Surah Qaf in Tamil: translation and audio
Surah 50 · ق · The Letter "Qaf" · 45 verses
Surah Qaf verse by verse: the Arabic with a recitation you can repeat, the transliteration, and the Tamil translation by Abdul Hameed Baqavi. For the meaning of every word, see Surah Qaf word by word in English.
Verse 1
قٓ ۚ وَٱلْقُرْءَانِ ٱلْمَجِيدِ
Transliteration qaf wal-qur'āni l-majīdi
Tamil காஃப். (நபியே!) மிக்க மேலான இந்த குர்ஆன் மீது சத்தியமாக! (நீர் நம்மால் அனுப்பப்பட்ட தூதர்தான்).
Verse 2
بَلْ عَجِبُوٓا۟ أَن جَآءَهُم مُّنذِرٌ مِّنْهُمْ فَقَالَ ٱلْكَـٰفِرُونَ هَـٰذَا شَىْءٌ عَجِيبٌ
Transliteration bal ʿajibū an jāahum mundhirun min'hum faqāla l-kāfirūna hādhā shayon ʿajībun
Tamil ஆயினும், அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் (-முஹம்மதாகிய நீர்) அவர்களில் இருந்தே (இறைத்தூதராக) அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டு, இந்நிராகரிப்பவர்கள் ‘‘இது மிக அற்புதமான விஷயமென்று'' கூறுகின்றனர்.
Verse 3
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ۖ ذَٰلِكَ رَجْعٌۢ بَعِيدٌ
Transliteration a-idhā mit'nā wakunnā turāban dhālika rajʿun baʿīdun
Tamil (மேலும், ‘‘இத்தூதர் கூறுகின்றபடி) நாம் இறந்து உக்கி மண்ணாகப் போனதன் பின்னரா (உயிர்கொடுத்து மீட்கப்படுவோம்?) இவ்வாறு மீளுவது வெகு தூரம். (அது நிகழப்போவதில்லை'' என்றும் கூறுகின்றனர்.)
Verse 4
قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ ٱلْأَرْضُ مِنْهُمْ ۖ وَعِندَنَا كِتَـٰبٌ حَفِيظٌۢ
Transliteration qad ʿalim'nā mā tanquṣu l-arḍu min'hum waʿindanā kitābun ḥafīẓun
Tamil (மரணித்த)பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் விரும்பிய நேரத்தில் மரணித்த அவர்களை உயிர் கொடுத்து எழுப்பிவிடுவோம்.) மேலும், (அவர்களின் செயல்களைப் பற்றிய) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடத்தில் இருக்கிறது. (அதில் ஒவ்வொன்றும் வரையப்பட்டுள்ளது.)
Verse 5
بَلْ كَذَّبُوا۟ بِٱلْحَقِّ لَمَّا جَآءَهُمْ فَهُمْ فِىٓ أَمْرٍ مَّرِيجٍ
Transliteration bal kadhabū bil-ḥaqi lammā jāahum fahum fī amrin marījin
Tamil இவ்வாறிருந்தும் அவர்களிடம் வந்த உண்மையான (வேதத்)தை அவர்கள் பொய்யாக்கி வெறும் குழப்பத்திற்குள்ளாகி விட்டனர்.
Verse 6
أَفَلَمْ يَنظُرُوٓا۟ إِلَى ٱلسَّمَآءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَـٰهَا وَزَيَّنَّـٰهَا وَمَا لَهَا مِن فُرُوجٍ
Transliteration afalam yanẓurū ilā l-samāi fawqahum kayfa banaynāhā wazayyannāhā wamā lahā min furūjin
Tamil தங்களுக்கு மேலிருக்கும் வானத்தை அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லையா? நாம் அதை எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பாக அமைத்து, அதை (நட்சத்திரங்களைக் கொண்டு) அலங்காரமாக்கி வைத்திருக்கிறோம். அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லை. (ஓட்டை உடைசலும் இல்லை!)
