MyDugsiStart learning

Surah Al-Haqqah in Tamil: translation and audio

Surah 69 · الحاقة · The Reality · 52 verses

Surah Al-Haqqah verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Haqqah word by word in English.

Verse 1

ٱلْحَآقَّةُ

Transliteration al-ḥāqatu

Tamil (நிகழக்கூடிய) உண்மை(ச் சம்பவம்)

Verse 2

مَا ٱلْحَآقَّةُ

Transliteration mā l-ḥāqatu

Tamil அந்த உண்மை(ச் சம்பவம்) எது?

Verse 3

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ

Transliteration wamā adrāka mā l-ḥāqatu

Tamil (நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீர் அறிவீரா?

Verse 4

كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ

Transliteration kadhabat thamūdu waʿādun bil-qāriʿati

Tamil ‘ஸமூத்' என்னும் மக்களும் ‘ஆத்' என்னும் மக்களும் (மரணித்தவர்களைத்) தட்டி எழுப்பு(ம் அச்சம்ப)வ(த்)தைப் பொய்யாக்கினர்.

Verse 5

فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ

Transliteration fa-ammā thamūdu fa-uh'likū bil-ṭāghiyati

Tamil ஆகவே, ‘ஸமூத்' மக்கள் பெரும் சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.

Verse 6

وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ

Transliteration wa-ammā ʿādun fa-uh'likū birīḥin ṣarṣarin ʿātiyatin

Tamil ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.

Verse 7

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَـٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ

Transliteration sakharahā ʿalayhim sabʿa layālin wathamāniyata ayyāmin ḥusūman fatarā l-qawma fīhā ṣarʿā ka-annahum aʿjāzu nakhlin khāwiyatin

Tamil ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்.

Verse 8

فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ

Transliteration fahal tarā lahum min bāqiyatin

Tamil (இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீர் காண்கிறீரா?

Verse 9

وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَـٰتُ بِٱلْخَاطِئَةِ

Transliteration wajāa fir'ʿawnu waman qablahu wal-mu'tafikātu bil-khāṭi-ati

Tamil ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள்.

Verse 10

فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً

Transliteration faʿaṣaw rasūla rabbihim fa-akhadhahum akhdhatan rābiyatan

Tamil இன்னும் அவர்கள், தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால், அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக்கொண்டான்.

Verse 11

إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَـٰكُمْ فِى ٱلْجَارِيَةِ

Transliteration innā lammā ṭaghā l-māu ḥamalnākum fī l-jāriyati

Tamil (நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில்) தண்ணீர் பெருக்கெடுத்தபோது, நிச்சயமாக நாம் உங்(கள் மூதாதை)களைக் கப்பலில் ஏற்றி (காப்பாற்றி)க் கொண்டோம்.

Verse 12

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ

Transliteration linajʿalahā lakum tadhkiratan wataʿiyahā udhunun wāʿiyatun

Tamil அதை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்).

Verse 13

فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ

Transliteration fa-idhā nufikha fī l-ṣūri nafkhatun wāḥidatun

Tamil (பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு,

Verse 14

وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً

Transliteration waḥumilati l-arḍu wal-jibālu fadukkatā dakkatan wāḥidatan

Tamil பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடொன்று மோதி பலமாக அடிக்கப்பட்டால்,

Verse 15

فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ

Transliteration fayawma-idhin waqaʿati l-wāqiʿatu

Tamil அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும்.

Verse 16

وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ

Transliteration wa-inshaqqati l-samāu fahiya yawma-idhin wāhiyatun

Tamil அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகி விடும்.

Verse 17

وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَـٰنِيَةٌ

Transliteration wal-malaku ʿalā arjāihā wayaḥmilu ʿarsha rabbika fawqahum yawma-idhin thamāniyatun

Tamil (நபியே!) வானவர்கள் அதன் கோடிகளிலிருப்பார்கள். மேலும், அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை, எட்டு வானவர்கள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள்.

Verse 18

يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ

Transliteration yawma-idhin tuʿ'raḍūna lā takhfā minkum khāfiyatun

Tamil (மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.

Verse 19

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَـٰبِيَهْ

Transliteration fa-ammā man ūtiya kitābahu biyamīnihi fayaqūlu hāumu iq'raū kitābiyah

Tamil எவருடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுகிறாரோ அவர் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்)கூறுவார்: ‘‘இதோ! என் ஏடு; இதை நீங்கள் படித்துப் பாருங்கள்,

Verse 20

إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَـٰقٍ حِسَابِيَهْ

Transliteration innī ẓanantu annī mulāqin ḥisābiyah

Tamil நிச்சயமாக நான் என் கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்.''

Verse 21

فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ

Transliteration fahuwa fī ʿīshatin rāḍiyatin

Tamil ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில்,

Verse 22

فِى جَنَّةٍ عَالِيَةٍ

Transliteration fī jannatin ʿāliyatin

Tamil மேலான சொர்க்கத்தில் இருப்பார்.

Verse 23

قُطُوفُهَا دَانِيَةٌ

Transliteration quṭūfuhā dāniyatun

Tamil அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும்.

Verse 24

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ

Transliteration kulū wa-ish'rabū hanīan bimā aslaftum fī l-ayāmi l-khāliyati

Tamil (இவர்களை நோக்கி) ‘‘சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, மிக்க தாராளமாக இவற்றைப் புசியுங்கள்! அருந்துங்கள்'' (என்று கூறப்படும்).

