Surah Al-Ghashiyah in Tamil: translation and audio
Surah 88 · الغاشية · The Overwhelming · 26 verses
Surah Al-Ghashiyah verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Ghashiyah word by word in English.
Verse 1
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ
Transliteration hal atāka ḥadīthu l-ghāshiyati
Tamil (நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா?
Verse 2
وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ
Transliteration wujūhun yawma-idhin khāshiʿatun
Tamil அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்.
Verse 3
عَامِلَةٌ نَّاصِبَةٌ
Transliteration ʿāmilatun nāṣibatun
Tamil அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை.
Verse 4
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
Transliteration taṣlā nāran ḥāmiyatan
Tamil கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும்.
Verse 5
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
Transliteration tus'qā min ʿaynin āniyatin
Tamil (அவை) கொதிக்கின்ற ஓர் ஊற்றிலிருந்து நீர் புகட்டப்படும்.
Verse 6
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
Transliteration laysa lahum ṭaʿāmun illā min ḍarīʿin
Tamil அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது.
Verse 7
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ
Transliteration lā yus'minu walā yugh'nī min jūʿin
Tamil (அது அவர்களுடைய உடலைக்) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது.
Verse 8
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
Transliteration wujūhun yawma-idhin nāʿimatun
Tamil எனினும், அந்நாளில் வேறு சில முகங்களோ, மிக்க செழிப்பாக இருக்கும்.
Verse 9
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
Transliteration lisaʿyihā rāḍiyatun
Tamil (இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடையும்.
Verse 10
فِى جَنَّةٍ عَالِيَةٍ
Transliteration fī jannatin ʿāliyatin
Tamil (அவை) மேலான சொர்க்கத்தில் இருக்கும்.
Verse 11
لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً
Transliteration lā tasmaʿu fīhā lāghiyatan
Tamil அதில் வீண் வார்த்தையை அவை செவியுறாது.
Verse 12
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
Transliteration fīhā ʿaynun jāriyatun
Tamil அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்ற (தெளிவான) ஒரு சுனையுண்டு.
Verse 13
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
Transliteration fīhā sururun marfūʿatun
Tamil அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு.
Verse 14
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
Transliteration wa-akwābun mawḍūʿatun
Tamil (பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும்.
Verse 15
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
Transliteration wanamāriqu maṣfūfatun
Tamil (இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.
Verse 16
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
Transliteration wazarābiyyu mabthūthatun
Tamil உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.)
Verse 17
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
Transliteration afalā yanẓurūna ilā l-ibili kayfa khuliqat
Tamil (நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
Verse 18
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
Transliteration wa-ilā l-samāi kayfa rufiʿat
Tamil (அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
Verse 19
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
Transliteration wa-ilā l-jibāli kayfa nuṣibat
Tamil (அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன?
Verse 20
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
Transliteration wa-ilā l-arḍi kayfa suṭiḥat
Tamil (அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?
Verse 21
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ
Transliteration fadhakkir innamā anta mudhakkirun
Tamil (ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்,
Verse 22
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
Transliteration lasta ʿalayhim bimuṣayṭirin
Tamil (அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீர் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல.
Verse 23
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
Transliteration illā man tawallā wakafara
Tamil எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கிறார்களோ,
Verse 24
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
Transliteration fayuʿadhibuhu l-lahu l-ʿadhāba l-akbara
Tamil அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான்.
Verse 25
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
Transliteration inna ilaynā iyābahum
Tamil நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்.
Verse 26
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
Transliteration thumma inna ʿalaynā ḥisābahum
Tamil நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்குக் கேட்பதும் நம் மீதுதான் கடமையாகும்.
Read Surah Al-Ghashiyah in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.