Surah At-Tur in Tamil: translation and audio
Surah 52 · الطور · The Mount · 49 verses
Surah At-Tur verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah At-Tur word by word in English.
Verse 1
وَٱلطُّورِ
Transliteration wal-ṭūri
Tamil தூர் (என்னும்) மலையின் மீது சத்தியமாக!
Verse 2
وَكِتَـٰبٍ مَّسْطُورٍ
Transliteration wakitābin masṭūrin
Tamil 3. விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!
Verse 3
فِى رَقٍّ مَّنشُورٍ
Transliteration fī raqqin manshūrin
Tamil 3. விரித்த ஏட்டில் வரி வரியாக எழுதப்பட்ட வேத நூலின் மீது சத்தியமாக!
Verse 4
وَٱلْبَيْتِ ٱلْمَعْمُورِ
Transliteration wal-bayti l-maʿmūri
Tamil பைத்துல் மஃமூர் (என்னும் ஆலயத்தின்) மீது சத்தியமாக!
Verse 5
وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ
Transliteration wal-saqfi l-marfūʿi
Tamil உயர்ந்த முகட்டின் மீது சத்தியமாக!
Verse 6
وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ
Transliteration wal-baḥri l-masjūri
Tamil (தொடர்ந்து) அலைகள் மோதிக் கொண்டிருக்கும் சமுத்திரத்தின் மீது சத்தியமாக!
Verse 7
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌ
Transliteration inna ʿadhāba rabbika lawāqiʿun
Tamil (நபியே!) நிச்சயமாக உமது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும்.
Verse 8
مَّا لَهُۥ مِن دَافِعٍ
Transliteration mā lahu min dāfiʿin
Tamil எவராலும் அதைத் தடுக்க முடியாது.
Verse 9
يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًا
Transliteration yawma tamūru l-samāu mawran
Tamil வானமும் துடிதுடித்துக் குமுறும் நாளில்,
Verse 10
وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًا
Transliteration watasīru l-jibālu sayran
Tamil மலைகள் (பெயர்ந்து) பறந்தோடும் (நாளில்)
Verse 11
فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Transliteration fawaylun yawma-idhin lil'mukadhibīna
Tamil (நபியே! உம்மைப்) பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
Verse 12
ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍ يَلْعَبُونَ
Transliteration alladhīna hum fī khawḍin yalʿabūna
Tamil அவர்கள் (வீண் விதண்டாவாதத்தில்) மூழ்கி விளையாடிக்கொண்டு இருக்கின்றனர்.
Verse 13
يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا
Transliteration yawma yudaʿʿūna ilā nāri jahannama daʿʿan
Tamil அவர்கள் நரகத்தின் பக்கம் (அடித்து) வெருட்டி ஓட்டப்படும் நாளில்,
Verse 14
هَـٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ
Transliteration hādhihi l-nāru allatī kuntum bihā tukadhibūna
Tamil (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக நெருப்பு இதுதான்'' என்று கூறப்படும்.
Verse 15
أَفَسِحْرٌ هَـٰذَآ أَمْ أَنتُمْ لَا تُبْصِرُونَ
Transliteration afasiḥ'run hādhā am antum lā tub'ṣirūna
Tamil இது வெறும் சூனியம்தானா? அல்லது, இதை நீங்கள் (உங்கள் கண்ணால்) பார்க்கவில்லையா?
Verse 16
ٱصْلَوْهَا فَٱصْبِرُوٓا۟ أَوْ لَا تَصْبِرُوا۟ سَوَآءٌ عَلَيْكُمْ ۖ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ
Transliteration iṣ'lawhā fa-iṣ'birū aw lā taṣbirū sawāon ʿalaykum innamā tuj'zawna mā kuntum taʿmalūna
Tamil அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறையாது.) நீங்கள் செய்தவற்றுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
Verse 17
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَنَعِيمٍ
Transliteration inna l-mutaqīna fī jannātin wanaʿīmin
Tamil அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக சொர்க்கங்களிலும் இன்பத்திலும் இருப்பார்கள்.
Verse 18
فَـٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ وَوَقَىٰهُمْ رَبُّهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ
Transliteration fākihīna bimā ātāhum rabbuhum wawaqāhum rabbuhum ʿadhāba l-jaḥīmi
Tamil தங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவற்றைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்.