Verse 7
وَٱلْأَرْضَ مَدَدْنَـٰهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَٰسِىَ وَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍۭ بَهِيجٍ
Transliteration wal-arḍa madadnāhā wa-alqaynā fīhā rawāsiya wa-anbatnā fīhā min kulli zawjin bahījin
Tamil மேலும், நாமே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும் அமைத்து அழகான புற்பூண்டுகள் அனைத்தையும் (ஆண், பெண் கொண்ட) ஜோடி ஜோடியாக முளைப்பித்தோம்.
Verse 8
تَبْصِرَةً وَذِكْرَىٰ لِكُلِّ عَبْدٍ مُّنِيبٍ
Transliteration tabṣiratan wadhik'rā likulli ʿabdin munībin
Tamil (இது) நம்மை நோக்கி நிற்கும் எல்லா அடியார்களுக்கும் நல்ல உபதேசங்களாகவும் ஒரு படிப்பினையாகவும் (இருக்கிறது).
Verse 9
وَنَزَّلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءً مُّبَـٰرَكًا فَأَنۢبَتْنَا بِهِۦ جَنَّـٰتٍ وَحَبَّ ٱلْحَصِيدِ
Transliteration wanazzalnā mina l-samāi māan mubārakan fa-anbatnā bihi jannātin waḥabba l-ḥaṣīdi
Tamil மேகத்திலிருந்து மிக பாக்கியமுள்ள மழையை நாம் பொழியச் செய்து, அதைக்கொண்டு பல சோலைகளையும் (விவசாயிகள்) அறுவடை செய்யும் தானிய மணிகளையும் உற்பத்தி செய்கிறோம்.
Verse 10
وَٱلنَّخْلَ بَاسِقَـٰتٍ لَّهَا طَلْعٌ نَّضِيدٌ
Transliteration wal-nakhla bāsiqātin lahā ṭalʿun naḍīdun
Tamil அடுக்கடுக்காய் (கனிகள்) நிறைந்த குலைகளையுடைய நீண்டு வளரும் பேரீச்ச மரங்களையும் (முளைப்பிக்கச் செய்தோம்).
Verse 11
رِّزْقًا لِّلْعِبَادِ ۖ وَأَحْيَيْنَا بِهِۦ بَلْدَةً مَّيْتًا ۚ كَذَٰلِكَ ٱلْخُرُوجُ
Transliteration riz'qan lil'ʿibādi wa-aḥyaynā bihi baldatan maytan kadhālika l-khurūju
Tamil அதை (நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவற்றைக்கொண்டு இறந்த பூமியை நாம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே (மரணித்தவர்கள் சமாதிகளில் இருந்து) வெளியாகுவதும் ஏற்படும்.
Verse 12
كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَأَصْحَـٰبُ ٱلرَّسِّ وَثَمُودُ
Transliteration kadhabat qablahum qawmu nūḥin wa-aṣḥābu l-rasi wathamūdu
Tamil (இவற்றையெல்லாம்) இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்களும், ரஸ்ஸு (அகழு)டைய மக்களும், ஸமூத் என்னும் மக்களும் பொய்யாக்கினர்.
Verse 13
وَعَادٌ وَفِرْعَوْنُ وَإِخْوَٰنُ لُوطٍ
Transliteration waʿādun wafir'ʿawnu wa-ikh'wānu lūṭin
Tamil ஆது என்னும் மக்களும், ஃபிர்அவ்னும், லூத்துடைய சகோதரர்களும் (பொய்யாக்கினர்).
Verse 14
وَأَصْحَـٰبُ ٱلْأَيْكَةِ وَقَوْمُ تُبَّعٍ ۚ كُلٌّ كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ وَعِيدِ
Transliteration wa-aṣḥābu l-aykati waqawmu tubbaʿin kullun kadhaba l-rusula faḥaqqa waʿīdi
Tamil மேலும், தோப்பில் வசித்தவர்களும், ‘துப்பஉ' என்னும் மக்களும் (பொய்யாக்கினர்). இவர்கள் ஒவ்வொருவரும் (எனது) தூதர்களைப் பொய்யாக்கினர். ஆகவே, (அவர்களை அழிப்போமென்ற) எனது வாக்கு பூர்த்தியாயிற்று.
