Surah Al-Jathiyah in Tamil: translation and audio
Surah 45 · الجاثية · The Crouching · 37 verses
Surah Al-Jathiyah verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Al-Jathiyah word by word in English.
Verse 1
حمٓ
Transliteration hha-meem
Tamil 2. ஹா மீம். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் இறக்கப்பட்டது.
Verse 2
تَنزِيلُ ٱلْكِتَـٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ
Transliteration tanzīlu l-kitābi mina l-lahi l-ʿazīzi l-ḥakīmi
Tamil 2. ஹா மீம். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் இறக்கப்பட்டது.
Verse 3
إِنَّ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ لَـَٔايَـٰتٍ لِّلْمُؤْمِنِينَ
Transliteration inna fī l-samāwāti wal-arḍi laāyātin lil'mu'minīna
Tamil நம்பிக்கை கொண்டவர்களுக்கு, வானங்களிலும் பூமியிலும் நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Verse 4
وَفِى خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِن دَآبَّةٍ ءَايَـٰتٌ لِّقَوْمٍ يُوقِنُونَ
Transliteration wafī khalqikum wamā yabuthu min dābbatin āyātun liqawmin yūqinūna
Tamil உங்களைப் படைத்திருப்பதிலும், (பூமியில்) பல ஜீவராசிகளை(ப் பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருப்பதிலும், (நம்பிக்கையில்) உறுதியான (நல்ல) மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Verse 5
وَٱخْتِلَـٰفِ ٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَمَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلسَّمَآءِ مِن رِّزْقٍ فَأَحْيَا بِهِ ٱلْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَتَصْرِيفِ ٱلرِّيَـٰحِ ءَايَـٰتٌ لِّقَوْمٍ يَعْقِلُونَ
Transliteration wa-ikh'tilāfi al-layli wal-nahāri wamā anzala l-lahu mina l-samāi min riz'qin fa-aḥyā bihi l-arḍa baʿda mawtihā wataṣrīfi l-riyāḥi āyātun liqawmin yaʿqilūna
Tamil இரவு, பகல் மாறிமாறி வரும்படி அல்லாஹ் செய்திருப்பதிலும், வானத்திலிருந்து மழையை இறக்கி வைத்து, அதைக்கொண்டு (வறண்டு) இறந்துபோன பூமியை உயிர்ப்பிப்பதிலும், (பல திசைகளுக்கு) காற்றுகளை திருப்பி விடுவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
Verse 6
تِلْكَ ءَايَـٰتُ ٱللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِٱلْحَقِّ ۖ فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَ ٱللَّهِ وَءَايَـٰتِهِۦ يُؤْمِنُونَ
Transliteration til'ka āyātu l-lahi natlūhā ʿalayka bil-ḥaqi fabi-ayyi ḥadīthin baʿda l-lahi waāyātihi yu'minūna
Tamil (நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும். மெய்யாகவே உம் மீது நாம் இவற்றை ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ்வுக்கும் அவனுடைய வசனங்களுக்கும் பின்னர் இவர்கள் எவ்விஷயத்தைத்தான் நம்புவார்கள்?
Verse 7
وَيْلٌ لِّكُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
Transliteration waylun likulli affākin athīmin
Tamil (இவ்வாறு நிராகரித்துவிட்டுப் பொய்யான தெய்வங்களைக்) கற்பனையாகக் கூறும் பாவிகளுக்கெல்லாம் கேடுதான்!
Verse 8
يَسْمَعُ ءَايَـٰتِ ٱللَّهِ تُتْلَىٰ عَلَيْهِ ثُمَّ يُصِرُّ مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا ۖ فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ
Transliteration yasmaʿu āyāti l-lahi tut'lā ʿalayhi thumma yuṣirru mus'takbiran ka-an lam yasmaʿhā fabashir'hu biʿadhābin alīmin
Tamil அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டதை செவிமடுத்து விட்டு பின்னர், அதை செவிமடுக்காதவர்களைப்போல் கர்வம் கொண்டு (நிராகரிப்பின் மீதே) பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.