Verse 19
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
Transliteration kulū wa-ish'rabū hanīan bimā kuntum taʿmalūna
Tamil (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவற்றை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்'' (என்றும் கூறப்படும்).
Verse 20
مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍ مَّصْفُوفَةٍ ۖ وَزَوَّجْنَـٰهُم بِحُورٍ عِينٍ
Transliteration muttakiīna ʿalā sururin maṣfūfatin wazawwajnāhum biḥūrin ʿīnin
Tamil வரிசையாகப் போடப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்(து படுத்)தவர்களாக இருப்பர். நாம் அவர்களுக்கு (‘ஹூருல்ஈன்' என்னும்) கண்ணழகிக(ளாகிய கன்னி)களை திருமணம் செய்து வைப்போம்.
Verse 21
وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَـٰنٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ أَلَتْنَـٰهُم مِّنْ عَمَلِهِم مِّن شَىْءٍ ۚ كُلُّ ٱمْرِئٍۭ بِمَا كَسَبَ رَهِينٌ
Transliteration wa-alladhīna āmanū wa-ittabaʿathum dhurriyyatuhum biīmānin alḥaqnā bihim dhurriyyatahum wamā alatnāhum min ʿamalihim min shayin kullu im'ri-in bimā kasaba rahīnun
Tamil எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கிறார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சொர்க்கத்தில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் எதையும் நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்த செயலுக்குப் பிணையாக இருக்கிறான்.
Verse 22
وَأَمْدَدْنَـٰهُم بِفَـٰكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ
Transliteration wa-amdadnāhum bifākihatin walaḥmin mimmā yashtahūna
Tamil அவர்கள் விரும்பிய (பற்பல வகை) கனிவர்க்கங்களையும், மாமிசங்களையும் அவர்களுக்கு (நாள்தோறும்) நாம் (ஏராளமாகக்) கொடுத்து வருவோம்.
Verse 23
يَتَنَـٰزَعُونَ فِيهَا كَأْسًا لَّا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ
Transliteration yatanāzaʿūna fīhā kasan lā laghwun fīhā walā tathīmun
Tamil ஒருவருடைய கிண்ணத்தை மற்றொருவர் (களிப்பால்) பிடுங்கிக் கொள்வார். (அதனால்) மனத்தாங்கலோ அல்லது மரியாதைக்குறைவோ ஏற்படாது.
Verse 24
۞ وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُونٌ
Transliteration wayaṭūfu ʿalayhim ghil'mānun lahum ka-annahum lu'lu-on maknūnun
Tamil அவர்களைச் சுற்றி (அவர்களுக்குப் பணி செய்ய எந்நேரமும்) சிறுவர்கள் பலர் சுற்றி வருவார்கள். அவர்கள் பதிந்த முத்துக்களைப் போல் (பிரகாசமாக) இருப்பார்கள்.
Verse 25
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ
Transliteration wa-aqbala baʿḍuhum ʿalā baʿḍin yatasāalūna
Tamil அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி (அமர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக) உரையாடுவார்கள்.
Verse 26
قَالُوٓا۟ إِنَّا كُنَّا قَبْلُ فِىٓ أَهْلِنَا مُشْفِقِينَ
Transliteration qālū innā kunnā qablu fī ahlinā mush'fiqīna
Tamil ‘‘இதற்கு முன்னர், நாம் நம் குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்துகொண்டே இருந்தோம்.
Verse 27
فَمَنَّ ٱللَّهُ عَلَيْنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ
Transliteration famanna l-lahu ʿalaynā wawaqānā ʿadhāba l-samūmi
Tamil ஆயினும், அல்லாஹ் நம்மீது அருள் புரிந்து கொடிய வேதனையிலிருந்து நம்மை(யும் நம் குடும்பத்தினரையும்) காப்பாற்றினான்.
Verse 28
إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُوهُ ۖ إِنَّهُۥ هُوَ ٱلْبَرُّ ٱلرَّحِيمُ
Transliteration innā kunnā min qablu nadʿūhu innahu huwa l-baru l-raḥīmu
Tamil இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன்தான் நன்மை செய்பவன், பேரன்புடையவன் ஆவான்'' என்று கூறுவார்கள்.
