றவற்றையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன்.

Verse 37

وَءَايَةٌ لَّهُمُ ٱلَّيْلُ نَسْلَخُ مِنْهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظْلِمُونَ

Transliteration waāyatun lahumu al-laylu naslakhu min'hu l-nahāra fa-idhā hum muẓ'limūna

Tamil இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும். அதிலிருந்தே நாம் பகலை வெளிப்படுத்துகிறோம். இல்லையென்றால் இவர்கள் இருளில்தான் தங்கிவிடுவார்கள்.

Verse 38

وَٱلشَّمْسُ تَجْرِى لِمُسْتَقَرٍّ لَّهَا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ

Transliteration wal-shamsu tajrī limus'taqarrin lahā dhālika taqdīru l-ʿazīzi l-ʿalīmi

Tamil தன் வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது (அனைவரையும்) மிகைத்தவன் நன்கறிந்தவனுடைய அமைப்பாகும்.

Verse 39

وَٱلْقَمَرَ قَدَّرْنَـٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلْعُرْجُونِ ٱلْقَدِيمِ

Transliteration wal-qamara qaddarnāhu manāzila ḥattā ʿāda kal-ʿur'jūni l-qadīmi

Tamil (உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்.

Verse 40

لَا ٱلشَّمْسُ يَنۢبَغِى لَهَآ أَن تُدْرِكَ ٱلْقَمَرَ وَلَا ٱلَّيْلُ سَابِقُ ٱلنَّهَارِ ۚ وَكُلٌّ فِى فَلَكٍ يَسْبَحُونَ

Transliteration lā l-shamsu yanbaghī lahā an tud'rika l-qamara walā al-laylu sābiqu l-nahāri wakullun fī falakin yasbaḥūna

Tamil சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன் வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

Verse 41

وَءَايَةٌ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ

Transliteration waāyatun lahum annā ḥamalnā dhurriyyatahum fī l-ful'ki l-mashḥūni

Tamil கப்பல் நிறைய அவர்களுடைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.

Verse 42

وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِۦ مَا يَرْكَبُونَ

Transliteration wakhalaqnā lahum min mith'lihi mā yarkabūna

Tamil அவர்கள் ஏறிச் செல்ல அதைப்போன்ற (படகு போன்ற)வற்றையும் நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கிறோம்.

Verse 43

وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ

Transliteration wa-in nasha nugh'riq'hum falā ṣarīkha lahum walā hum yunqadhūna

Tamil நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்பவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.

Verse 44

إِلَّا رَحْمَةً مِّنَّا وَمَتَـٰعًا إِلَىٰ حِينٍ

Transliteration illā raḥmatan minnā wamatāʿan ilā ḥīnin

Tamil எனினும் நமது கருணையினாலும் சிறிது காலம் (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்).

Verse 45

وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُوا۟ مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

Transliteration wa-idhā qīla lahumu ittaqū mā bayna aydīkum wamā khalfakum laʿallakum tur'ḥamūna

Tamil “உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கருணையை நீங்கள் அடையலாம்'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை).

Verse 46

وَمَا تَأْتِيهِم مِّنْ ءَايَةٍ مِّنْ ءَايَـٰتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ

Transliteration wamā tatīhim min āyatin min āyāti rabbihim illā kānū ʿanhā muʿ'riḍīna

Tamil மேலும், அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எது வந்த போதிலும் அதை அவர்கள் புறக்கணிக்காது இருப்பதும் இல்லை.

Verse 47

وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا۟ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنُطْعِمُ مَن لَّوْ يَشَآءُ ٱللَّهُ أَطْعَمَهُۥٓ إِنْ أَنتُمْ إِلَّا فِى ضَلَـٰلٍ مُّبِينٍ

Transliteration wa-idhā qīla lahum anfiqū mimmā razaqakumu l-lahu qāla alladhīna kafarū lilladhīna āmanū anuṭ'ʿimu man law yashāu l-lahu aṭʿamahu in antum illā fī ḍalālin mubīnin

Tamil அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் “அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக்கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.

