MyDugsiStart learning

Surah Al-Fajr in Tamil: translation and audio

Surah 89 · الفجر · The Dawn · 30 verses

Surah Al-Fajr verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Fajr word by word in English.

Verse 1

وَٱلْفَجْرِ

Transliteration wal-fajri

Tamil 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!

Verse 2

وَلَيَالٍ عَشْرٍ

Transliteration walayālin ʿashrin

Tamil 2. விடியற்காலையின் மீதும், சத்தியமாக! பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!

Verse 3

وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ

Transliteration wal-shafʿi wal-watri

Tamil ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!

Verse 4

وَٱلَّيْلِ إِذَا يَسْرِ

Transliteration wa-al-layli idhā yasri

Tamil நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).

Verse 5

هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ

Transliteration hal fī dhālika qasamun lidhī ḥij'rin

Tamil இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.

Verse 6

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

Transliteration alam tara kayfa faʿala rabbuka biʿādin

Tamil 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?

Verse 7

إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ

Transliteration irama dhāti l-ʿimādi

Tamil 7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?

Verse 8

ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَـٰدِ

Transliteration allatī lam yukh'laq mith'luhā fī l-bilādi

Tamil அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.

Verse 9

وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ

Transliteration wathamūda alladhīna jābū l-ṣakhra bil-wādi

Tamil இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.

Verse 10

وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ

Transliteration wafir'ʿawna dhī l-awtādi

Tamil இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?)

Verse 11

ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَـٰدِ

Transliteration alladhīna ṭaghaw fī l-bilādi

Tamil இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.

Verse 12

فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ

Transliteration fa-aktharū fīhā l-fasāda

Tamil (பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.

Verse 13

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ

Transliteration faṣabba ʿalayhim rabbuka sawṭa ʿadhābin

Tamil ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.

Verse 14

إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ

Transliteration inna rabbaka labil-mir'ṣādi

Tamil நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.

Verse 15

فَأَمَّا ٱلْإِنسَـٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ

Transliteration fa-ammā l-insānu idhā mā ib'talāhu rabbuhu fa-akramahu wanaʿʿamahu fayaqūlu rabbī akramani

Tamil ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.

Verse 16

وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَـٰنَنِ

Transliteration wa-ammā idhā mā ib'talāhu faqadara ʿalayhi riz'qahu fayaqūlu rabbī ahānani

Tamil ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.

Verse 17

كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ

Transliteration kallā bal lā tuk'rimūna l-yatīma

Tamil (விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.

Verse 18

وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

Transliteration walā taḥāḍḍūna ʿalā ṭaʿāmi l-mis'kīni

Tamil ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.

Verse 19

وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا

Transliteration watakulūna l-turātha aklan lamman

Tamil பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.

Verse 20

وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا

Transliteration watuḥibbūna l-māla ḥubban jamman

Tamil மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.

Verse 21

كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا

Transliteration kallā idhā dukkati l-arḍu dakkan dakkan

Tamil அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,

Verse 22

وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا

Transliteration wajāa rabbuka wal-malaku ṣaffan ṣaffan

Tamil உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.

Verse 23

وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ

Transliteration wajīa yawma-idhin bijahannama yawma-idhin yatadhakkaru l-insānu wa-annā lahu l-dhik'rā

Tamil அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?

Verse 24

يَقُولُ يَـٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى

Transliteration yaqūlu yālaytanī qaddamtu liḥayātī

Tamil ‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்.

Verse 25

فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ

Transliteration fayawma-idhin lā yuʿadhibu ʿadhābahu aḥadun

Tamil அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)

Verse 26

وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ

Transliteration walā yūthiqu wathāqahu aḥadun

Tamil (பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)

Verse 27

يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ

Transliteration yāayyatuhā l-nafsu l-muṭ'ma-inatu

Tamil (எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே!

Verse 28

ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً

Transliteration ir'jiʿī ilā rabbiki rāḍiyatan marḍiyyatan

Tamil நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)

Verse 29

فَٱدْخُلِى فِى عِبَـٰدِى

Transliteration fa-ud'khulī fī ʿibādī

Tamil ‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து,

Verse 30

وَٱدْخُلِى جَنَّتِى

Transliteration wa-ud'khulī jannatī

Tamil என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).

Read Surah Al-Fajr in another language

All languages

All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.

Learn it in MyDugsi

Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.