Verse 15
أَفَعَيِينَا بِٱلْخَلْقِ ٱلْأَوَّلِ ۚ بَلْ هُمْ فِى لَبْسٍ مِّنْ خَلْقٍ جَدِيدٍ
Transliteration afaʿayīnā bil-khalqi l-awali bal hum fī labsin min khalqin jadīdin
Tamil (படைப்புகள் அனைத்தையும்) முதல்முறை படைத்ததில் நாம் களைத்து விட்டோமா? (இவர்களை மறுமுறை படைப்பது நமக்குச் சிரமமெனக் கூறுவதற்கு!) எனினும், (மீண்டும் இவர்களை) புதிதாகப் படைக்கும் விஷயத்தில் இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர்.
Verse 16
وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِۦ نَفْسُهُۥ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ ٱلْوَرِيدِ
Transliteration walaqad khalaqnā l-insāna wanaʿlamu mā tuwaswisu bihi nafsuhu wanaḥnu aqrabu ilayhi min ḥabli l-warīdi
Tamil நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கிறோம்.
Verse 17
إِذْ يَتَلَقَّى ٱلْمُتَلَقِّيَانِ عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٌ
Transliteration idh yatalaqqā l-mutalaqiyāni ʿani l-yamīni waʿani l-shimāli qaʿīdun
Tamil வலது புறத்தில் ஒருவரும், இடது புறத்தில் ஒருவருமாக இருவர் (அவன் செய்யும் செயலைக்) குறிப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
Verse 18
مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
Transliteration mā yalfiẓu min qawlin illā ladayhi raqībun ʿatīdun
Tamil (மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது.)
Verse 19
وَجَآءَتْ سَكْرَةُ ٱلْمَوْتِ بِٱلْحَقِّ ۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ
Transliteration wajāat sakratu l-mawti bil-ḥaqi dhālika mā kunta min'hu taḥīdu
Tamil மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில் (அவனை நோக்கி) ‘‘நீ தப்பிவிடக் கருதியது இதுதான்'' (என்று கூறப்படும்.)
Verse 20
وَنُفِخَ فِى ٱلصُّورِ ۚ ذَٰلِكَ يَوْمُ ٱلْوَعِيدِ
Transliteration wanufikha fī l-ṣūri dhālika yawmu l-waʿīdi
Tamil எக்காளம் ஊதப்பட்டால் (அவனை நோக்கி ‘‘உனக்குப்) பயமுறுத்தப்பட்டு வந்த (விசாரணை) நாள் இதோ (வந்துவிட்டது)'' என்று கூறப்படும்.
Verse 21
وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآئِقٌ وَشَهِيدٌ
Transliteration wajāat kullu nafsin maʿahā sāiqun washahīdun
Tamil (அந்நாளில்) ஒவ்வொரு ஆத்மாவையும், அதன் சாட்சியுடன் ஒருவர் ஓட்டிக் கொண்டு வருவார்.
Verse 22
لَّقَدْ كُنتَ فِى غَفْلَةٍ مِّنْ هَـٰذَا فَكَشَفْنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلْيَوْمَ حَدِيدٌ
Transliteration laqad kunta fī ghaflatin min hādhā fakashafnā ʿanka ghiṭāaka fabaṣaruka l-yawma ḥadīdun
Tamil அவனை நோக்கி, ‘‘நிச்சயமாக நீ இதைப் பற்றிக் கவலையற்றிருந்தாய். உன் பார்வையை மறைத்துக் கொண்டிருந்த திரையை உன்னை விட்டும் நாம் நீக்கி விட்டோம். இன்றைய தினம் உன் பார்வை கூர்மையாயிருக்கிறது. (ஆகவே, நீ மறுத்துக் கொண்டிருந்ததை உன் கண் திறந்து பார்'' என்று கூறப்படும்.)
Verse 23
وَقَالَ قَرِينُهُۥ هَـٰذَا مَا لَدَىَّ عَتِيدٌ
Transliteration waqāla qarīnuhu hādhā mā ladayya ʿatīdun
Tamil (சாட்சி கூற) அவனுடன் வந்தவர் ‘‘இதோ (அவனுடைய பதிவேடு, அவனுடைய நடவடிக்கையின் குறிப்பு) என்னிடம் (தயாராக) இருக்கிறது'' என்று கூறுவார்.