Verse 48

وَيَقُولُونَ مَتَىٰ هَـٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

Transliteration wayaqūlūna matā hādhā l-waʿdu in kuntum ṣādiqīna

Tamil மேலும், மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (எங்களுக்கு வருமென நீங்கள் கூறும்) “தண்டனை எப்பொழுது வரும்?'' என்றும் (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.

Verse 49

مَا يَنظُرُونَ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُونَ

Transliteration mā yanẓurūna illā ṣayḥatan wāḥidatan takhudhuhum wahum yakhiṣṣimūna

Tamil ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.

Verse 50

فَلَا يَسْتَطِيعُونَ تَوْصِيَةً وَلَآ إِلَىٰٓ أَهْلِهِمْ يَرْجِعُونَ

Transliteration falā yastaṭīʿūna tawṣiyatan walā ilā ahlihim yarjiʿūna

Tamil அந்நேரத்தில் அவர்கள் மரண சாஸனம் கூறவோ அல்லது தங்கள் குடும்பத்தாரிடம் செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்து விடுவார்கள்.)

Verse 51

وَنُفِخَ فِى ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلْأَجْدَاثِ إِلَىٰ رَبِّهِمْ يَنسِلُونَ

Transliteration wanufikha fī l-ṣūri fa-idhā hum mina l-ajdāthi ilā rabbihim yansilūna

Tamil (மறுமுறை) ‘ஸூர்' ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக ஓடி வருவார்கள்.

Verse 52

قَالُوا۟ يَـٰوَيْلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرْقَدِنَا ۜ ۗ هَـٰذَا مَا وَعَدَ ٱلرَّحْمَـٰنُ وَصَدَقَ ٱلْمُرْسَلُونَ

Transliteration qālū yāwaylanā man baʿathanā min marqadinā hādhā mā waʿada l-raḥmānu waṣadaqa l-mur'salūna

Tamil ‘‘எங்கள் துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேட்பார்கள். (அதற்கு வானவர்கள் அவர்களை நோக்கி) “ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்'' (என்று கூறுவார்கள்).

Verse 53

إِن كَانَتْ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً فَإِذَا هُمْ جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ

Transliteration in kānat illā ṣayḥatan wāḥidatan fa-idhā hum jamīʿun ladaynā muḥ'ḍarūna

Tamil அது ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது! அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் நம்மிடம் கொண்டுவரப்பட்டு விடுவார்கள்.

Verse 54

فَٱلْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْـًٔا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ

Transliteration fal-yawma lā tuẓ'lamu nafsun shayan walā tuj'zawna illā mā kuntum taʿmalūna

Tamil அந்நாளில் ஓர்ஆத்மா (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்படமாட்டாது. நீங்கள் செய்தவற்றுக்கே தவிர உங்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது.

Verse 55

إِنَّ أَصْحَـٰبَ ٱلْجَنَّةِ ٱلْيَوْمَ فِى شُغُلٍ فَـٰكِهُونَ

Transliteration inna aṣḥāba l-janati l-yawma fī shughulin fākihūna

Tamil அந்நாளில் நிச்சயமாக சொர்க்கவாசிகள் சந்தோஷமாக காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

Verse 56

هُمْ وَأَزْوَٰجُهُمْ فِى ظِلَـٰلٍ عَلَى ٱلْأَرَآئِكِ مُتَّكِـُٔونَ

Transliteration hum wa-azwājuhum fī ẓilālin ʿalā l-arāiki muttakiūna

Tamil அவர்களும் அவர்களுடைய மனைவிகளும் நிழல்களின் கீழ் கட்டில்களின் மேல் வெகு உல்லாசமாகச் சாய்ந்து (உட்கார்ந்து) கொண்டிருப்பார்கள்.

Verse 57

لَهُمْ فِيهَا فَـٰكِهَةٌ وَلَهُم مَّا يَدَّعُونَ

Transliteration lahum fīhā fākihatun walahum mā yaddaʿūna

Tamil அதில் அவர்களுக்குப் பலவகைக் கனிவர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு கிடைக்கும்.