Verse 25

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَـٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَـٰبِيَهْ

Transliteration wa-ammā man ūtiya kitābahu bishimālihi fayaqūlu yālaytanī lam ūta kitābiyah

Tamil எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான்.

Verse 26

وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ

Transliteration walam adri mā ḥisābiyah

Tamil மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே!

Verse 27

يَـٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ

Transliteration yālaytahā kānati l-qāḍiyata

Tamil நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே!

Verse 28

مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ

Transliteration mā aghnā ʿannī māliyah

Tamil என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!

Verse 29

هَلَكَ عَنِّى سُلْطَـٰنِيَهْ

Transliteration halaka ʿannī sul'ṭāniyah

Tamil என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்).

Verse 30

خُذُوهُ فَغُلُّوهُ

Transliteration khudhūhu faghullūhu

Tamil (பின்னர் நாம்) ‘‘அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்;

Verse 31

ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ

Transliteration thumma l-jaḥīma ṣallūhu

Tamil அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும்,

Verse 32

ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ

Transliteration thumma fī sil'silatin dharʿuhā sabʿūna dhirāʿan fa-us'lukūhu

Tamil எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்'' என்றும் (கூறுவோம்).

Verse 33

إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ

Transliteration innahu kāna lā yu'minu bil-lahi l-ʿaẓīmi

Tamil நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கை கொள்ளவில்லை.

Verse 34

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

Transliteration walā yaḥuḍḍu ʿalā ṭaʿāmi l-mis'kīni

Tamil ஏழைகளுக்கு (தானும் உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை.

Verse 35

فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَـٰهُنَا حَمِيمٌ

Transliteration falaysa lahu l-yawma hāhunā ḥamīmun

Tamil ‘‘ஆகவே, இன்று அவனுக்கு (இங்கு) ஒரு நண்பனும் இல்லை.

Verse 36

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

Transliteration walā ṭaʿāmun illā min ghis'līnin

Tamil (புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை'' (என்றும் கூறப்படும்).

Verse 37

لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَـٰطِـُٔونَ

Transliteration lā yakuluhu illā l-khāṭiūna

Tamil அதைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள்.

Verse 38

فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ

Transliteration falā uq'simu bimā tub'ṣirūna

Tamil (மக்களே!) நீங்கள் பார்ப்பவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றுபவற்றின் மீதும்,)

Verse 39

وَمَا لَا تُبْصِرُونَ

Transliteration wamā lā tub'ṣirūna

Tamil நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (உங்கள் கண்களுக்குத் தோன்றாதவற்றின் மீதும்) சத்தியமாக!

Verse 40

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

Transliteration innahu laqawlu rasūlin karīmin

Tamil இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடியே) மிக்க கண்ணியமான ஒரு தூதரால் கூறப்பட்டதாகும்.

Verse 41

وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ

Transliteration wamā huwa biqawli shāʿirin qalīlan mā tu'minūna

Tamil இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.

Verse 42

وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

Transliteration walā biqawli kāhinin qalīlan mā tadhakkarūna

Tamil (இது) ஒரு குறிகாரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.

Verse 43

تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ

Transliteration tanzīlun min rabbi l-ʿālamīna

Tamil அகிலத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது.

Verse 44

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ

Transliteration walaw taqawwala ʿalaynā baʿḍa l-aqāwīli

Tamil ஒரு சில வார்த்தைகளை அவர் நம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறினாலும்,

Verse 45

لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ

Transliteration la-akhadhnā min'hu bil-yamīni

Tamil அவருடைய வலது கரத்தை நாம் (பலமாகப்) பிடித்துக் கொண்டு,

Verse 46

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ

Transliteration thumma laqaṭaʿnā min'hu l-watīna

Tamil பிறகு, அவருடைய உயிர் நாடியை நாம் தறித்து விடுவோம்.

Verse 47

فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَـٰجِزِينَ

Transliteration famā minkum min aḥadin ʿanhu ḥājizīna

Tamil உங்களில் எவருமே அவரை விட்டும் அதைத் தடுத்துவிட முடியாது.

Verse 48

وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ

Transliteration wa-innahu latadhkiratun lil'muttaqīna

Tamil நிச்சயமாக இது இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவே இருக்கிறது.

Verse 49

وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ

Transliteration wa-innā lanaʿlamu anna minkum mukadhibīna

Tamil (எனினும்,) உங்களில் அதைப் பொய்யாக்குகிறவர்களும் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

Verse 50

وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَـٰفِرِينَ

Transliteration wa-innahu laḥasratun ʿalā l-kāfirīna

Tamil நிச்சயமாக அது நிராகரிப்பவர்களுக்குத் துக்கத்தைத் தரக்கூடியதாகவே இருக்கிறது.

Verse 51

وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ

Transliteration wa-innahu laḥaqqu l-yaqīni

Tamil (எனினும்) நிச்சயமாக இது, ஒரு சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும்.

Verse 52

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

Transliteration fasabbiḥ bi-is'mi rabbika l-ʿaẓīmi

Tamil ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமது இறைவனின் திருப்பெயரை துதிசெய்து கொண்டிருப்பீராக!

Read Surah Al-Haqqah in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.