Verse 24
أَلْقِيَا فِى جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٍ
Transliteration alqiyā fī jahannama kulla kaffārin ʿanīdin
Tamil (உடனே இரு காவலர்களை நோக்கி) ‘‘நிராகரித்துக் கொண்டிருந்த (ஷைத்தானையும்) ஒவ்வொரு வம்பனையும் நரகத்தில் தள்ளுங்கள்'' (என்று கூறப்படும்).
Verse 25
مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيبٍ
Transliteration mannāʿin lil'khayri muʿ'tadin murībin
Tamil (‘‘அவன்) நன்மையான காரியங்களைத் தடுத்துக்கொண்டு, (இந்நாளைச்) சந்தேகித்து வரம்பு மீறிக்கொண்டுமிருந்தான்'' என்றும்,
Verse 26
ٱلَّذِى جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَأَلْقِيَاهُ فِى ٱلْعَذَابِ ٱلشَّدِيدِ
Transliteration alladhī jaʿala maʿa l-lahi ilāhan ākhara fa-alqiyāhu fī l-ʿadhābi l-shadīdi
Tamil ‘‘இவன் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை ஏற்படுத்தினான் என்றும், ஆகவே, நீங்களிருவரும் இவனைக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள்'' (என்றும் கூறப்படும்).
Verse 27
۞ قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطْغَيْتُهُۥ وَلَـٰكِن كَانَ فِى ضَلَـٰلٍۭ بَعِيدٍ
Transliteration qāla qarīnuhu rabbanā mā aṭghaytuhu walākin kāna fī ḍalālin baʿīdin
Tamil (அச்சமயம்) இவனுடைய இணை பிரியாத சினேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நான் இவனை வழிகெடுக்கவில்லை. தானாகவே அவன் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டான்'' என்று கூறுவான்.
Verse 28
قَالَ لَا تَخْتَصِمُوا۟ لَدَىَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُم بِٱلْوَعِيدِ
Transliteration qāla lā takhtaṣimū ladayya waqad qaddamtu ilaykum bil-waʿīdi
Tamil (ஆகவே, இறைவன் அவர்களை நோக்கி,) ‘‘என் முன்பாக நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம். ஏற்கனவே (இதைப் பற்றி) உங்களுக்கு (எச்சரித்துப்) பயமுறுத்தியிருந்தேன்.
Verse 29
مَا يُبَدَّلُ ٱلْقَوْلُ لَدَىَّ وَمَآ أَنَا۠ بِظَلَّـٰمٍ لِّلْعَبِيدِ
Transliteration mā yubaddalu l-qawlu ladayya wamā anā biẓallāmin lil'ʿabīdi
Tamil என் கட்டளை மாற்றப்படுவதில்லை; நான் என் அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனல்ல'' என்றும் கூறுவான்.
Verse 30
يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ
Transliteration yawma naqūlu lijahannama hali im'talati wataqūlu hal min mazīdin
Tamil அந்நாளில் நரகத்தை நோக்கி, ‘‘உன் வயிறு நிறைந்துவிட்டதா?'' என்று நாம் கேட்போம். அதற்கு அது ‘‘இன்னும் ஏதும் இருக்கிறதா?'' என்று கேட்கும்.
Verse 31
وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
Transliteration wa-uz'lifati l-janatu lil'muttaqīna ghayra baʿīdin
Tamil (அந்நாளில்) இறையச்சமுடையவர்களுக்கு சொர்க்கம் மிக்க சமீபமாகக் கொண்டு வரப்படும்.
Verse 32
هَـٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ
Transliteration hādhā mā tūʿadūna likulli awwābin ḥafīẓin
Tamil ‘‘இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது'' (என்றும்,) ‘‘எப்பொழுதும் இறைவனையே நோக்கி இருந்து (இறைவனுடைய கட்டளைகளைப்) பேணி நடந்து கொண்ட அனைவருக்கும் இது கிடைக்கும்'' (என்றும்,)
Verse 33
مَّنْ خَشِىَ ٱلرَّحْمَـٰنَ بِٱلْغَيْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِيبٍ
Transliteration man khashiya l-raḥmāna bil-ghaybi wajāa biqalbin munībin
Tamil எவர்கள், மறைவிலும் ரஹ்மானுக்குப் பயந்து நடந்து (ரஹ்மானையே முற்றிலும்) நோக்கிய மனதுடன் வருகிறார்களோ...