Verse 29
فَذَكِّرْ فَمَآ أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ
Transliteration fadhakkir famā anta biniʿ'mati rabbika bikāhinin walā majnūnin
Tamil (நபியே!) (நிராகரிப்பவர்களுக்கு வேதனையை) ஞாபகமூட்டிக் கொண்டே இருப்பீராக. உமது இறைவனின் அருளால் நீர் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல.
Verse 30
أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهِۦ رَيْبَ ٱلْمَنُونِ
Transliteration am yaqūlūna shāʿirun natarabbaṣu bihi rayba l-manūni
Tamil (உம்மைப் பற்றி) அவர்கள் (நீர்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (இக்கூற்றுக்குத் தண்டனையாக அவர்கள் மீது சம்பவிக்கக்கூடிய சோதனையின்) காலச்சக்கரத்தை எதிர்பார்த்திருப்போம்.
Verse 31
قُلْ تَرَبَّصُوا۟ فَإِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ
Transliteration qul tarabbaṣū fa-innī maʿakum mina l-mutarabiṣīna
Tamil ஆகவே (அவர்களை நோக்கி, அதை) ‘‘நீங்களும் எதிர்பார்த்திருங்கள். (என்ன நடக்கிறது என்பதை) நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கிறேன்'' என்று கூறுவீராக.
Verse 32
أَمْ تَأْمُرُهُمْ أَحْلَـٰمُهُم بِهَـٰذَآ ۚ أَمْ هُمْ قَوْمٌ طَاغُونَ
Transliteration am tamuruhum aḥlāmuhum bihādhā am hum qawmun ṭāghūna
Tamil (நபியே! உம்மை குறிகாரர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறும்படி) அவர்களுடைய அறிவுதான் அவர்களைத் தூண்டுகிறதா? அல்லது (இயற்கையாகவே) அவர்கள் விஷமிகள்தானா?
Verse 33
أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُۥ ۚ بَل لَّا يُؤْمِنُونَ
Transliteration am yaqūlūna taqawwalahu bal lā yu'minūna
Tamil அல்லது (நம் நபியாகிய) இவர் பொய்யாகவே அதைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? மாறாக (மனமுரண்டாகவே) இதை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
Verse 34
فَلْيَأْتُوا۟ بِحَدِيثٍ مِّثْلِهِۦٓ إِن كَانُوا۟ صَـٰدِقِينَ
Transliteration falyatū biḥadīthin mith'lihi in kānū ṣādiqīna
Tamil (நபியே! இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்து கொண்டு) இதைப்போன்ற ஒரு வாக்கியத்தைக்கொண்டு வரவும்.
Verse 35
أَمْ خُلِقُوا۟ مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ ٱلْخَـٰلِقُونَ
Transliteration am khuliqū min ghayri shayin am humu l-khāliqūna
Tamil அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா?
Verse 36
أَمْ خَلَقُوا۟ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ ۚ بَل لَّا يُوقِنُونَ
Transliteration am khalaqū l-samāwāti wal-arḍa bal lā yūqinūna
Tamil அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை.
Verse 37
أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَبِّكَ أَمْ هُمُ ٱلْمُصَۣيْطِرُونَ
Transliteration am ʿindahum khazāinu rabbika am humu l-muṣayṭirūna
Tamil அல்லது இவர்களிடம்தான் உமது இறைவனின் பொக்கிஷங்கள் அனைத்தும் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் அதைப் பங்கிடக்கூடிய அதிகாரிகளா?
Verse 38
أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ ۖ فَلْيَأْتِ مُسْتَمِعُهُم بِسُلْطَـٰنٍ مُّبِينٍ
Transliteration am lahum sullamun yastamiʿūna fīhi falyati mus'tamiʿuhum bisul'ṭānin mubīnin
Tamil அல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து, அதில் (ஏறிச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவற்றை) கேட்டு வந்தவர் (அதற்குத்) தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டுவரவும்.