Verse 9
وَإِذَا عَلِمَ مِنْ ءَايَـٰتِنَا شَيْـًٔا ٱتَّخَذَهَا هُزُوًا ۚ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ عَذَابٌ مُّهِينٌ
Transliteration wa-idhā ʿalima min āyātinā shayan ittakhadhahā huzuwan ulāika lahum ʿadhābun muhīnun
Tamil நம் வசனங்களில் எதை அவர்கள் அறிந்த போதிலும், அதை அவர்கள் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.
Verse 10
مِّن وَرَآئِهِمْ جَهَنَّمُ ۖ وَلَا يُغْنِى عَنْهُم مَّا كَسَبُوا۟ شَيْـًٔا وَلَا مَا ٱتَّخَذُوا۟ مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ
Transliteration min warāihim jahannamu walā yugh'nī ʿanhum mā kasabū shayan walā mā ittakhadhū min dūni l-lahi awliyāa walahum ʿadhābun ʿaẓīmun
Tamil இவர்களுக்கு (இவர்கள் மரணித்த) பின்னால் நரகம்தான் இருக்கிறது. அவர்கள் சேகரித்திருப்பவையோ அல்லது தங்களுக்குப் பாதுகாப்பாளர்கள் என்று அவர்கள் எடுத்துக்கொண்ட அல்லாஹ் அல்லாதவையோ, அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
Verse 11
هَـٰذَا هُدًى ۖ وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَـٰتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِّن رِّجْزٍ أَلِيمٌ
Transliteration hādhā hudan wa-alladhīna kafarū biāyāti rabbihim lahum ʿadhābun min rij'zin alīmun
Tamil இவ்வேதம்தான் நேரான பாதை. ஆகவே, எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு மிக கடினமான துன்புறுத்தும் வேதனை உண்டு.
Verse 12
۞ ٱللَّهُ ٱلَّذِى سَخَّرَ لَكُمُ ٱلْبَحْرَ لِتَجْرِىَ ٱلْفُلْكُ فِيهِ بِأَمْرِهِۦ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
Transliteration al-lahu alladhī sakhara lakumu l-baḥra litajriya l-ful'ku fīhi bi-amrihi walitabtaghū min faḍlihi walaʿallakum tashkurūna
Tamil அல்லாஹ், கடலை உங்களுக்கு வசதியாக அமைத்திருக்கிறான். அவன் கட்டளையைக் கொண்டு (பல நாடுகளுக்குக்) கப்பலில் சென்று (அதன் மூலம்) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (அதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
Verse 13
وَسَخَّرَ لَكُم مَّا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ جَمِيعًا مِّنْهُ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
Transliteration wasakhara lakum mā fī l-samāwāti wamā fī l-arḍi jamīʿan min'hu inna fī dhālika laāyātin liqawmin yatafakkarūna
Tamil (அவ்வாறே) வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தையுமே அவன் தன் அருளால் உங்களு(டைய நன்மை)க்கு (உழைக்கும்படி) கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். கவனித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
Verse 14
قُل لِّلَّذِينَ ءَامَنُوا۟ يَغْفِرُوا۟ لِلَّذِينَ لَا يَرْجُونَ أَيَّامَ ٱللَّهِ لِيَجْزِىَ قَوْمًۢا بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
Transliteration qul lilladhīna āmanū yaghfirū lilladhīna lā yarjūna ayyāma l-lahi liyajziya qawman bimā kānū yaksibūna
Tamil (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறுவீராக: “அவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைகளை நம்பாத மக்களை மன்னித்து (அவர்கள் விஷயத்தை அல்லாஹ்விடமே விட்டு) விடுவார்களாக. (நன்மையோ, தீமையோ செய்யும்) மக்களுக்கு அவர்கள் செய்யும் செயலுக்குத் தக்க பலனை அவன் கொடுப்பான்.