Verse 34
ٱدْخُلُوهَا بِسَلَـٰمٍ ۖ ذَٰلِكَ يَوْمُ ٱلْخُلُودِ
Transliteration ud'khulūhā bisalāmin dhālika yawmu l-khulūdi
Tamil (அவர்களை நோக்கி,) ‘‘ஈடேற்றம் பெற்று நீங்கள் இதில் நுழைந்து விடுங்கள். இது நிரந்தரமான நாளாகும்'' (என்றும் கூறப்படும்).
Verse 35
لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ
Transliteration lahum mā yashāūna fīhā waladaynā mazīdun
Tamil அவர்கள் விரும்பியதெல்லாம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும். மேலும், நம்மிடமிருந்து (அவர்கள் கேட்காததும் இன்னும்) அதிகமாகக் கொடுக்கப்படும்.
Verse 36
وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَشَدُّ مِنْهُم بَطْشًا فَنَقَّبُوا۟ فِى ٱلْبِلَـٰدِ هَلْ مِن مَّحِيصٍ
Transliteration wakam ahlaknā qablahum min qarnin hum ashaddu min'hum baṭshan fanaqqabū fī l-bilādi hal min maḥīṣin
Tamil இவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் இவர்களைவிட மிக பலசாலிகளாக இருந்தார்கள். அவர்கள் (தப்பித்துக்கொள்ள) பல தேசங்களில் சுற்றித் திரிந்தார்கள். (அப்போது அவர்களுக்கு) தப்ப இடம் கிடைத்ததா? (இல்லை, கிடைக்காமல் அழிந்து விட்டனர்.)
Verse 37
إِنَّ فِى ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَن كَانَ لَهُۥ قَلْبٌ أَوْ أَلْقَى ٱلسَّمْعَ وَهُوَ شَهِيدٌ
Transliteration inna fī dhālika ladhik'rā liman kāna lahu qalbun aw alqā l-samʿa wahuwa shahīdun
Tamil எவருக்கு (பரிசுத்தமான) உள்ளமிருந்து, ஓர்மைப்பாடான மனதுடன் செவிசாய்க்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக இதில் நல்ல படிப்பினை இருக்கிறது.
Verse 38
وَلَقَدْ خَلَقْنَا ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ
Transliteration walaqad khalaqnā l-samāwāti wal-arḍa wamā baynahumā fī sittati ayyāmin wamā massanā min lughūbin
Tamil நிச்சயமாக நாம்தான் வானங்களையும், பூமியையும் அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாட்களில் படைத்தோம். அதனால் நமக்கு ஒரு களைப்பும் (சோர்வும்) ஏற்பட்டு விடவில்லை.
Verse 39
فَٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ ٱلشَّمْسِ وَقَبْلَ ٱلْغُرُوبِ
Transliteration fa-iṣ'bir ʿalā mā yaqūlūna wasabbiḥ biḥamdi rabbika qabla ṭulūʿi l-shamsi waqabla l-ghurūbi
Tamil (நபியே!) அவர்கள் (உம்மைக் குறை) கூறுவதைப் பற்றி (கவலைப்படாதீர்;) நீர் பொறுமையாக அதைச் சகித்துக் கொண்டிருந்து, சூரிய உதயத்திற்கும், அது மறைவதற்கும் முன்னர் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துவருவீராக!
Verse 40
وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَـٰرَ ٱلسُّجُودِ
Transliteration wamina al-layli fasabbiḥ'hu wa-adbāra l-sujūdi
Tamil இரவில் ஒரு பாகத்திலும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் அவனைத் துதி செய்வீராக!