Verse 58

سَلَـٰمٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ

Transliteration salāmun qawlan min rabbin raḥīmin

Tamil நிகரற்ற அன்புடைய இறைவனால் (இவர்களை நோக்கி) “ஸலாம் உண்டாவதாகுக!'' என்று கூறப்படும்.

Verse 59

وَٱمْتَـٰزُوا۟ ٱلْيَوْمَ أَيُّهَا ٱلْمُجْرِمُونَ

Transliteration wa-im'tāzū l-yawma ayyuhā l-muj'rimūna

Tamil (மற்ற பாவிகளை நோக்கி) “குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (நல்லவர்களிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்'' (என்று கூறப்படும்).

Verse 60

۞ أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَـٰبَنِىٓ ءَادَمَ أَن لَّا تَعْبُدُوا۟ ٱلشَّيْطَـٰنَ ۖ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

Transliteration alam aʿhad ilaykum yābanī ādama an lā taʿbudū l-shayṭāna innahu lakum ʿaduwwun mubīnun

Tamil ‘‘ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?

Verse 61

وَأَنِ ٱعْبُدُونِى ۚ هَـٰذَا صِرَٰطٌ مُّسْتَقِيمٌ

Transliteration wa-ani uʿ'budūnī hādhā ṣirāṭun mus'taqīmun

Tamil இன்னும், நீங்கள் என்னையே வணங்கவேண்டும். இதுதான் நேரான வழி (என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?)

Verse 62

وَلَقَدْ أَضَلَّ مِنكُمْ جِبِلًّا كَثِيرًا ۖ أَفَلَمْ تَكُونُوا۟ تَعْقِلُونَ

Transliteration walaqad aḍalla minkum jibillan kathīran afalam takūnū taʿqilūna

Tamil (அவ்வாறிருந்தும்) உங்களில் பெரும் தொகையினரை அவன் நிச்சயமாக வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

Verse 63

هَـٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ

Transliteration hādhihi jahannamu allatī kuntum tūʿadūna

Tamil உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இதுதான்.

Verse 64

ٱصْلَوْهَا ٱلْيَوْمَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

Transliteration iṣ'lawhā l-yawma bimā kuntum takfurūna

Tamil இதை நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இன்றைய தினம் இதில் நீங்கள் நுழைந்து விடுங்கள்'' (என்றும் கூறுவோம்).

Verse 65

ٱلْيَوْمَ نَخْتِمُ عَلَىٰٓ أَفْوَٰهِهِمْ وَتُكَلِّمُنَآ أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُم بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ

Transliteration al-yawma nakhtimu ʿalā afwāhihim watukallimunā aydīhim watashhadu arjuluhum bimā kānū yaksibūna

Tamil அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிடுவோம். அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும்.

Verse 66

وَلَوْ نَشَآءُ لَطَمَسْنَا عَلَىٰٓ أَعْيُنِهِمْ فَٱسْتَبَقُوا۟ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبْصِرُونَ

Transliteration walaw nashāu laṭamasnā ʿalā aʿyunihim fa-is'tabaqū l-ṣirāṭa fa-annā yub'ṣirūna

Tamil நாம் விரும்பினால் அவர்களுடைய கண்களின் பார்வையைப் போக்கிவிடுவோம். (அச்சமயம் இவர்கள் தப்பித்துக்கொள்ள) வழியைத் தேடி ஓடினால் (எதைத்தான்) எப்படி அவர்களால் பார்க்க முடியும்?

Verse 67

وَلَوْ نَشَآءُ لَمَسَخْنَـٰهُمْ عَلَىٰ مَكَانَتِهِمْ فَمَا ٱسْتَطَـٰعُوا۟ مُضِيًّا وَلَا يَرْجِعُونَ

Transliteration walaw nashāu lamasakhnāhum ʿalā makānatihim famā is'taṭāʿū muḍiyyan walā yarjiʿūna

Tamil நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது.