Verse 15
مَنْ عَمِلَ صَـٰلِحًا فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ أَسَآءَ فَعَلَيْهَا ۖ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ
Transliteration man ʿamila ṣāliḥan falinafsihi waman asāa faʿalayhā thumma ilā rabbikum tur'jaʿūna
Tamil எவர் நன்மை செய்கிறாரோ அது அவருக்கே நன்று. எவன் தீமை செய்கிறானோ அது அவனுக்கே கேடாகும். பின்னர், நீங்கள் உங்கள் இறைவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்.
Verse 16
وَلَقَدْ ءَاتَيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱلْكِتَـٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ وَرَزَقْنَـٰهُم مِّنَ ٱلطَّيِّبَـٰتِ وَفَضَّلْنَـٰهُمْ عَلَى ٱلْعَـٰلَمِينَ
Transliteration walaqad ātaynā banī is'rāīla l-kitāba wal-ḥuk'ma wal-nubuwata warazaqnāhum mina l-ṭayibāti wafaḍḍalnāhum ʿalā l-ʿālamīna
Tamil நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தையும், (ஞானத்தையும்,) அதிகாரத்தையும், நபிப்பட்டத்தையும் கொடுத்து மேலான உணவுகளையும் கொடுத்தோம். மேலும், உலகத்தார் அனைவரிலும் அவர்களை மேன்மையாக்கி வைத்தோம்.
Verse 17
وَءَاتَيْنَـٰهُم بَيِّنَـٰتٍ مِّنَ ٱلْأَمْرِ ۖ فَمَا ٱخْتَلَفُوٓا۟ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ ۚ إِنَّ رَبَّكَ يَقْضِى بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
Transliteration waātaynāhum bayyinātin mina l-amri famā ikh'talafū illā min baʿdi mā jāahumu l-ʿil'mu baghyan baynahum inna rabbaka yaqḍī baynahum yawma l-qiyāmati fīmā kānū fīhi yakhtalifūna
Tamil மேலும், நம் கட்டளைகளைப் பற்றித் தெளிவான வசனங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையின் காரணமாக, அவர்களிடம் (வேத) ஞானம் வந்ததன் பின்னர், அவர்கள் தங்களுக்குள் (தர்க்கித்துக் கொண்டு) பிரிந்து விட்டனர். (நபியே!) நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் தர்க்கித்துக் கொண்டவற்றைப் பற்றி மறுமையில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.
Verse 18
ثُمَّ جَعَلْنَـٰكَ عَلَىٰ شَرِيعَةٍ مِّنَ ٱلْأَمْرِ فَٱتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَآءَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ
Transliteration thumma jaʿalnāka ʿalā sharīʿatin mina l-amri fa-ittabiʿ'hā walā tattabiʿ ahwāa alladhīna lā yaʿlamūna
Tamil பிறகு, (நபியே!) மார்க்கத்தின் நேரான ஒரு வழியில்தான் நாம் உம்மை ஆக்கியிருக்கிறோம். ஆகவே, அதையே நீர் பின்பற்றி நடப்பீராக! கல்வி ஞானமற்ற இந்த மக்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்.
Verse 19
إِنَّهُمْ لَن يُغْنُوا۟ عَنكَ مِنَ ٱللَّهِ شَيْـًٔا ۚ وَإِنَّ ٱلظَّـٰلِمِينَ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ ۖ وَٱللَّهُ وَلِىُّ ٱلْمُتَّقِينَ
Transliteration innahum lan yugh'nū ʿanka mina l-lahi shayan wa-inna l-ẓālimīna baʿḍuhum awliyāu baʿḍin wal-lahu waliyyu l-mutaqīna
Tamil நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்கு விரோதமாக உமக்கு ஒரு உதவியும் செய்துவிட முடியாது. நிச்சயமாக அநியாயக்காரர்கள் சிலர், (அவர்களில்) சிலருக்குத்தான் நண்பர்கள். (நம்பிக்கையாளர்களுக்கு அல்ல.) அல்லாஹ்தான் இறையச்சமுடையவர்களின் நண்பன் ஆவான்.
