Surah Al-Inshiqaq in Tamil: translation and audio
Surah 84 · الإنشقاق · The Sundering · 25 verses
Surah Al-Inshiqaq verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Inshiqaq word by word in English.
Verse 1
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ
Transliteration idhā l-samāu inshaqqat
Tamil (உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,
Verse 2
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Transliteration wa-adhinat lirabbihā waḥuqqat
Tamil அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
Verse 3
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ
Transliteration wa-idhā l-arḍu muddat
Tamil மேலும், பூமி விரிக்கப்படும்போது,
Verse 4
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ
Transliteration wa-alqat mā fīhā watakhallat
Tamil மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,
Verse 5
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ
Transliteration wa-adhinat lirabbihā waḥuqqat
Tamil மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
Verse 6
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ
Transliteration yāayyuhā l-insānu innaka kādiḥun ilā rabbika kadḥan famulāqīhi
Tamil மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்.
Verse 7
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ
Transliteration fa-ammā man ūtiya kitābahu biyamīnihi
Tamil ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ,
Verse 8
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا
Transliteration fasawfa yuḥāsabu ḥisāban yasīran
Tamil அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
Verse 9
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا
Transliteration wayanqalibu ilā ahlihi masrūran
Tamil அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்.
Verse 10
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ
Transliteration wa-ammā man ūtiya kitābahu warāa ẓahrihi
Tamil எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,
Verse 11
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا
Transliteration fasawfa yadʿū thubūran
Tamil அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,
Verse 12
وَيَصْلَىٰ سَعِيرًا
Transliteration wayaṣlā saʿīran
Tamil நரகத்தில் நுழைவான்.
Verse 13
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا
Transliteration innahu kāna fī ahlihi masrūran
Tamil ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்.
Verse 14
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
Transliteration innahu ẓanna an lan yaḥūra
Tamil மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.
Verse 15
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا
Transliteration balā inna rabbahu kāna bihi baṣīran
Tamil அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
Verse 16
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ
Transliteration falā uq'simu bil-shafaqi
Tamil (மாலை நேர) செம்மேகத்தின் மீது சத்தியமாக!
Verse 17
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ
Transliteration wa-al-layli wamā wasaqa
Tamil இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக!)
Verse 18
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ
Transliteration wal-qamari idhā ittasaqa
Tamil பூரணச் சந்திரன் மீது சத்தியமாக!
Verse 19
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ
Transliteration latarkabunna ṭabaqan ʿan ṭabaqin
Tamil (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது.
Verse 20
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ
Transliteration famā lahum lā yu'minūna
Tamil ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை.
Verse 21
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩
Transliteration wa-idhā quri-a ʿalayhimu l-qur'ānu lā yasjudūna
Tamil அவர்களுக்கு இந்த குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.
Verse 22
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ
Transliteration bali alladhīna kafarū yukadhibūna
Tamil அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
Verse 23
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ
Transliteration wal-lahu aʿlamu bimā yūʿūna
Tamil எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்.
Verse 24
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
Transliteration fabashir'hum biʿadhābin alīmin
Tamil ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
Verse 25
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ
Transliteration illā alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti lahum ajrun ghayru mamnūnin
Tamil எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.
Read Surah Al-Inshiqaq in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.