Verse 68

وَمَن نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِى ٱلْخَلْقِ ۖ أَفَلَا يَعْقِلُونَ

Transliteration waman nuʿammir'hu nunakkis'hu fī l-khalqi afalā yaʿqilūna

Tamil நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகிறோம். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Verse 69

وَمَا عَلَّمْنَـٰهُ ٱلشِّعْرَ وَمَا يَنۢبَغِى لَهُۥٓ ۚ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْءَانٌ مُّبِينٌ

Transliteration wamā ʿallamnāhu l-shiʿ'ra wamā yanbaghī lahu in huwa illā dhik'run waqur'ānun mubīnun

Tamil (நம் தூதராகிய) அவருக்கு நாம் கவி கூறக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதும் அல்ல; இது (நன்மை தீமைகளைத்) தெளிவாக்கக்கூடிய குர்ஆனும் நல்லுபதேசமும் தவிர வேறில்லை.

Verse 70

لِّيُنذِرَ مَن كَانَ حَيًّا وَيَحِقَّ ٱلْقَوْلُ عَلَى ٱلْكَـٰفِرِينَ

Transliteration liyundhira man kāna ḥayyan wayaḥiqqa l-qawlu ʿalā l-kāfirīna

Tamil உயிரோடு இருப்பவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (மரணித்தவர்களை போன்றுள்ள) நிராகரிப்பவர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாவதற்காகவும் (இதை நாம் இறக்கினோம்).

Verse 71

أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا خَلَقْنَا لَهُم مِّمَّا عَمِلَتْ أَيْدِينَآ أَنْعَـٰمًا فَهُمْ لَهَا مَـٰلِكُونَ

Transliteration awalam yaraw annā khalaqnā lahum mimmā ʿamilat aydīnā anʿāman fahum lahā mālikūna

Tamil நம் கரங்கள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக அவர்களுக்காக கால்நடைகளை நாம் படைத்திருக்கிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? இன்னும் அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.

Verse 72

وَذَلَّلْنَـٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوبُهُمْ وَمِنْهَا يَأْكُلُونَ

Transliteration wadhallalnāhā lahum famin'hā rakūbuhum wamin'hā yakulūna

Tamil அவற்றை அவர்களுக்குக் கீழ்ப்படியும்படிச் செய்து கொடுத்தோம். அவர்கள் (வாகனமாக) ஏறக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன; (அறுத்து) புசிக்கக்கூடியவையும் அவற்றில் இருக்கின்றன.

Verse 73

وَلَهُمْ فِيهَا مَنَـٰفِعُ وَمَشَارِبُ ۖ أَفَلَا يَشْكُرُونَ

Transliteration walahum fīhā manāfiʿu wamashāribu afalā yashkurūna

Tamil அவர்கள் குடிக்கக்கூடிய (பால் போன்ற)வையும் இன்னும் பல பயன்களும் அவற்றில் இருக்கின்றன. (இவற்றுக்கெல்லாம்) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

Verse 74

وَٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةً لَّعَلَّهُمْ يُنصَرُونَ

Transliteration wa-ittakhadhū min dūni l-lahi ālihatan laʿallahum yunṣarūna

Tamil எனினும், அல்லாஹ் அல்லாதவற்றாலும் தங்களுக்கு உதவி கிடைக்குமென்று அவற்றை அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்!

Verse 75

لَا يَسْتَطِيعُونَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُندٌ مُّحْضَرُونَ

Transliteration lā yastaṭīʿūna naṣrahum wahum lahum jundun muḥ'ḍarūna

Tamil அவற்றால் அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. ஆயினும், அவை இவர்களுக்கு (எதிரான) படையாகக் கொண்டுவரப்படும்.

Verse 76

فَلَا يَحْزُنكَ قَوْلُهُمْ ۘ إِنَّا نَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ

Transliteration falā yaḥzunka qawluhum innā naʿlamu mā yusirrūna wamā yuʿ'linūna

Tamil (நபியே! ‘நீர் பொய்யர்' என) அவர்கள் உம்மைப் பற்றிக் கூறுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம்.