Verse 20
هَـٰذَا بَصَـٰٓئِرُ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةٌ لِّقَوْمٍ يُوقِنُونَ
Transliteration hādhā baṣāiru lilnnāsi wahudan waraḥmatun liqawmin yūqinūna
Tamil இது மனிதர்களுக்கு தெளிவான விளக்கமாகவும் நம்பக்கூடிய மக்களுக்கு நேரான வழியாகவும் அருளாகவும் இருக்கிறது.
Verse 21
أَمْ حَسِبَ ٱلَّذِينَ ٱجْتَرَحُوا۟ ٱلسَّيِّـَٔاتِ أَن نَّجْعَلَهُمْ كَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ سَوَآءً مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْ ۚ سَآءَ مَا يَحْكُمُونَ
Transliteration am ḥasiba alladhīna ij'taraḥū l-sayiāti an najʿalahum ka-alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti sawāan maḥyāhum wamamātuhum sāa mā yaḥkumūna
Tamil எவர்கள் பாவத்தைத் தேடிக் கொண்டார்களோ அவர்களை, நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்துவிடுவதும் சமமே. அவர்கள் (இதற்கு மாறாகச்) செய்து கொண்ட முடிவு மகா கெட்டது.
Verse 22
وَخَلَقَ ٱللَّهُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ وَلِتُجْزَىٰ كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
Transliteration wakhalaqa l-lahu l-samāwāti wal-arḍa bil-ḥaqi walituj'zā kullu nafsin bimā kasabat wahum lā yuẓ'lamūna
Tamil வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கிறான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவற்றின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
Verse 23
أَفَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَـٰهَهُۥ هَوَىٰهُ وَأَضَلَّهُ ٱللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِۦ وَقَلْبِهِۦ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِۦ غِشَـٰوَةً فَمَن يَهْدِيهِ مِنۢ بَعْدِ ٱللَّهِ ۚ أَفَلَا تَذَكَّرُونَ
Transliteration afara-ayta mani ittakhadha ilāhahu hawāhu wa-aḍallahu l-lahu ʿalā ʿil'min wakhatama ʿalā samʿihi waqalbihi wajaʿala ʿalā baṣarihi ghishāwatan faman yahdīhi min baʿdi l-lahi afalā tadhakkarūna
Tamil (நபியே!) தன் இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக் கொண்ட ஒருவனை நீர் கவனித்தீரா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டுவிட்டான். அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? நீங்கள் நல்லுணர்வு பெற வேண்டாமா?
Verse 24
وَقَالُوا۟ مَا هِىَ إِلَّا حَيَاتُنَا ٱلدُّنْيَا نَمُوتُ وَنَحْيَا وَمَا يُهْلِكُنَآ إِلَّا ٱلدَّهْرُ ۚ وَمَا لَهُم بِذَٰلِكَ مِنْ عِلْمٍ ۖ إِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ
Transliteration waqālū mā hiya illā ḥayātunā l-dun'yā namūtu wanaḥyā wamā yuh'likunā illā l-dahru wamā lahum bidhālika min ʿil'min in hum illā yaẓunnūna
Tamil ‘‘இவ்வுலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை'' என்றும், ‘‘(இதில்தான்) நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; பின்னர் இறந்து விடுகிறோம். காலத்தைத் தவிர (வேறு எதுவும்) நம்மை அழிப்பதில்லை'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதைப்பற்றி இவர்களுக்கு ஒரு ஞானமும் இல்லை. இவர்கள் வீண் சந்தேகத்தில் ஆழ்ந்திருப்போரைத் தவிர வேறில்லை.
Verse 25
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ ءَايَـٰتُنَا بَيِّنَـٰتٍ مَّا كَانَ حُجَّتَهُمْ إِلَّآ أَن قَالُوا۟ ٱئْتُوا۟ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
Transliteration wa-idhā tut'lā ʿalayhim āyātunā bayyinātin mā kāna ḥujjatahum illā an qālū i'tū biābāinā in kuntum ṣādiqīna
Tamil அவர்களுக்கு தெளிவான நமது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘மெய்யாகவே (மரணித்தவர்கள் உயிர்பெற்று எழும்புவார்கள் என்ற விஷயத்தில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (இறந்து போன) எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்துக்) கொண்டு வாருங்கள்'' என்று கூறுவதைத் தவிர, (வேறு) பதில் கூற அவர்களுக்கு முடிவதில்லை.