Verse 41
وَٱسْتَمِعْ يَوْمَ يُنَادِ ٱلْمُنَادِ مِن مَّكَانٍ قَرِيبٍ
Transliteration wa-is'tamiʿ yawma yunādi l-munādi min makānin qarībin
Tamil (நபியே!) நீர் செவிமடுத்துக் கேட்பீராக. (சமாதிகளுக்கு) சமீபமான இடத்திலிருந்து (கொண்டு ‘‘மரணித்தவர்களே! எழும்புங்கள்'' என்று) அழைப்பவர் அழைக்கும் நாளில்,
Verse 42
يَوْمَ يَسْمَعُونَ ٱلصَّيْحَةَ بِٱلْحَقِّ ۚ ذَٰلِكَ يَوْمُ ٱلْخُرُوجِ
Transliteration yawma yasmaʿūna l-ṣayḥata bil-ḥaqi dhālika yawmu l-khurūji
Tamil (வானவர்கள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் அந்நாளில் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள்.
Verse 43
إِنَّا نَحْنُ نُحْىِۦ وَنُمِيتُ وَإِلَيْنَا ٱلْمَصِيرُ
Transliteration innā naḥnu nuḥ'yī wanumītu wa-ilaynā l-maṣīru
Tamil நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கிறோம்; நாம்தான் மரணிக்கச் செய்கிறோம்; நம்மிடமே அனைவரும் வரவேண்டியதிருக்கிறது.
Verse 44
يَوْمَ تَشَقَّقُ ٱلْأَرْضُ عَنْهُمْ سِرَاعًا ۚ ذَٰلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيرٌ
Transliteration yawma tashaqqaqu l-arḍu ʿanhum sirāʿan dhālika ḥashrun ʿalaynā yasīrun
Tamil (மரணித்தவர்களை மூடிக்கொண்டிருக்கும்) பூமி வெகு தீவிரமாக (வெடித்து) அவர்களை விட்டு விலகும் நாளை (நினைவு கூருவீராக). அதுதான் (விசாரணைக்காக அனைவரையும்) ஒன்று சேர்க்கும் நாள். இ(வ்வாறு செய்வ)து நமக்கு மிக்க எளிதானதே.
Verse 45
نَّحْنُ أَعْلَمُ بِمَا يَقُولُونَ ۖ وَمَآ أَنتَ عَلَيْهِم بِجَبَّارٍ ۖ فَذَكِّرْ بِٱلْقُرْءَانِ مَن يَخَافُ وَعِيدِ
Transliteration naḥnu aʿlamu bimā yaqūlūna wamā anta ʿalayhim bijabbārin fadhakkir bil-qur'āni man yakhāfu waʿīdi
Tamil (நபியே! உம்மைப் பற்றி) அவர்கள் கூறுவதை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவரல்ல. எனது வேதனையைப் பயப்படுபவர்களுக்கு இந்த குர்ஆனைக் கொண்டு நீர் நல்லுபதேசம் செய்வீராக!
Read Surah Qaf in another language
- English (word by word)
- Albanian
- Amazigh
- Amharic
- Assamese
- Azerbaijani
- Bambara
- Bangla
- Bosnian
- Bulgarian
- Chechen
- Chinese
- Czech
- Dari
- Dhivehi
- Dutch
- Finnish
- French
- German
- Gujarati
- Hausa
- Hebrew
- Hindi
- Indonesian
- Italian
- Japanese
- Kannada
- Kazakh
- Khmer
- Kinyarwanda
- Korean
- Kurdish
- Luganda
- Malay
- Malayalam
- Maranao
- Marathi
- Nepali
- Norwegian
- Oromo
- Pashto
- Persian
- Polish
- Portuguese
- Romanian
- Russian
- Sindhi
- Sinhala
- Somali
- Spanish
- Swahili
- Swedish
- Tagalog
- Tajik
- Tatar
- Telugu
- Thai
- Turkish
- Ukrainian
- Urdu
- Uyghur
- Uzbek
- Vietnamese
- Yao
- Yoruba
All 114 surahs in Tamil: the Qur’an in Tamil.
Tamil translation: Abdul Hameed Baqavi, from Quran.com. Transliteration: Quran.com. Recitation: Mishary Alafasy, from EveryAyah.com. MyDugsi is a learning aid, not a replacement for a qualified teacher.