Verse 77

أَوَلَمْ يَرَ ٱلْإِنسَـٰنُ أَنَّا خَلَقْنَـٰهُ مِن نُّطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ

Transliteration awalam yara l-insānu annā khalaqnāhu min nuṭ'fatin fa-idhā huwa khaṣīmun mubīnun

Tamil மனிதனை ஒரு துளி இந்திரியத்தால்தான் நாம் படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வில்லையா? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான எதிரியாகி (நமக்கு மாறுசெய்ய முற்பட்டு) விடுகிறான்.

Verse 78

وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِىَ خَلْقَهُۥ ۖ قَالَ مَن يُحْىِ ٱلْعِظَـٰمَ وَهِىَ رَمِيمٌ

Transliteration waḍaraba lanā mathalan wanasiya khalqahu qāla man yuḥ'yī l-ʿiẓāma wahiya ramīmun

Tamil (மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நம்மால் முடியாதென எண்ணிக் கொண்டு அவர்களில் ஒருவன்) ஓர் உதாரணத்தை நம்மிடம் எடுத்துக் காட்டுகிறான். அவன், தான் படைக்கப்பட்ட (விதத்)தை மறந்துவிட்டு “உக்கி மண்ணாகிப் போன இந்த எலும்பை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று (ஓர் எலும்பை எடுத்து அதை தூளாக்கி ஊதிவிட்டு) அவன் கேட்கிறான்.

Verse 79

قُلْ يُحْيِيهَا ٱلَّذِىٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٍ ۖ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ

Transliteration qul yuḥ'yīhā alladhī ansha-ahā awwala marratin wahuwa bikulli khalqin ʿalīmun

Tamil (நபியே!) அதற்கு நீர் கூறுவீராக: “முதல் முறையில் அதைப் படைத்தவன் எவனோ அவனே அதை உயிர்ப்பிப்பான். அவனோ எல்லா படைப்பினத்தையும் மிக அறிந்தவன்.

Verse 80

ٱلَّذِى جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلْأَخْضَرِ نَارًا فَإِذَآ أَنتُم مِّنْهُ تُوقِدُونَ

Transliteration alladhī jaʿala lakum mina l-shajari l-akhḍari nāran fa-idhā antum min'hu tūqidūna

Tamil அவனே பசுமையான மரத்திலிருந்து உங்களுக்கு நெருப்பை உண்டு பண்ணுகிறான். பின்னர், அதைக் கொண்டு நீங்கள் (உங்களுக்கு வேண்டிய நெருப்பை) மூட்டிக் கொள்கிறீர்கள்.

Verse 81

أَوَلَيْسَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يَخْلُقَ مِثْلَهُم ۚ بَلَىٰ وَهُوَ ٱلْخَلَّـٰقُ ٱلْعَلِيمُ

Transliteration awalaysa alladhī khalaqa l-samāwāti wal-arḍa biqādirin ʿalā an yakhluqa mith'lahum balā wahuwa l-khalāqu l-ʿalīmu

Tamil வானங்களையும் பூமியையும் படைத்தவன் (கேவலம்) அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? நிச்சயமாக அவனே மிகப்பெரிய படைப்பாளனும் நன்கறிந்தவனும் ஆவான்.

Verse 82

إِنَّمَآ أَمْرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيْـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ

Transliteration innamā amruhu idhā arāda shayan an yaqūla lahu kun fayakūnu

Tamil அவன் ஒரு பொருளை(ப் படைக்க) கருதினால் அதை ‘ஆகுக!' எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகிறது.

Verse 83

فَسُبْحَـٰنَ ٱلَّذِى بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَىْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ

Transliteration fasub'ḥāna alladhī biyadihi malakūtu kulli shayin wa-ilayhi tur'jaʿūna

Tamil சகலவற்றின் பேராட்சியும் சர்வ அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கிறதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.

Read Surah Ya-Sin in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.