Verse 26
قُلِ ٱللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ لَا رَيْبَ فِيهِ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ
Transliteration quli l-lahu yuḥ'yīkum thumma yumītukum thumma yajmaʿukum ilā yawmi l-qiyāmati lā rayba fīhi walākinna akthara l-nāsi lā yaʿlamūna
Tamil (நபியே!) நீர் அவர்களை நோக்கி கூறுவீராக: ‘‘அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பித்தான்; (நானல்ல.) அவனே உங்களை மரணிக்கவைப்பான். பின்னர், மறுமை நாளில் (உயிர் கொடுத்து) உங்களை ஒன்று சேர்ப்பான். இதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்து கொள்வதில்லை.''
Verse 27
وَلِلَّهِ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَيَوْمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوْمَئِذٍ يَخْسَرُ ٱلْمُبْطِلُونَ
Transliteration walillahi mul'ku l-samāwāti wal-arḍi wayawma taqūmu l-sāʿatu yawma-idhin yakhsaru l-mub'ṭilūna
Tamil வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. விசாரணை நாள் வரும் அன்று (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்கள் அந்நாளில் நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பார்கள்.
Verse 28
وَتَرَىٰ كُلَّ أُمَّةٍ جَاثِيَةً ۚ كُلُّ أُمَّةٍ تُدْعَىٰٓ إِلَىٰ كِتَـٰبِهَا ٱلْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ
Transliteration watarā kulla ummatin jāthiyatan kullu ummatin tud'ʿā ilā kitābihā l-yawma tuj'zawna mā kuntum taʿmalūna
Tamil (நபியே! அந்நாளில்) ஒவ்வொரு வகுப்பாரும், முழந்தாளிட்டிருக்கக் காண்பீர். ஒவ்வொரு வகுப்பாரும் (விசாரணைக்காக) அவர்களுடைய (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படுவார்கள். (அவர்களை நோக்கி) ‘‘இன்றைய தினம் நீங்கள் உங்கள் செயலுக்குரிய கூலியை கொடுக்கப்படுவீர்கள்'' (என்றும்),
Verse 29
هَـٰذَا كِتَـٰبُنَا يَنطِقُ عَلَيْكُم بِٱلْحَقِّ ۚ إِنَّا كُنَّا نَسْتَنسِخُ مَا كُنتُمْ تَعْمَلُونَ
Transliteration hādhā kitābunā yanṭiqu ʿalaykum bil-ḥaqi innā kunnā nastansikhu mā kuntum taʿmalūna
Tamil ‘‘இது (உங்கள் செயலைப் பற்றிய) நமது (பதிவுப்) புத்தகம். இது உங்களைப் பற்றிய உண்மையையே கூறும். நிச்சயமாக நாம், நீங்கள் செய்தவற்றையெல்லாம் எழுதி வைத்திருக்கிறோம்'' (என்றும் கூறப்படும்).
Verse 30
فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَيُدْخِلُهُمْ رَبُّهُمْ فِى رَحْمَتِهِۦ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْمُبِينُ
Transliteration fa-ammā alladhīna āmanū waʿamilū l-ṣāliḥāti fayud'khiluhum rabbuhum fī raḥmatihi dhālika huwa l-fawzu l-mubīnu
Tamil எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களை, அவர்களுடைய இறைவன் தன் அருளில் புகுத்துவான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும்.