Verse 39
أَمْ لَهُ ٱلْبَنَـٰتُ وَلَكُمُ ٱلْبَنُونَ
Transliteration am lahu l-banātu walakumu l-banūna
Tamil அல்லது (நீங்கள் கூறுகின்றபடி) அல்லாஹ்வுக்குப் பெண் சந்ததிகள்; உங்களுக்கு மட்டும் ஆண் சந்ததிகளா?
Verse 40
أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ
Transliteration am tasaluhum ajran fahum min maghramin muth'qalūna
Tamil அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்டு அந்தப் பளுவை அவர்கள் சுமக்க முடியாமல் இருக்கின்றனரா?
Verse 41
أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ
Transliteration am ʿindahumu l-ghaybu fahum yaktubūna
Tamil அல்லது இவர்களிடம் மறைவான விஷய(த்தின் ஞான)ம் இருக்கிறதா? இவர்கள் (அதை அல்லாஹ்வைப் போல்) எழுதி வருகின்றனரா?
Verse 42
أَمْ يُرِيدُونَ كَيْدًا ۖ فَٱلَّذِينَ كَفَرُوا۟ هُمُ ٱلْمَكِيدُونَ
Transliteration am yurīdūna kaydan fa-alladhīna kafarū humu l-makīdūna
Tamil அல்லது ஒரு சூழ்ச்சி செய்ய இவர்கள் கருதுகின்றனரா? அவ்வாறாயின், இந்நிராகரிப்பவர்கள்தான் சூழ்ச்சிக்குள்ளாவார்கள்.
Verse 43
أَمْ لَهُمْ إِلَـٰهٌ غَيْرُ ٱللَّهِ ۚ سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ
Transliteration am lahum ilāhun ghayru l-lahi sub'ḥāna l-lahi ʿammā yush'rikūna
Tamil அல்லது அல்லாஹ்வையன்றி இவர்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் இருக்கிறானா? இவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன்.
Verse 44
وَإِن يَرَوْا۟ كِسْفًا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطًا يَقُولُوا۟ سَحَابٌ مَّرْكُومٌ
Transliteration wa-in yaraw kis'fan mina l-samāi sāqiṭan yaqūlū saḥābun markūmun
Tamil வானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம்தான் என்றும், ஆனால் அது உறைந்து இறுகிவிட்டதென்றும் கூறுவார்கள்.
Verse 45
فَذَرْهُمْ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى فِيهِ يُصْعَقُونَ
Transliteration fadharhum ḥattā yulāqū yawmahumu alladhī fīhi yuṣ'ʿaqūna
Tamil (நபியே!) இவர்களுடைய அறிவு பறந்துவிடக்கூடிய நாளை இவர்கள் சந்திக்கும் வரை நீர் இவர்களை விட்டு விடுவீராக.
Verse 46
يَوْمَ لَا يُغْنِى عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـًٔا وَلَا هُمْ يُنصَرُونَ
Transliteration yawma lā yugh'nī ʿanhum kayduhum shayan walā hum yunṣarūna
Tamil அந்நாளில் இவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றுமே இவர்களுக்குப் பயனளிக்காது. எவர்களுடைய உதவியும் இவர்களுக்குக் கிடைக்காது.
Verse 47
وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ عَذَابًا دُونَ ذَٰلِكَ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
Transliteration wa-inna lilladhīna ẓalamū ʿadhāban dūna dhālika walākinna aktharahum lā yaʿlamūna
Tamil நிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையின்) வேதனைக்கு முன்னால் (இம்மையிலும்) வேதனை இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்துகொள்ள மாட்டார்கள்.
Verse 48
وَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا ۖ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ
Transliteration wa-iṣ'bir liḥuk'mi rabbika fa-innaka bi-aʿyuninā wasabbiḥ biḥamdi rabbika ḥīna taqūmu
Tamil (நபியே!) உமது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக நீர் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கிறீர். (ஆகவே, அவர்கள் உம்மைத் தங்கள் விருப்பப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீர் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உமது இறைவனின் புகழைக்கூறித் துதி செய்வீராக!
Verse 49
وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَـٰرَ ٱلنُّجُومِ
Transliteration wamina al-layli fasabbiḥ'hu wa-id'bāra l-nujūmi
Tamil இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனை துதி செய்வீராக!
Read Surah At-Tur in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.