Verse 31
وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَفَلَمْ تَكُنْ ءَايَـٰتِى تُتْلَىٰ عَلَيْكُمْ فَٱسْتَكْبَرْتُمْ وَكُنتُمْ قَوْمًا مُّجْرِمِينَ
Transliteration wa-ammā alladhīna kafarū afalam takun āyātī tut'lā ʿalaykum fa-is'takbartum wakuntum qawman muj'rimīna
Tamil எவர்கள் (நம் வசனங்களை) நிராகரித்தார்களோ (அவர்களை நோக்கி) உங்களுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அச்சமயம் நீங்கள் பெருமைகொண்டு (அதைப் புறக்கணித்து) விட்டீர்கள். இன்னும் நீங்கள் குற்றவாளிகளாக இருந்தீர்கள்'' (என்றும் கூறப்படும்).
Verse 32
وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَٱلسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِى مَا ٱلسَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ
Transliteration wa-idhā qīla inna waʿda l-lahi ḥaqqun wal-sāʿatu lā rayba fīhā qul'tum mā nadrī mā l-sāʿatu in naẓunnu illā ẓannan wamā naḥnu bimus'tayqinīna
Tamil மேலும், ‘‘ நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது, மறுமை வருவதில் அறவே சந்தேகமில்லை'' என்று (உங்களுக்குக்) கூறப்பட்டால் அதற்கு, ‘‘மறுமை இன்னதென்றே நாங்கள் அறியோம். அது (வீணான) வெறும் எண்ணத்தைத் தவிர வேறில்லை என்றே எண்ணுகிறோம். அதை (மெய்யென்று) நாங்கள் நம்பவுமில்லை'' என்று நீங்கள் கூறினீர்கள் (அல்லவா?) என்று (அவர்களிடம்) கேட்கப்படும்.
Verse 33
وَبَدَا لَهُمْ سَيِّـَٔاتُ مَا عَمِلُوا۟ وَحَاقَ بِهِم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
Transliteration wabadā lahum sayyiātu mā ʿamilū waḥāqa bihim mā kānū bihi yastahziūna
Tamil அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்கள் அனைத்தும், அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தவை அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
Verse 34
وَقِيلَ ٱلْيَوْمَ نَنسَىٰكُمْ كَمَا نَسِيتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هَـٰذَا وَمَأْوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّـٰصِرِينَ
Transliteration waqīla l-yawma nansākum kamā nasītum liqāa yawmikum hādhā wamawākumu l-nāru wamā lakum min nāṣirīna
Tamil (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இந்நாளை சந்திப்பதை மறந்தவாறே, நாமும் இன்றைய தினம் உங்களை மறந்துவிட்டோம். உங்கள் தங்குமிடம் நரகம்தான். (இன்றைய தினம்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் யாருமில்லை'' என்றும் கூறப்படும்.
Verse 35
ذَٰلِكُم بِأَنَّكُمُ ٱتَّخَذْتُمْ ءَايَـٰتِ ٱللَّهِ هُزُوًا وَغَرَّتْكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۚ فَٱلْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ
Transliteration dhālikum bi-annakumu ittakhadhtum āyāti l-lahi huzuwan wagharratkumu l-ḥayatu l-dun'yā fal-yawma lā yukh'rajūna min'hā walā hum yus'taʿtabūna
Tamil இதன் காரணமாவது: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள். இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட்டது (என்றும் கூறப்படும்). இன்றைய தினம் நரகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படமாட்டார்கள். அவர்களுடைய மன்னிப்புக் கோரலும் அங்கீகரிக்கப்படாது.
Verse 36
فَلِلَّهِ ٱلْحَمْدُ رَبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَرَبِّ ٱلْأَرْضِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
Transliteration falillahi l-ḥamdu rabbi l-samāwāti warabbi l-arḍi rabbi l-ʿālamīna
Tamil வானங்களின் இறைவனும், பூமியின் இறைவனும், இன்னும் அகிலத்தார் அனைவரின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகும்.
Verse 37
وَلَهُ ٱلْكِبْرِيَآءُ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
Transliteration walahu l-kib'riyāu fī l-samāwāti wal-arḍi wahuwa l-ʿazīzu l-ḥakīmu
Tamil வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லா பெருமைகளும் அவனுக்கே சொந்தமானவை. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
Read Surah Al-Jathiyah in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.